சித்த மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தின் படி இந்த பிரண்டை மருத்துவ குணம் வாய்ந்தது. வாத நோய்களான முழங்கால் வலி, மூட்டு வலி, இடுப்பு வலி, இப்படி ஏதேனும் எலும்புகள் சம்பந்த பட்ட வலிகள் இருந்தால் அடிக்கடி இந்த பிரண்டையை உணவில் சேர்த்து  கொள்வது நல்லது. இது மிகவும், பழமையான முறையாக இருந்தாலும், இப்போது புதிதாக வந்து கொண்டு இருக்கிறது. கிராமங்களில் அதிகமாக கிடைத்தது. இப்போது நம் ஊர் சந்தைகளிலும், மார்க்கெட்களிலும், கிடைக்கிறது. மிக எளிமையாக  ஒரு தண்டை உடைத்து வீடு பால்கனியில், ஒரு சட்டியில் வைத்தால் சீக்கிரம் வளர்ந்து விடும். வீட்டில் பயன்படுத்தி கொள்ளலாம்.




பிரண்டை என்றால் சிலருக்கு கசப்பான அனுபவம் இருக்கும். இது பொதுவாக அரிக்கும் அதனால் சாப்பிடுவதில்லை என பலர் சொல்ல கேட்டு இருப்போம். பிரண்டையின்,  அடி பாகம், அல்லது கொஞ்சம் தடிமனாக இருக்கும் பகுதி  உணவில் எடுத்து கொண்டால் அது நாக்கில் அரிப்பை ஏற்படுத்தும். மென்மையான மேல் பகுதியை மட்டும் எடுத்து சமைப்பது நல்லது. நன்றாக எண்ணையில் வதக்கி பின்னர் பயன்படுத்தினால் அரிப்பு வராது


பிரண்டை துவையல் செய்ய தேவையான பொருள்கள்


பிரண்டை - ஒரு கைப்பிடியளவு


கடலை பருப்பு - 1 டீஸ்பூன்


உளுந்தம் பருப்பு - 1 டீஸ்பூன்


காய்ந்த மிளகாய் - 4


வெங்காயம் - 1


இஞ்சி - சிறிதளவு 


பூண்டு - 2


புளி - சிறிதளவு


உப்பு - தேவையான அளவு


கருவேப்பிலை - ஒரு கையளவு


தேங்காய் - ஒரு கையளவு




செய்முறை :



  • ஒரு பாத்திரத்தில் கடலை பருப்பு மற்றும் காய்ந்த மிளகாய் இவை இரண்டையும், எண்ணெயுடன் லேசாக வறுத்து , அதை தனியாக ஒரு பாத்திரத்தில் வைக்கவும்.

  • அதே எண்ணையில், வெங்காயம், இஞ்சி, பூண்டு, தோல் நீக்கப்பட்டு சிறிதாக வெட்டிய பிரண்டை, புளி , கருவேப்பிலை அனைத்தையும் சேர்த்து நன்றாக வதக்கி கொள்ளவும்.

  • பின்னர் தேங்காய் துருவல் சேர்த்து 1 நிமிடம் வறுத்து தேவையான அளவு உப்பு சேர்த்து இறக்கி வைத்து கொள்ளவும்.

  • இந்த கலவை மற்றும் வறுத்த கடலை பருப்பு, மிளகாய் சேர்த்து மிக்ஸியில் சிறிதளவு தண்ணீர் சேர்த்து துவையல் பதத்துடன் அரைத்து எடுக்கவும்.

  • இப்போது இந்த துவையலை மதிய உணவுடன் சேர்த்து கொள்ளலாம். அல்லது இட்லி, தோசைக்கு பயன்படுத்தலாம்.


பிரண்டை வெட்டும் போது கவனத்துடன் வெட்ட வேண்டும். மெலிதாக இருக்கும் பகுதியை மட்டும் வெட்டி கொள்ளவும். தோல் நீக்கி விட்டு, இரண்டு தண்டுகளுக்கு இடையில் இருக்கும் பகுதியை வெட்டி எடுத்து விடவும். பிரண்டை வெட்டுவதற்கு சில படங்களை இதில் இணைக்கப்பட்டுள்ளது






காளான் ஒரு Superfood தெரியுமா? - மஷ்ரூம் புலாவ் ரெசிப்பியை நிறைய பேரு கூகுள் பண்றாங்க..!