இன்று அக்டோபர் 14, 2022 - உலக முட்டை நாள்: இந்த நாளில் இந்த ரெசிப்பியை பகிர்கிறோம்.


வேகவைத்த முட்டையைப் பயன்படுத்தி ஸ்பைசியாகவும், ருசியாகவும் முட்டை கீமாவை செய்து சப்பாத்தி, பரோட்டா போன்றவற்றிற்கு side dish ஆக பரிமாறலாம்.


பொதுவாக சிறுவயதில் இருந்தே நமக்கு வேகவைத்த முட்டைகளைச் சாப்பிடுவதற்குக் கொடுப்பார்கள். ஆனால் அறியாத வயதில் சாப்பிட்ட நாம், சில நாள்களிலேயே முட்டையை ஆம்லெட், ஆஃப் பாயில் என சாப்பிடத்தொடங்குவோம். இதோடு மட்டுமின்றி முட்டைகளில் என்னென்ன விதவிதமாகவும், ஸ்பைசியாகவும் செய்து சாப்பிடலாம் என நினைக்கவும் ஆரம்பிப்போம்.. அப்படிப்பட்டவர்களா நீங்கள்? அப்படின்னா கொஞ்சம் முட்டை பொரியல் , பொடிமாஸ், கீமா போன்றவற்றை செய்ய டிரைப்பண்ணலாம்.


மேலும், நாம் சப்பாத்தியோ அல்லது பரோட்டோவை ஈஸியா செய்திடுவோம். ஆனால் அதுக்கு side dish ஆக விரைவாக என்ன செய்ய முடியும்? என்ற யோசனை அனைவருக்கும் இருக்கும். ஆனால் இனி அந்த கவலை வேண்டாம். வேகவைத்த முட்டைகளைப் பயன்படுத்தி அதனுடன் ஸ்பைசியான மசாலாக்களைச் சேர்த்து முட்டை கீமாவை  வெறும் 30 நிமிடங்களில் செய்துவிடலாம்.



முட்டை கீமா செய்யும் முறை:


தேவையான பொருட்கள்:


முட்டை - 5


எண்ணெய் - 1 டீஸ்பூன்


மிளகுத்தூள் (black pepper) - ½ தேக்கரண்டி


வெங்காயம் - 2


தக்காளி- 2 பொடியாக நறுக்கியது. 


இஞ்சி பூண்டு விழுது - 2 டீஸ்பூன்


மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி


கரம் மசாலா - 1 டீஸ்பூன்


மஞ்சள்தூள் - ¼ தேக்கரண்டி


உப்பு – தேவைக்கு ஏற்ப.


தண்ணீர் - 1 ½ கப்


கொத்தமல்லி இலைகள் - 1 டீஸ்பூன்


செய்முறை:


முதலில் வேகவைத்த 5 முட்டைகளை வேகவைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். பின்னர் கேரட் துருவும் துருவில் முட்டையைத் துருவி வைத்துக்கொள்ள வேண்டும்.


கடாயில் ஊற்றிய எண்ணெய் காய்ந்ததும் பட்டை, பிரிஞ்சிப்பூ,கிராம்பு, வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். வெங்காயம் பொன்னிறமானதும் அதனுடன் நறுக்கிய தக்காளியைச்  சேர்த்து வதக்க வேண்டும்.  


இதனுடன் இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும்வரை வதக்க வேண்டும்.



பின்னர் உப்பு, மஞ்சள் தூள், மிளகாய்தூள், கரம் மசாலா சேர்த்து 3 நிமிடங்கள் வரை வதக்க வேண்டும்.  இதனையடுத்து துருவி எடுத்து வைத்துள்ள முட்டை மற்றும் தண்ணீரைச்சேர்க்க வேண்டும். இவையனைத்தும் நல்ல கிரேவித்தன்மை வரும்வரை கிளறிக்கொண்டே இருக்க வேண்டும். இறுதியில் மிளகுத்தூள் மறறும் கொத்தமல்லி இலை சேர்த்துக்கொள்ள வேண்டும். தற்போது சுவையான முட்டை கீமா ரெடியாகி விட்டது.


இந்த ரெசிபியை சாதம், சப்பாத்தி, பரோட்டோவுடன் சேர்த்துப்பரிமாறலாம். இந்த ஸ்பைசியான ரெசிபியை செய்து நீங்களும், உங்கள் குடும்பத்தினருடன் சேர்ந்து இனி சாப்பிடுங்கள்…பொதுவாக  முட்டையில் வைட்டமின் டி, வைட்டமின் பி 12, கோலின் மற்றும் செலினியம் போன்ற ஊட்டச்சத்துகளுடன் தசைகளை வலுப்பெற வைக்கும்தன்மை உள்ளதால் எப்படி செய்து சாப்பிட்டலாம் நமக்கு ஆரோக்கியமானதுதான்.