புனித வெள்ளி நம்மை கருணை, இரக்கம் ஆகியவற்றைப் போற்ற ஊக்குவிக்கிறது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

புனித வெள்ளியன்று, பிரதமர் நரேந்திர மோடி, இந்த நாள் கருணை, இரக்கம் ஆகியவற்றைப் போற்றவும், எப்போதும் பரந்த மனதுடன் இருக்கவும் நம்மைத் தூண்டுகிறது எனத் தெரிவித்துள்ளார்.

இயேசு சிலுவையில் அறையப்பட்டதை நினைவுகூரும் வகையில் புனித வெள்ளி கொண்டாடப்படுகிறது.

இதுகுறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில், "புனித வெள்ளியன்று, இயேசு கிறிஸ்துவின் தியாகத்தை நாம் நினைவுகூருகிறோம். இந்த நாள் கருணை, இரக்கம் ஆகியவற்றைப் போற்றவும், எப்போதும் பரந்த மனதுடன் இருக்கவும் நம்மைத் தூண்டுகிறது. அமைதி மற்றும் ஒற்றுமையின் உணர்வு எப்போதும் மேலோங்கட்டும்" என்று தெரிவித்துள்ளார்.