பார்ட்னர்களுக்கு இடையே மிஞ்சிப்போனால் பத்து நிமிடம் நிகழும் உடலுறவுக்கு எதற்கு மற்றவருடைய விருப்பு வெறுப்புகள் தெரிந்திருக்க வேண்டும் என்கிற கண்மூடித்தனமான எண்ணம் நிறைய பேருக்கு உள்ளது.ஆனால் உடலுறவுக்கு முன்பும் பின்பும் நம் பார்ட்னர்களிடம் இப்படித்தான் நடந்துகொள்ள வேண்டும் என்கிற வரைமுறை இருக்கிறது என்கிறார் நிபுணர் ஸ்வாதி ஜகதீஷ். இன்ஸ்டாகிராமில் மாயாஸ் அம்மா என அறியப்படும் இவர் பாலியல் மற்றும் மகப்பேறு பராமரிப்பு தொடர்பான நிபுணத்துவம் பெற்றவர். அவர் கூறுகையில்,”செக்ஸின் போது நமது பார்ட்னருக்கு என்ன பிடிக்கும் என்ன பிடிக்காது என்பது நமக்கு தெரிந்திருக்க வேண்டியது அவசியம். உதாரணத்துக்கு பாலுணர்வை தூண்டுவது ஒவ்வொருவருக்கும் மாறுபடும். பெரும்பாலும் பெண்களுக்கு பார்ன் பார்த்தால் பாலுணர்வு தூண்டப்படாது என புள்ளிவிவரம் சொல்லுகிறது. அதனால் பெண்களுக்கு பார்ன் பிடிக்காது என அர்த்தம் இல்லை. ஒவ்வொரு பெண்ணுக்கும் அது மாறுபடும். உங்கள் பார்ட்னருக்கு அப்படி பிடித்த அந்தரங்கமான விஷயங்கள் என்ன என்ன? என்பதைக் கேட்டு தெரிந்து கொள்ளலாம்” என்கிறார்.



 


உடற்பயிற்சியும் சரியான வகை உணவும் தொடர்ந்து உங்கள் செக்ஸ் வாழ்க்கையை மேம்படுத்த உதவும். உங்கள் தினசரி உணவுத் திட்டத்தில் சில பானங்களைச் சேர்ப்பதன் மூலம் உங்களால் நீண்டகாலத்துக்கு உங்களது செக்ஸ் வாழ்க்கையை நீட்டிக்க முடியும். இந்த உணவுகளை அன்றாடம் சேர்த்துக்கொள்ளுதல் உங்கள் ரொமாண்டிக் வாழ்க்கையை நீண்ட காலம் நீடிக்கும், உங்கள் பாலுணர்வையும் அதிகரிக்கும். அந்தப் பானங்களின் பட்டியல் கீழே...


சில ஆய்வுகளின்படி, கற்றாழை சாறு, முதன்மை ஆண் பாலின ஹார்மோனான டெஸ்டோஸ்டிரோன் உற்பத்தியை அதிகரிக்கும் ஆற்றலைக் கொண்டுள்ளது எனக் கண்டறியப்பட்டுள்ளது. கற்றாழை சாறு குடிப்பதால் பாலியல் ஆற்றல் அதிகரிக்கும் மற்றும் அதிக லிபிடோவும் உண்டாகும். கற்றாழை சாறு பொதுவாக உங்கள் ஆரோக்கியத்துக்கும் நல்லது.


ஒரு ஆய்வின் படி, மாதுளை சாறு விறைப்புத்தன்மையை மேம்படுத்தும் ஆற்றலைக் கொண்டுள்ளது, ஏனெனில் இது இரத்த ஓட்டத்தை மேம்படுத்தும். மேலும் இது அண்டி ஆக்சிடெண்ட்களின் அதிக செறிவுகளைக் கொண்டுள்ளதால் மாதுளைச் சாறு இதய நோய் ஏற்படும் அபாயத்தையும் குறைக்கிறது.


திருமண இரவில் புதுமணத் தம்பதிகளுக்கு ஒரு கிளாஸ் பால் ஏன் கொடுக்கப்படுகிறது என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? ஏனெனில் பால் ஆரோக்கியமான உடலுறவுக்கு உதவுகிறது. இது ஊட்டச்சத்துக்களால் நிரம்பியுள்ளது மற்றும் உடனடி ஆற்றலை வழங்குகிறது. உங்கள் ரொமாண்டிக் வாழ்க்கை மேம்பட ஒரு கிளாஸ் பாலை குடிப்பது பலவகையில் உதவும். அதே சமயம் உங்களுக்கு லாக்டோஸ் டாலரன்ஸ் உள்ளதா இல்லையா என்பதையும் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.


Bromelain எனப்படும் என்சைம் நிறைந்த வாழைப்பழம் உங்கள் பாலியல் ஆற்றலையும் லிபிடோவையும் மேம்படுத்தும். வாழைப்பழத்தை தினமும் உண்பது நல்லது, ஏனெனில் இதில் வைட்டமின்கள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் உள்ளன, அவை ஆற்றலையும் சகிப்புத்தன்மையையும் தருகின்றன. வாழைப்பழத்தை அப்படியே சாப்பிடப் பிடிக்காதவர்கள் மில்க் ஷேக்காகக் கூடக் குடிக்கலாம்.


L-citrulline எனப்படும் அமினோ அமிலம் நிறைந்த தர்பூசணிகள் உங்கள் விறைப்புத்தன்மையை வலுப்படுத்தும் ஆற்றலைக் கொண்டுள்ளன. தர்பூசணியில் உள்ள L-citrulline உங்கள் உடலில் எல்-அர்ஜினைனாக மாற்றப்படுகிறது, மேலும் இந்த கலவை நைட்ரிக் ஆக்சைடு உற்பத்தியைத் தூண்டுகிறது, இது ஆண்குறிக்கு இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. இது சிறந்த விறைப்புத்தன்மைக்கு உதவும்