பழைய சாதம் என்றால் அனைவர்க்கும் பிடிக்காது. சிலருக்கு மிகவும் பிடித்த உணவாக பழைய சாதம் இருக்கும். ஒவ்வொருவருக்கும் ஒரு சுவை பிடிக்கும். இந்த பழைய சாதத்துல எவ்வளோ நன்மைகள் இருக்கிறது தெரியுமா ? இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க இனிமேல் இத வேண்டாம்னு சொல்ல மாட்டீங்க...
இன்று இருக்கு அவசர உலகத்தில், செரிமான பிரச்சனை, உணவு செரிக்காமல் இருப்பது, பசியின்மை, வயிறு புண்கள், அளவுக்கு அதிகமாக அல்லது அளவுக்கு குறைவாக சுரக்கும் அமிலங்கள் இப்படி பல்வேறு பிரச்சனைகள் வரும். வயிறு தான் உடலின் இரண்டாவது மூளை என்று அழைக்கப்பட்டாலும், அதை நாம் முழுமையாக பயன்படுத்துவதில்லை. அணைத்து உணவுகளையும் குப்பை போல் கொட்டி அதன் வேலையை செய்ய விடாமல் தடுத்து கொண்டு இருக்கிறது.
குடலில் நன்மை செய்யும் பாக்டீரியாக்கள் வளரும். இது செரிமான பிரச்சனையில் இருந்து சிறந்த தீர்வளிக்கும். ஆனால் பெரும்பாலும் எடுத்து கொள்ளும் குப்பை உணவுகளால் இந்த நல்ல பாக்டீரியா வளராமல் இருந்து விடுகிறது. இதனால் பல்வேறு செரிமான பிரச்சனைகள் வருகிறது. இந்த நல்லது செய்யும் பாக்டீரியா வளர்வதற்கு பழைய சாதம் உதவும். பழைய சாதத்தில் தயிர் சேர்த்து சாப்பிடுவது ப்ரோபையோட்டிக் சத்து நிறைந்து இருக்கிறது. இந்த ப்ரோபையோட்டிக் எடுத்து கொள்வதால், குடல் ஆரோக்கியம் மேம்படும்.
பழைய சாதம் , தயிர், சிறிய வெங்காயம் , தேவையான அளவு உப்பு, இதை எடுத்து கொள்வதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி வாழ்வியல் மருத்துவ ஆலோசகர் லூக் குடின்ஹோ அவர்கள் தனது சமூக வலைதள பக்கத்தில் பழைய சோறு செய்முறையை விளக்கி வீடியோ வெளியிட்டு உள்ளார். இந்த வீடியோவில் மண்பானையில் எப்படி பழைய சாதம் வைக்கப்படுகிறது என விளக்கம் கொடுத்து உள்ளார்.
மேலும் வயிறு மற்றும் குடல் ஆரோக்கியத்திற்கு ஊட்டச்சத்து மிக்க உணவுகளையும், ப்ரோபையோட்டிக் உணவுகளையும் பரிந்துரை செய்கிறார்.
ஒரு வாரத்திற்கு தினமும் காலை வெறும் வயிற்றில் இதை எடுத்து கொள்வதால், வயிறு புண்கள் குறையும், வயிறு எரிச்சல் , குடல் ஆரோக்கியம் பெரும், அமிலம் சரியாக சுரக்கும். மேலும், ஒரு நாளை புத்துணர்வுடன் வைக்கும். ஒரு வேலை உணவாக இதை எடுத்து கொள்ளலாம்.