கோவா என்றால் அனைவருக்கு முதலில் நியாபகம் வருவது என்ன? சிலர் கோவாவின்  கடற்கரைகளை குறிப்பிடுவார்கள்,சிலர் கோவாவின் இரவு நேர கொண்டாங்களை சொல்லலாம்,சிலர் கசினோவை குறிப்பிடலாம். உலக சினிமா ரசிகர்கள் வருடா வருடம் நடைபெறும் சர்வதேச திரைப்பட விழாவைச் சொல்வார்கள். இவற்றை எல்லாம் தாண்டி கோவாவில் சென்று வருவதற்கு இன்னும் நிறைய இடங்கள்  இருக்கின்றன. 


செளரி பள்ளத்தாக்கு


கோவாவில் இருக்கும் செளரி பள்ளத்தாக்கு மலைப்பகுதி சுவாரஸ்யத்தை விரும்புபவர்களுகு ஒரு சிறந்த இடமாக இருக்கும். மேலும் இயற்கை ஆர்வலராக இருப்பவகளுக்கும் இது சிறந்த ஒரு அனுபவமாக அமையக்கூடியது. செளரி பள்ளத்தாக்கு சுற்றிலும் காடு மற்றும் அருவிகளால் சூழப்பட்டுள்ளது. இதுமட்டுமில்லாமல் பல விதமான சாகச விளையாட்டுகளை இங்கே நீஙகள் விளையாடலாம்.


காயல்


கோவாவில் பெரும்பாலும் யாராலும் கண்டு கொள்ளப்படாத இடங்கள் என்றால் அது ஆங்காங்கே அமைந்திருக்கும் காயல்கள்தான்.ஏரி நீர் மற்றும் கடல் நீர் கலக்கும் இந்த இடங்கள் பெரும்பாலும் அமைதியாகவே காணப்படும். அமைதியான சூழ்நிலையில் இருக்க விரும்புபவர்களுக்கு இந்த இடங்கள் மன நிம்மதியை தரக்கூடியது. அதே நேரத்தில் இந்த இடங்களில் காப்ளெம் என்கிற ஒரு வகையான வலையைக் கொண்டு நண்டுகளை பிடிப்பது ஒரு வழக்கம்.


சின்குவரிம் பீச்


வடக்கு கோவாவில் அமைந்த மிக அழகான கடற்கரை இது. இங்கு காணக்கிடைக்கும் டால்ஃபின்கள்தான் இந்த இடத்தின் சிறப்பு அம்சம். சுற்றுலா பயணிகள் படகில் கடலுக்குச் சென்று டால்ஃபின்களை காணலாம். டால்ஃபின்கள் படகின் ஓரங்களில்  நீருக்குள்ளிருந்து துள்ளி எழுந்து நீந்தும் காட்சி யாருக்குதான் பிடிக்காமல் போகும்.


மாண்ட்ரம் பீச்


மாண்ட்ரம் பீச்சில்  சிறப்பு என்னவென்றால் நீங்கள் குவாட் பைக் என்று சொல்லப்படும்  பைக்கை வாடகைக்கு எடுத்து உங்கள் மனம் போன போக்கில் சுற்றித் திரியலாம். சுற்றியுள்ள கண் கவரும் காட்சிகள், மணற்குன்றுகள் என இந்த இடத்தில் நீங்கள் அனுபவிப்பதற்கு நிறைய உள்ளன.


ஜூவாரி ஆறு


ஜுவாரி ஆறு அதில் இருக்கும் முதலைகளுக்காக புகழ்பெற்றது. சுற்றுலா பயணிகள் படகை வாடகைக்கு எடுத்து ஆற்றில் வாழும் பல வகை விலங்கினங்களை அதன் வாழ்விடத்திலேயே பார்த்து ரசித்து வரலாம்


யூத் ஹாஸ்டல்


கோவாவில் தங்குவதற்கான செலவுகளை மிகப் பெரிய அளவில குறைப்பது அங்கு அமைந்திருக்கு யூத் ஹாஸ்டல்கள்தான். மற்ற ஹோட்டல்களை விட மிகக் குறைந்த அளவிலே இங்கு வாடகை வசூலிக்கப்படும். தனியாக பயணம் மேற்கொள்பவர்கள் தங்குவதற்கு அடக்கமான இடங்களை கொண்டிருக்கின்றன இந்த ஹாஸ்டல்கள்.


ஃபென்னி


ஃபென்னி என்பது கோவாவில் மட்டுமே கிடைக்கக் கூடிய ஒரு வகை மதுபானம். முந்திரிப் பழங்களால் அங்கிருக்கும் பாரம்பரியக் குடும்பங்களால் செய்யப்படும் இந்த மதுபானம் ஒரு புதிய வகை அனுபவமாக இருக்கும்.