பொங்கல் பண்டிகை தொடங்க இன்னும் ஒரு சில நாட்களே உள்ளநிலையில், தமிழகத்தில் பண்டிகைக்கான ஏற்பாடுகள் களைக்கட்டுகின்றன. அறுவடை திருநாள் என்று அழைக்கப்படும் பொங்கல் பண்டிகை, இந்தியா முழுவதும் கொண்டாடப்பட்டாலும், தென்னிந்தியாவில் தமிழகத்தில்தான் வெகு விமர்சையாக நான்கு நாட்கள் கொண்டாடப்படுகிறது. பொதுவாக ஜனவரி 14 ஆம் தேதி தொடங்கும் பொங்கல் விழா, நான்கு நாட்களும் கோலாகலமாக நடைபெறும். உழவர், சூரியன், மாடு, ஆடு என விவசாயத்திற்கு பயன்படுபவைகளுக்கு நன்றி செலுத்தும் விதமாக பொங்கல் கொண்டாடப்படுகிறது. போகி பண்டிகை, சூரிய பொங்கல், மாட்டு பொங்கல், காணும் பொங்கல் என ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சிறப்புகள் இடம் பெற்றிருக்கும். நமக்கு எப்போதும் வாழ்த்துகள் சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும்.




ஆனால் முன்பு போல நம்மால் கார்டுகளை வாங்கி நேரில் சென்று வாழ்த்து சொல்ல இயலுவதில்லை. அவர்களுக்காகவே இந்த பக்கம். இங்கு இருக்கும் இந்த வாட்ஸ்ஆப் இமேஜ்களை டவுன்லோடு செய்து உங்களுக்கு விருப்பமானவர்களுக்கு நீங்கள் அனுப்பிக் கொள்ளலாம். இந்த பொங்கல் திருநாள், சாதி, மத பாகுபாடு அற்றது. இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த பொங்கலுக்கு உங்கள் நண்பர்கள், உறவினர்கள், காதலர் என அனைவருக்கும் வாழ்த்துக்களை நீங்கள் தெரிவிக்க சில வாழ்த்துக்களை இங்கே எடுத்துக்கொள்ளுங்கள்..



  • தைத் திருநாளில் அனைவரும் வளமுடன் வாழ வாழ்த்துகள்!

  • பொங்கல் அன்று நலமும் வளமும் என்றும் சூழ்ந்திட !அன்னைத் தமிழ் மணம் பரப்பி வாழ்ந்திட வாழ்த்துகிறோம் !!!

  • அன்பு பொங்க, ஆசைகள் பொங்க, இன்பம் பொங்க, இனிமை பொங்க என்றும் உங்கள் வீட்டில் மகிழ்ச்சி பொங்க பொங்கலோ பொங்கல் வாழ்த்துகள்!

  • இந்த தைத் திருநாளில் நாம் உண்ண உணவு அளிக்கும் இயற்கை அன்னைக்கும், உழவர்களுக்கும் வாழ்த்துக்கள்!

  • இனிமை பொங்க என்றும் உங்கள் வீட்டில் மகிழ்ச்சி பொங்க பொங்கலோ... பொங்கல் வாழ்த்துகள்!

  • எனது அன்பிற்குரிய தமிழக மக்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்!

  • தமிழர் மரபு காக்கவும், பாரம்பரியம் போற்றவும் பொங்கல் வாழ்த்துகள்!

  • அறுவடைத் திருநாளாம் பொங்கல் நன்னாளில், தமிழர்கள் வாழ்வில் அன்பும் அமைதியும் நிலவட்டும், நலமும், வளமும் பெருகட்டும்!

  • பொங்கல் திருநாள் அனைவருக்கும் உடல்நலத்தையும், மகிழ்ச்சியையும் தரட்டும். கடினமாக உழைத்து வரும் நமது விவசாய பெருங்குடி மக்களின் வாழ்வில் வளத்தை கொண்டு வந்து சேர்க்கட்டும்!

  • பொங்கல் திருநாள் மக்கள் வாழ்வில் திருப்பத்தை ஏற்படுத்தி ஒளிமயமான எதிர்காலம் உருவாக்க நல்வாழ்த்துகள்!