உருளைக்கிழங்கில் இருந்து பால் எடுத்து பயன்படுத்த படுகிறது. இது அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் பிரபலமாக பயன்படுத்த படுகிறது. இது என்ன புது வகையாக இருக்கிறது என நினைக்கலாம். ஆமாம், உணவில் ஒவ்வொன்றும் மாறி மாறி வந்து கொண்டு இருக்கிறது. உணவின் பரிணாமம் மாறி கொண்டே இருக்கிறது. இது குளுட்டின் இல்லாமலும், எந்த அசைவ உணவு சேர்க்கை இல்லாமலும் இருக்கிறது. அதனால் சைவ உணவு எடுத்து கொள்பவர்களுக்கு சிறந்த மாற்றாக இருக்கும்.
இந்த உருளை கிழங்கு பாலில் என்னென்ன சத்துக்கள் இருக்கின்றன என தெரிந்து கொள்ளலாம், இதில் வைட்டமின் பி 12 இருக்கிறது. இதில் விட்டமின்கள் A, C, D, E, மற்றும் K ஆகிய ஊட்டச்சத்துகள் இருக்கிறது. மாட்டுப்பாலில் இருக்கும் அளவிற்க்கு கால்சியம் சத்து நிறைந்து இருக்கிறது. இதை பால் இல்லாதது. சிலர்க்கு லாக்டோஸ் ஒவ்வாமை இருக்கும். அவர்களுக்கு இது சிறந்த மாற்றாக இருக்கு. இதில் க்ளுட்டீன் இல்லை. க்ளுட்டீன்ஒவ்வாமை இருப்பவர்களுக்கு இது சிறந்த மாற்றாக இருக்கும். அதிக ஆற்றல் கொண்டது.
இந்த உருளை கிழங்கு பாலை வீட்டில் செய்யலாம்.
செய்வதற்கு தேவையான பொருள்கள்.
உருளை கிழங்கு - 1
வெண்ணிலா சாறு - 1 டீஸ்பூன்
பாதாம் - 1/4 கப்
தேன் - 2 டீஸ்பூன்
செய்முறை
உருளை கிழங்கை தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக வேகவைத்து கொள்ளவும். பின், தோலை உரித்து விட்டு தண்ணீர் சேர்த்து அதனுடன், வெண்ணிலா சாறு, பாதாம் சேர்த்து அரைத்து கொள்ளவும். இதை ஒரு துணியால் முழுவதுமாக வடிகட்டி தேன் கலந்து எடுத்து கொள்ளலாம். வீட்டில் தயாரித்த உருளை கிழக்கு பால் தயார்.
பால் பயன்படுத்தும் இடங்களில் இந்த உருளை கிழங்கு பாலை சேர்த்து கொள்ளலாம். இது அதிக ஆற்றல் மிக்க உணவாக இருப்பதால் உடல் சோர்வாக இருக்கும் போது எடுத்து கொள்ளலாம். காலை உணவு ஓட்ஸ் எடுத்து கொண்டால், ஓட்ஸ் மற்றும் உருளை கிழங்கு பால் சேர்த்து பயன்படுத்தி கொள்ளலாம். இது போன்று மாட்டு பாலுக்கு பதில் இந்த உருளை கிழங்கு பால் எடுத்து கொள்ளலாம்.
இதில் உருளை கிழங்கை அளவுக்கு அதிகமாக எடுத்து கொள்வதும், கேடுவிளைவிக்க கூடியதாக இருக்கிறது. இதில் கார்போஹைட்ரெட் நிறைத்து இருப்பதால் சர்க்கரை நோயாளிகள் இதை தவிர்க்க வேண்டும். மேலும் உடல் எடை குறைக்கும் முயற்சியில் இருப்பவர்கள், ஒரு நேர உணவாக உருளை கிழங்கை எடுத்து கொள்ளலாம். அல்லது இதை முற்றிலும் தவிர்ப்பது நல்லது. அதிகமாக எண்ணையில் பொறித்த உருளை கிழங்கை தவிர்த்து இது போன்று வேக வைத்து எடுத்து கொள்ளலாம்.