நம்மில் பெரும்பாலான வீடுகளில் இட்லி, தோசைதான் பிரதான பிரேக் பாஸ்ட் உணவு. இதைக்கூட சாப்பிட்டு விடலாம், ஆனால் அந்த உப்புமா மட்டும் வேண்டும் என்பது தான் பலரின் மைண்ட் வாய்ஸ். இப்போதெல்லாம் அதிகமான பெண்கள் அலுவலக வேலைகளுக்கு செல்லக்கூடியவர்களாக இருக்கின்றனர். எனவே அவர்கள் காலையில் எழுந்ததும் வெறும் இரண்டு மணிநேரத்தில் டீ, காலை உணவு, மதியத்திற்கு சாதம், குழம்பு ஒரு சைட்டிஷ் ஆகியவற்றை குறைந்தபட்சம் செய்தாக வேண்டும்.
இந்த நேர பற்றாக்குறைதான் குறைந்த நேரத்தில் சமைக்கக்கூடிய உணவுகளை தேர்ந்தெடுத்து சமைக்க காரணம். ஆனால் வீட்டில் உள்ள குழந்தைகளோ தினந்தோறும் ஒரே மாதிரியான காலை உணவை சாப்பிட்டு போரடித்து விட்டால் சரியாக சாப்பிட மாட்டார்கள். எனவே புதியதாக, சுவையாக ஏதேனும் காலை உணவை தயார் செய்ய வேண்டிய அவசியம் உள்ளது. அப்படி நீங்கள் புதிதாக எதையாவது, ட்ரை பண்ண விரும்பினால், அவல் ரெசிப்பி செய்து பாருங்க. குறைந்த நேரத்தில் ரொம்ப ஈசியா செய்திடலாம். வாங்க ஃப்ரைடு அவல் எப்படி? செய்வதென்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
1 கப் தட்டை அவல், 1/4 கப் மஞ்சள் நிற குடை மிளகாய், 1/4 கப் சிவப்பு நிற குடை மிளகாய், 4 பீன்ஸ், 1 கேரட், சிறிதளவு வெங்காயத் தாள், 1/2 ஸ்பூன் மிளகு தூள், சிறிது கோஸ், உப்பு தேவையானஅளவு, எண்ணெய் தேவையான அளவு.
ஃப்ரைடு அவல் செய்முறை
அவலை தண்ணீரில் கழுவி வடிகட்டி 10 நிமிடம் ஊறவைக்க வேண்டும். 1 கடாயில் தேவையான அளவு எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்ததும், அடுப்பை மிதமான தீயில் வைத்து, குடை மிளகாய், பீன்ஸ், கோஸ், கேரட் மற்றும் வெங்காயத்தாள் சேர்த்து மிதமான சூட்டில் அரை பதமாக வேகவைக்க வேண்டும். காய்கறிகள் வதங்கியதும் அதனுடன் ஊறவைத்த அவல், மிளகுத்தூள், உப்பு சேர்த்து நன்றாக கிளறி விட வேண்டும். எல்லாம் நன்றாக மிக்ஸ் ஆனதும், இறுதியாக சிறிது வெங்காயத் தாளையும் சேர்த்து கலந்து விடவும். இப்போது டேஸ்டியான அவல் ஃப்ரைட் ரைஸ் தயார். இதை நீங்கள் சட்னி வைத்தும் பறிமாறலாம், அப்படியே கூட சாப்பிடலாம்...
குறிப்பு: நீங்கள் வெள்ளை நிற அவலுக்கு பதில் சிவப்பு நிற அவலையும் தேர்ந்தெடுக்கலாம். சிவப்பு நிற அவலில் சத்துகள் சற்று கூடுதலாக இருக்கும் என சொல்லப்படுகின்றது.
மேலும் படிக்க