சிறுநீரகம் உடலில் மிக முக்கியமான பணியை செய்கிறது. உண்ணும் உணவில் இருக்கும் கழிவுகளை பிரித்து வெளியே அனுப்புகிறது. உடலுக்கு அத்தியாவசியமான ஊட்டச்சத்துகளை இரத்தத்தில் செலுத்தி , கழுவுகளை பிரித்து, சிறுநீரக வெளியே அனுப்புகிறது.


இந்த உறுப்பை தெரியாமல் சில  அன்றாட பழக்க வழக்கங்களினால், கெடுத்து கொண்டு இருக்கிறது. இதனால் ஒவ்வாமை, தொற்று நோய்கள், சிறுநீரக கல், நாளடைவில் இரண்டு சிறுநீரகமும் செயல் இழந்து சிறுநீரகம் செய்யும் வேலையை வெளியே வெளியில் இருந்து ஒரு கருவி பொருத்தி செய்யும் நிலைக்கு தள்ளப்படுகிறது. அதனால், சிறுநீரகம் ஆரோக்கியமாக இருக்க சில டிப்ஸ் இங்கே



  1. உடல் ஆரோக்கியமாக இருக்க தினம் ஒரு அரை மணி நேரம் உடற்பயிற்சி செய்யுங்கள்.இது முழு உடலையும் ஆரோக்கியமாகவும்,சுறுசுறுப்பாகவும் வைத்து இருக்கும்.





  1. ஒரு நாளைக்கு 2-3 லிட்டர் தண்ணீர் குடியுங்கள். இது உடலில் அணைத்து செயல்களுக்கும் உதவும். அடிக்கடி சிறுநீரக கல் பிரச்சினையினால் பாதிக்க படுபவர்களுக்கு இது சிறந்த நிவாரணமாக இருக்கும். தண்ணீர் குடிப்பது சிறுநீரகம் கழுவுகளை வெளியேற்ற உதவியாக இருக்கும்.





  1. நீரிழுவு நோய் இருப்பவர்களுக்கு சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டில் வைத்து இருக்க வேண்டும். இரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டுப்படுத்த படாமல் இருக்கும் 30 % அதிகமானோருக்கு சிறுநீரக செயலிழப்பு, மற்றும் சிறுநீரக நோய் பிரச்சனை வரும். அதனால் நீரிழுவு நோய் இருப்பவர்கள் கூடுதல் கவனத்துடன் இருப்பது அவசியம்.




4. ரத்த அழுத்தம் நோய் இருப்பவர்களுக்கு சிறுநீரக பாதிப்பு வரும். இதயத்தில் இருந்து அதிக படியான இரத்தம், சிறுநீரகத்திற்கு செல்லும், இரத்த அழுத்தம் கட்டு பாட்டில் இல்லாமல் இருந்தால் இது பல்வேறு பிரச்சனைகளை தரும். ரத்த அழுத்த நோய் இருப்பவர்கள், சரியான மருந்துகளை எடுத்து கொள்ள வேண்டும்.




5.அளவான உப்பு எடுத்து கொள்ளுங்கள். அதிகப்படியான உப்பு எடுத்து கொள்வது, சிறுநீரக செயல்பாடு மாறும். பதப்படுத்தப்பட்ட உணவுகள் அனைத்தும், உப்பு அதிகமாக இருக்கும். அதை தவிர்த்து ஆரோக்கியமான சத்தான உணவுகளை எடுத்து கொள்ளுங்கள்.


6.புகைபுடிக்கும் தவிர்த்திடுங்கள். புகை பிடிக்கும் பழக்கம் இருந்தால், சிறுநீரகத்திற்கு செல்லும் இரத்தத்தில் மாறுதல் ஏற்படும். அதனால் சிறுநீரக நோய் வருவதற்கு வாய்ப்புகள் அதிகம்.


 




7.ஆல்கஹால் தவிர்த்திடுங்கள். இதில் இருக்கும் கழிவுகளை வெளியேற்ற சிறுநீரகம் அதிகம் செயல்பட வேண்டியதாக இருக்கும சிலருக்கு ஆல்கஹால் எடுத்து கொள்வதால், சிறுநீரக கல் பிரச்சனையில் தொடங்கி, சிறுநீரகம் செயலிழப்பு பிரச்சனை வரும்.


8.உடல் எடையை கட்டுக்குள் வைத்து இருங்கள்.





  1. பரம்பரை ரீதியாக சிறுநீரக நோய் பிரச்சனை இருப்பவர்களுக்கு, அடுத்த தலைமுறைக்கு சிறுநீரக பாதிப்பு வருவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. அதனால் கவனத்துடன் இருக்க வேண்டும்.


10.ஏற்கனவே சிறுநீரக பிரச்னை இருப்பவர்கள் அளவான புரத சத்து எடுத்து கொள்ள வேண்டும். புரத சத்தை குறைத்து கொள்வது நல்லது.