சிலருக்கு அமானுஷ்யக் கதைகள் பிடிக்கும். அமானுஷ்யம் நிறைந்த இடத்திற்குச் செல்லப் பிடிக்கும். தில்லுதான் பா உங்களுக்கு என்று சிலர் அவர்களைப் பார்த்து பாராட்டுவது உண்டு. இன்னும் சிலர் அமானுஷ்யம் பேசுபவர்கள் அருகில் கூட நிற்க மாட்டார்கள். துஷ்டரைக் கண்டால் தூர விலகுங்கள் என்பதுபோல் பேய், பில்லி, சூனியம், அமானுஷ்யம் பற்றி பேசுபவர்களை அவர்கள் விலக்கிவைத்து விடுவார்கள். சரி அமானுஷ்யம் நிறைந்ததாக கருதப்படும் இடத்திற்கு நீங்கள் செல்ல முற்பட்டால் இந்த 4 டிப்ஸ்களை மறக்காமல் பின்பற்றுங்கள்.


மனரீதியாக தயாராகுங்கள்:


முதலில் நீங்கள் மன ரீதியாக தயாராக வேண்டும். பெரும்பாலும் நமக்கு பயம் தருவது விசித்திரமான ஓசைகளும், அசைவுகளும், சில நேரங்களில் நிழல்களும். ஆகவே அமானுஷ்யம் நிறைந்த இடம் என்றால் அங்கே வவ்வால்கள், கோட்டான்கள், ஆந்தைகள் போன்றவற்றால் வித்தியாசமான ஒலி கேட்கலாம். ஆள் அரவமற்ற இடமென்பதால் வெளிச்சம் இல்லாமல் இருக்கலாம். சிறு வெளிச்சத்திலும் பெரிய நிழல் தெரிந்து அச்சமூட்டலாம். இதை எல்லாம் எதிர்பார்த்துச் சென்றால் 


செல்லும் இடத்தைப் பற்றி அறிந்து கொள்ளுங்கள்


அமானுஷ்ய இடத்திற்குச் செல்கிறீர்கள் என்றால் நீங்கள் முதலில் அந்த இடத்தைப் பற்றி தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும். குறிப்பாக பூலி பாத்தியாரி கா மகாலுக்கு நீங்கள் செல்கிறீர்கள் என்றால். அங்கே இரவு நேரத்தில் அதாவது சூரிய அஸ்தமனத்திற்குப் பின்னர் வரவேண்டாம் என்று கூறப்பட்டுள்ளது. இந்த மகாலுக்கு பூட்டு இல்லை. இங்கு காலை 8 மணி முதல் மாலை 5.30 மணி வரை நீங்கள் அங்கு செல்லலாம். அங்கு ஒரு காவலாளி இருப்பார். அவர் உங்களுக்கு எல்லாவற்றையும் முறையே சுற்றி காண்பிப்பார். இது டெல்லியில் கரோல் பாக் பகுதிக்கு அருகே உள்ளது. ஏன் இந்த இடத்திற்கு இத்தனை பீடிகை என்பதற்கு ஒரு கதை உள்ளது. இங்கு 600 ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு ராணி வசித்தார். அவருடைய ஆவி தான் இந்த வீட்டில் ஒவ்வொரு இரவும் உலா வருகிறது என்று நம்பப்படுகிறது. இப்படி இந்த மகாலைச் சுற்றி கதைகள் ஏராளம். நமக்கு என்னவோ இதனைப் பார்க்கும் போது கிளிப்பேச்சு கேட்கவா படத்தில் மம்முட்டியை மிரட்ட கனகா ஆவி வேடமிட்டு அன்பே வா அருகிலே என்று பாடுவது தான் நினைவுக்கு வருகிறது.




உங்களுக்கு உடல்நலன் பாதிப்பு இல்லாமல் இருப்பதை உறுதி செய்யுங்கள்:


அமானுஷ்ய இடங்களில் திடுக்கிடும் திருப்பங்கள் ஏற்படலாம் என்பதால் எவ்வித உடல் உபாதையும் இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள். குறிப்பாக இதய நோய் உள்ளவர்கள் இது போன்ற ஆபத்தான முயற்சியை எடுக்கவே கூடாது. 


தேவையான பொருட்களை வைத்துக் கொள்ளுங்கள்:


அமானுஷ்ய இடங்களுக்குச் செல்லும்போது தேவையான பொருட்களை கைவசம் வைத்துக் கொள்ளுங்கள். குறிப்பாக டார்ச் லைட், தண்ணீர் எடுத்துச் செல்லுங்கள். இருள் தான் அமானுஷ்ய இடங்களில் பெரும் அச்சுறுத்தல் என்பதால் நீங்கள் அதனைத் தவறாமல் எடுத்துக் கொள்ளுங்கள். 


இந்த 4 டிப்ஸையும் பின்பற்றி நீங்கள் அமானுஷ்ய இடங்களுக்கு விசிட் அடிக்கலாம். ஆனால் யாரையும் வற்புறுத்தி அழைத்துச் செல்லாதீர்கள்.