நாம் தற்போது குளிர்க் காலத்தை அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். குளிர்க் காலத்தை இனிமையானதாக்க பல்வேறு உணவு வகைகள் நமக்கு கிடைக்கின்றன. எனினும், இவை அதிக கலோரிகள் கொண்டவையாக இருப்பதால், நம் உடலின் எடையைக் குறைக்கும் மிகச் சிறந்த உணவு வகைகளாக பெரும்பாலான பலகாரங்கள் இருப்பது இல்லை. எனினும், வட இந்திய உணவு வகைகளு பல்வேறு உணவுகள் உடல் நலத்திற்கு ஏற்றவையாக இருப்பதோடு, அதிக சுவை தருபவையாகவும் இருக்கின்றன. பசு நெய், உலர்ந்த பழங்கள், கொட்டைகள் முதலானவை குளிர்க் காலத்திற்கு ஏற்ற உணவு வகைகள். பசு நெய் கொழுப்பு நிறைந்தது என்ற போது, அது பல்வேறு ஊட்டச்சத்துகளை அளிப்பதால், நல்ல கொழுப்பு என்றே வகைப்படுத்தப்படுகிறது. மேலும், குளிர்க் காலத்தில் உடல் சூடாக இருப்பதற்கும் பசு நெய் பயன்படுகிறது.
வட இந்திய வீடுகளில் பசு நெய், பாதாம் பிசின் ஆகியவற்றைப் பயன்படுத்தி, பல்வேறு லட்டு வகைகள் குளிர்க் காலங்களில் பிரத்யேகமாக தயாரிக்கப்படுகின்றன. உண்பதற்கு அற்புதமாக இருக்கும் லட்டுகளில் பல்வேறு ஆரோக்கியமான தன்மைகளும் ஒளிந்திருக்கின்றன. எனினும், அளவுக்கு அதிகமாக உண்ணப்படும் எந்த உணவு வகையும் நமக்கு ஆபத்தைத் தரும் என்பதை நாம் மனதில் கொள்ள வேண்டும்.
குளிர்க் காலத்தில் நாம் உண்ண வேண்டிய லட்டு வகையின் செய்முறையை இங்கே கொடுத்துள்ளோம். இது சுவையைத் தருவது மட்டுமின்றி, புரதம் அதிகம் நிறைந்த உணவு வகையாகவும் இருக்கிறது. மேலும், வழக்கமான வெள்ளைச் சர்க்கரையைப் பயன்படுத்தாமல், இதில் வெல்லத்தைப் பயன்படுத்தியுள்ளோம். வெள்ளைச் சர்க்கரையில் கலோரிகள் இல்லை என்பதோடு, அது உடல் எடையைக் கூட்டுகிறது. வெல்லை அதே நேரம் சர்க்கரைக்கு மாற்றாக இருப்பதோடு ஆரோக்கியம் அளிப்பதாகவும் இருக்கிறது.
வீட்டிலேயே ஆரோக்கியமான லட்டு செய்வது எப்படி?
தேவையான பொருள்கள்:
அரை கப் - பாதாம்
அரை கப் - முந்திரி
அரை கப் - அரைத்த ஆளி விதை
அரை கப் - அரைத்த வெல்லம்
கால் கப் - பசு நெய்
1. மிக்ஸியிலோ, ப்ளேண்டரிலோ, பாதாமைப் போட்டு, முழுவதும் பொடியாகும் வரை அரைக்க வேண்டும். அதனைத் தனியாக பாத்திரம் ஒன்றில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
2. அடுத்ததாக முந்திரியையும் பாதாம் போலவே அரைத்து, தனியாக ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
3. மற்றொரு பாத்திரத்தில், நாம் ஏற்கனவே அரைத்த பாதாம், முந்திரி ஆகியவற்றுடன் அரைத்த ஆளி விதை, அரைத்த வெல்லம் ஆகியவற்றைச் சேர்த்து, அதனோடு பசு நெய்யையும் சேர்த்து, நன்கு பிசைய வேண்டும்.
4. தற்போது அதனை சிறிய பந்து வடிவத்தில் கையால் பிடித்து வைக்க வேண்டும்.
5. உலர்ந்து போனால் சிறிது நெய் சேர்க்கலாம். மற்றபடி அதிகம் நெய் சேர்க்காமல், லட்டுக்குத் தேவையான அளவில் அதனை உருட்ட வேண்டும்.
தற்போது நீங்கள் நினைத்தபடி லட்டுகள் தயார். இவற்றைக் காற்று புகாத பிளாஸ்டிக் கண்டெய்னரில் போட்டு வைக்கவும். லட்டுகளை அதிகமாக உண்ணாமல், அளவாக உண்பது ஆரோக்கியத்திற்கு நல்லது.