இந்தியாவில் கொண்டாடப்படும் பண்டிகைகள் ஒவ்வொன்றிற்கும் வரலாற்று கதைகள் இருக்கும். ஒரே பண்டிகை என்றாலும் நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் பலவிதமாக பண்டிகைகள் கொண்டாடப்படுவது வழக்கம். ரக்‌ஷா பந்தன் பண்டிகையும் அப்படியே. வரும் 30ம் தேதி சகோதர பந்தத்தை வெளிப்படுத்தும் விதமாக ரக்‌ஷா பந்தன் கொண்டாடப்பட உள்ளது. 


சகோதர - சகோதரி உறவை பலப்படுத்தும் பண்டிகையாக கருதப்படுகிறது. ஷ்ராவண பெளர்ணமி நாளில் இந்த பண்டிகை கொண்டாடப்படுகிறது. முன்பெல்லாம் இது வட இந்தியாவில் கொண்டாடப்படும் ஒன்றாக கருதப்பட்டது. ஆனால், இன்று நாட்டின் பல்வேறு இடங்களில் ரக்‌ஷா பந்தன் கொண்டாடப்படுகிறது.  அன்றைய தினத்தில் அக்கா, தங்கைகள் அண்ணன், தம்பிக்கு ராக்கி கட்டிவிடுவர். ஒரு தட்டில் மஞ்சள், குங்குமம், சந்தனம், பூக்கள் மற்றும் இனிப்பு ஆகியவற்றுடன் சகோதரர்களுக்கு நெற்றியில் திலகமிட்டு, இனிப்பு வழங்கி ராக்கி கட்டிவிடுவர். சகோதரர்கள் தங்கை, அக்காகளுக்கு பரிசுப்பொருட்களை தருவார்கள்.


இந்தியாவில் கொண்டாடப்படும் பண்டிகைகள் ஒவ்வொன்றிற்கும் வரலாற்று கதைகள் இருக்கும். ஒரே பண்டிகை என்றாலும் நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் பலவிதமாக பண்டிகைகள் கொண்டாடப்படுவது வழக்கம். ரக்‌ஷா பந்தன் பண்டிகையும் அப்படியே. வரும் 30ம் தேதி சகோதர பந்தத்தை வெளிப்படுத்தும் விதமாக ரக்‌ஷா பந்தன் கொண்டாடப்பட உள்ளது. 


சகோதர - சகோதரரி உறவை பலப்படுத்தும் பண்டிகையாக கருதப்படுகிறது. ஷ்ராவண பெளர்ணமி நாளில் இந்த பண்டிகை கொண்டாடப்படுகிறது. முன்பெல்லாம் இது வட இந்தியாவில் கொண்டாடப்படும் ஒன்றாக கருதப்பட்டது. ஆனால், இன்று நாட்டின் பல்வேறு இடங்களில் ரக்‌ஷா பந்தன் கொண்டாடப்படுகிறது.  அன்றைய தினத்தில் அக்கா, தங்கைகள் அண்ணன், தம்பிக்கு ராக்கி கட்டிவிடுவர். ஒரு தட்டில் மஞ்சள், குங்குமம், சந்தனம், பூக்கள் மற்றும் பூக்கள், இனிப்பு ஆகியவற்றுடன் சகோதரர்களுக்கு நெற்றியில் திலகமிட்டு, இனிப்பு வழங்கி ராக்கி கட்டிவிடுவர். சகோதரர்கள் தங்கை, அக்காகளுக்கு பரிசுப்பொருட்களை தருவார்கள்,.


மகாராஷ்டிரா 


மகாராஷ்டிரா மற்றும் அம்மாநிலத்தில் உள்ள கடற்கரை பகுதிகளில் நாராலி பூர்ணிமா என்ற பெயரில் ரக்‌ஷா பந்தன் கொண்டாடப்படுகிறது. கடலை வணங்கி, வளங்களை தரும் கடலுக்கு தேங்காய் படைப்பது அங்குள்ள மீனவர்கள் கடலை வழிபடும் முறை.


குஜராத்


குஜராத் உள்ளிட்ட மேற்கு இந்திய மாநிலங்களில் பவித்ரோபோனா ம் ரக்‌ஷாபந்தன் கொண்டாடப்படுகிறது. கோயில்களுக்கு சென்று கடவுளை வழிபடுவர். ராக்கி கட்டியும் கொண்டாடுவர். 


ஒடிசா


கம்ஹ பூர்ணிமா என்ற பண்டிகையும் ரக்‌ஷா பந்தன் தினத்தன்று ஒடிசாவில் கொண்டாடப்படுகிறது. மாடுகளுக்கு சிறப்பு பூஜை செய்யப்படுகிறது. கிருஷ்ணன் சகோதரரான பாலதேவ் பிறந்தநாளில் ரக்‌ஷாபந்தன் கொண்டாடப்படுவதால் அம்மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் சிறப்பு பூஜைகளுடன் கொண்டாடப்படுகிறது. 


இவ்வாறு நாட்டின் பல்வேறு மாநிலங்களில் புராணக் கதைகளின்படி, பல வகையாக கொண்டாடப்படுகிறது.


 ரக்‌ஷா பந்தன் எப்போது?


இந்த ஆண்டு ரக்ஷா பந்தன் ஆக்ஸ்ட் 30ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. பெளர்ணமி திதி ஆகஸ்ட் 30 காலை 10.58 மணிக்கு தொடங்குகிறது. ஆகஸ்ட் 31ஆம் தேதி காலை 7.05 மணிக்கு முடிவடைகிறது. பஞ்சாகத்தின் படி, மேலே குறிப்பிடப்பட்டுள்ள நேரத்தில் ராக்கி கயிறை சகோதரிகள் சகோதரர்களுக்கு அணிவிக்கலாம்.  இந்நாளில், அரிய கிரகங்களின் சேர்க்கை நடக்க உள்ளது. இந்த சேர்க்கை 3 ராசிக்கார்களுக்கு அதிர்ஷ்டத்தை தரும். அதாவது, சூரியன், புதன், சந்திரன் ஆகிய கிரகங்கள் சாதகமான நிலையில் உள்ளதால் சிம்மம், தனுசு, மிதுனம் ராசிக்காரர்களின் வாழ்க்கையில் நடக்கும் என்று ஜோதிடர்கள் தெரிவிக்கின்றனர்.  சுமார் 200 ஆண்டுகளுக்கு பிறகு ரக்ஷா பந்தன் பூர்ணிமா அன்று இந்த அரிய சேர்க்கை நடைபெறுவதாக அறிஞர்கள் கூறுகின்றனர்.