திருவாரூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தில் (Central University of Tamil Nadu) தோட்டக்கலை துறையில் உள்ள ’Guest Faculty’ பணியிடத்திற்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
பணி விவரம்
Guest Faculty
கல்வித் தகுதி:
இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க தோட்டக்கலை துறையில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். முனைவர் பட்டம் பெற்றிருக்க வேண்டும். NET தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
இதற்கு விண்ணப்பிக்க 55% மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு
இதற்கு விண்ணப்பிக்க 70 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும் என்று அறிவிப்பில் தெவிக்கப்பட்டுள்ளது.
மதிப்புத் தொகை
இந்தப் பணிக்கு க்ளாஸ் எடுக்கும் ஒரு பாடத்திற்கு ரூ.1,500 வழங்கப்படும். ரூ.50,000 மாத ஊதியமாக வழங்கப்படும். மேலும் இந்தப் பணி தற்காலிகமானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிப்பது எப்படி?
இதற்கு விண்ணப்பிக்க சுயவிவர குறிப்புடன் தேவையான ஆவணங்களின் நகல்களுடன் மின்னஞ்சல் முகவரி மூலம் விண்ணப்பிக்கலாம்.
இமெயில் - hodhorti@cutn.ac.in
விண்ணப்பிக்க கடைசி தேதி - 06.10.2023
இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு https://cutn.ac.in/wp-content/uploads/2023/09/Dept-of-Horticulture-Walk-in-Interview-Advertisement-for-Guest-Faculty_21092023.pdf - என்ற இணைப்பை பயன்படுத்தி காணலாம்.
அண்ணா பல்கலைக்கழக வேலைவாய்ப்பு
அண்ணா பல்கலைக்கழகத்தில் Research Associate பணியிடத்திற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பணி விவரம்:
Research Associate
பணியிடம்:
Madras Institute of Technology Campus
கல்வித் தகுதி:
இதற்கு விண்ணப்பிக்க அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் அறிவியல், பொறியியல் அல்லது பி.டெக். படிப்பில் இளங்கலை அல்லது முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். B. E / M.E / M.Tech Mechanical / Automobile படித்திருக்க வேண்டும்.
முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். (75% மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.)
மற்ற படிப்புகளுக்கு தேவையான துறையில் முதுகலை படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
இந்தப் பணியிடம் முற்றிலும் தற்காலிகமானது. ஆறு மாதங்களுக்கு பிறகு நீட்டிக்கப்படலாம் என அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ECE, EEE, Instrumentation, Electronics உள்ளிட்ட பிரிவுகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ஊக்கத் தொகை:
இதற்கு மாத ஊதியமாக ரூ.32,000 வழங்கப்படும்.
பணி காலம்:
மூன்றாண்டுகள்
வயது வரம்பு விவரம்
இதற்கு விண்ணப்பிக்க 31.07.2023 -ன் படி 35 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை?
நேர்காணல் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். தேர்வு செய்யப்படுவர்களுக்கு நேர்காணல் அழைப்பு இ-மெயில் மூலம் தகவல் தெரிவிக்கப்படும் என்று அறிவிப்பில்
எப்படி விண்ணப்பிக்கலாம்?
விண்ணப்ப படிவத்தை அஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும்.
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி
The Director,
CEAT, Department of Automobile Engineering,
Madras Institute of Technology, Anna University,
Chromepet, Chennai – 600 044
இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு https://annauniv.edu/pdf/CEAT_Research_Associate.pdf - என்ற இணைப்பை க்ளிக் செய்து காணலாம்.
அண்ணா பல்கலைக்கழக வேலைவாய்ப்பு அறிவிப்புகள் பற்றி தெரிந்துகொள்ள https://www.annauniv.edu/events.php - என்ற இணைப்பை க்ளிக் செய்து காணவும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி - 29.09.2023