நடிகர் ப்ரணிதா சுபாஷ் அண்மையில் தனது கணவருடன் பகிர்ந்துகொண்ட இன்ஸ்டா பதிவில் தாங்கள் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்தார்.இதையடுத்து தற்போது அனைத்து தாய்மார்களையும் ஊக்குவிக்கும் வகையில் ஒரு இடுகையைப் பகிர்ந்து கொண்டுள்ளார். நடிகர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தற்போது இட்டுள்ள பதிவில், தனது கணவருடன் ஜிம்மில் இருந்து தனது கர்ப்பகால உடற்பயிற்சியை குறித்த ஒரு முன்னோட்ட வீடியோ ஒன்றைப் பகிர்ந்துள்ளார். வீடியோவில், அவர் ஜிம்மில் லைட் ஸ்ட்ரெட்ச் செய்து கொண்டிருப்பதைக் காணலாம் மற்றும் தனது கணவருடன் ஒரு ஜிம்மில் ஒரு செல்ஃபியையும் கிளிக் செய்து பகிர்ந்துகொண்டுள்ளார்.






பதிவைப் பகிர்ந்து கொண்ட ப்ரணிதா, "இது வெறும் லைட் ஸ்ட்ரெச்" என்று குறிப்பிட்டுள்ளார். ஜிம் உடற்பயிற்சி செய்வதற்காக பெரிய அளவிலான பிரிண்ட் செய்யப்பட்ட டிஷர்ட் மற்றும் கருப்பு பைக்கர் ஷார்ட்ஸை அவர் அணிந்திருந்தார். கருவுற்றிருப்பதால் அவர் வயிறு சற்றே பெருத்து காணப்படுகிறது, அதே நேரத்தில், கருவுற்று இருக்கும் போது எப்படி ஃபிட்டாக இருக்க வேண்டும் என்பதற்கான சில ஆலோசனைகளையும் வழங்குகிறார். ப்ரணிதா அனைத்து கர்ப்பிணிப் பெண்களுக்கும் முக்கிய உடற்பயிற்சி குறிப்புகளை அந்தப் பதிவில் வழங்கியுள்ளார். 


கடந்த ஏப்ரல் 12 அன்று, பிரணிதா சுபாஷ் தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது கணவரின் பிறந்தநாள் அன்று தான் கர்ப்பமாக இருப்பதாக மகிழ்ச்சியுடன் அறிவித்தார். ​​பின்னர் தனது கணவருடனான பர்த்டே செலபிரேஷன் புகைப்படங்களுடன் பிறக்கப்போகும் குழந்தையின் சோனோகிராஃபி படங்களையும்  கர்ப்ப பரிசோதனையின் பாஸிடிவ் ரிஸல்ட்களையும் வெளியிட்டார்.





இதை அடுத்து நேற்று தனது வயிறு பெருத்திருக்கும் ஒரு புகைப்படம் ஒன்றையும் வெளியிட்டுள்ளார். படம் ஆன்லைனில் வெளிவந்தவுடன், நெட்டிசன்கள் இடுகையில் தங்களது வாழ்த்துகளைப் பகிர்ந்துள்ளனர்.