காதலர் தினம் அடுத்த வாரம் புதன்கிழமை (14.02.2024) கொண்டாடப்பட உள்ளது. இந்த வாரம் காதலர் தின வாரம். நாளை (07.02.2024) ’ரோஸ் டே’ கொண்டாடப்படுகிறது. காதல் பரிசின் அடையாளாக இருப்பது ‘ரோஜா’. ரோஜா பூவை கண்டவுடன் தோணுவது ‘காதல்’ என்ற வார்த்தைகளாக கூட இருக்கலாம். அந்த அளவுக்கு காதலுக்கும் ரோஜாவும் தொடர்பு உண்டு.


சிவப்பு ரோஜா, இளஞ்சிவப்பு ரோஜா,வெள்ளை நிற ரோஜா,மஞ்சள் நிற ரோஜா உள்ளிட்ட பல வண்ணங்களில் ரோஜா பரிசாக கொடுக்கப்படும் நாளில் ‘ ரோஜா தினம்’ கொண்டாடப்படுகிறது. ரோஜா தினத்தன்று அன்பிக்குரியவர்களுக்கு விதவிதமான உணவுகளை செய்து கொடுக்கலம். உணவும் காதலின் மொழிதானே. ஸ்ட்ராபெர்ரி, வாழைப்பழம், ரோஜா உள்ளிட்ட பொருட்களை வைத்து சுவையான இனிப்புகளை செய்து கொடுக்கலாம்.


வாழைப்பழ சன்டே (Banana Sundae)


என்னென்ன தேவை?


வாழைப்பழம் - 1


வெனிலா ஐஸ்க்ரீம் - ஒரு ஸ்கூப்


சாக்லேட் ஐஸ்க்ரீம் - ஒரு ஸ்கூப்


ஸ்ட்ராபெர்ரி ஐஸ்க்ரீம் - ஒரு ஸ்கூப்


வால்நட், பாதாம், - சிறதளவு


செர்ரி- தேவையான அளவு


செய்முறை


ஒரு தட்டில் வாழைப்பழத்தை நீளவாக்கில் நடுவில் நறுக்கவும். வெனிலா, சாக்லெட்,ஸ்ட்ராபெர்ரி மூன்று ஐஸ்க்ரீம்களில் ஒரு ஸ்கூப் எடுத்து வைக்கவும். அதன் மீது சாக்லெட் சிரப், ஸ்ட்ராபெர்ரி சிரப் உள்ளிட்டவற்றை அதன் மீது டிரிசில் செய்யவும். இதில் வால்நட், பாதாம் உள்ளிட்டவற்றை நறுக்கி சேர்க்கவும். சுவையான வாழைப்பழ சன்டே ரெடி!


சாக்லெட் மூஸ் ( chocolate mousse)


சாக்லேட் மூஸ் கேக் என்பது மிகவும் சுவையாகவும், மென்மையாகவும் இருக்கும். விப்பிங் கிரீம், சாக்லேட், வென்னிலா எசன்ஸ், கோகோ பவுடர் இருந்தால் போதும். எளிதாக செய்து விடலாம்.


என்னென்ன தேவை?


முட்டை - 2


சர்க்கரை - ஒரு கப்


Whip Cream 


சாக்லெட் - ஒரு கப்


வெண்ணெய் - அரை கப்


செய்முறை


முட்டையில் வெள்ளை நிறத்தை தனியே உடைத்து எடுத்து, அதோடு சர்க்கரை சேர்த்து நன்றாக பீட் செய்யவும். நன்றாக பீட் செய்தவுடன் அது மென்மையாக தன்மையில் வரும். மஞ்சள் கருவை, ஃப்ரெஷ் க்ரீமை சேர்த்து நன்றாக பீட் செய்யவும். இதோடு, உருக்கிய டார்க் சாக்லெட் / சாக்லெட் சேர்த்து கலக்கவும். இந்த கலவையை சிறிய கப்களில் மாற்றி 5 மணி நேரம் ஃபிரிட்ஜில் வைத்து அதன் மீது சாக்லெட் துகளை சேர்த்து ஜாலியாக சாப்பிடலாம்.




மேலும் வாசிக்க..


Rose Day 2024: காதலின் சின்னம் ரோஜா! எந்த நிற ரோஜா எந்த உணர்வை வெளிப்படுத்தும்?