சமூக வலைதளங்களில் பொழுதுபோக்கு வீடியோக்கள் தவிர, ஏதாவது சிறப்பு நிகழ்வுகள் வைரல் ஆகும். அதுவும் விமானத்தில் நடக்கும் நிகழ்வுகள் என்றால் பலருக்கும் ஃபேவரைட்டாக இருக்கும். சில சிறப்பு வீடியோக்களும் வெளியாகும். அப்படி ஒரு வீடியோ வெளியாகியுள்ளது. விமானி ஒருவர் தனது மகளின் முதல் விமான பயணத்தை கொண்டாடும் வீடியோ சமூக வலைதளத்தில் கவனத்தை ஈர்த்து வருகிறது. பலரும் இதை கண்டு நெகிழ்ச்சியுடன் கமெண்ட் செய்து வருகின்றனர். 


செல்ல மகளே.. பறக்கலாம் வா..


விமானி ஒருவர் தனது குழந்தையின் முதல் விமான பயணம் குறித்து அங்குள்ளவர்களுக்கு அறிவிக்கிறார். அனைவரிடமும் தனது மகளின் முதல் விமான பயணம் குறித்த மகிழ்ச்சியை பகிர்ந்துகொள்கிறார். செளத்வெஸ்ட் ஏர்லைன்ஸ் (Southwest Airlines) நிறுவனத்தின் விமானி தனது குழந்தையுடன் மேற்கொண்டிருக்கிறார். அவரது மனைவியும் இந்தப் பயணத்தில் உடன் இருந்திருக்கிறார். வீடியோவில் மகளின் முதல் விமான பயணம் தொடர்பாக அறிவித்திருக்கிறார். இந்த வீடியோ க்யூட்டாக இருக்கிறது. தந்தை தன் மகளின் மீது வைத்துள்ள அன்பையும் வெளிப்படுத்துவது பலரையும் நெகிழ்ச்சியடைய செய்துள்ளது.


குழைந்தையை கையிலேந்தியபடி, விமானி பென் அறிவிபை வெளியிடுகிறார். அந்த வீடியோவில், ”அனைவருக்கும் வணக்கம். நான் உங்க பைலட் பென். உங்கள் அனைவரையும் டென்வர் வரை அழைத்துச் செல்ல இருக்கிறேன். என்னுடன் சேர்ந்து மிஸ் எல்லி ரோஸ் உடன் பயணிக்கிறார். இது அவருக்கு முதல் விமான பயணம். ரோஸ் எனது மகள். இந்தப் பயணம் எனக்கு மிகவும் சிறப்பு வாய்ந்த பயணம்.” என்று பேசுகிறார்.






தனது மகளை அறிமுகம் செய்கிறார். ரோஸ் அப்பாவின் செயல்களை கண்டு ரசிக்கிறார். துள்ளளுடன் என்ன நடக்கிறது என்று கண்காணிக்கிறார் குட்டி செல்லம்.


சுட்டி மகள் குறித்து பேசும் பென், ” என் மகள் 90 சதவிதம் அமைதியானவர். புன்னகையுடன் இருப்பாள்; 10% நேரம் அழுவாள். அவர் உங்களுக்கு தொல்லை தரமால் பயணிப்பார். இல்லையெனில், அவரது அம்மாவிடம் கேளுங்கள். அவரும் விமானத்தில்தான் இருக்கிறார். நாம் மீண்டும் டென்வரில் சந்திப்போம்.” என்று அறிவிப்பை முடிக்கிறார்.


வீடியோ வைரல்


செள்த்வெஸ்ட் ஏர்லைன்ஸ் வலைதளத்தின் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள வீடியோ அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது. “We heard you needed an endorphin boost today." என்று கேப்சனுடன் பதிவிட்டுள்ளார்.


இந்த வீடியோவில் ஒருவர், “ நானும் இந்த விமானத்தில் பயணித்தேன். ரோஸ் க்யூட் குழந்தை. என் மகளுடன், என்னுடன் அமர்ந்து விளையாடினார். நினைவில் எப்போதும் இருக்கும் தருணம்.”என்று கமெண்ட் செய்துள்ளார்.


’ க்யூட் கான்வர்சேசன்!’, ‘அழகான வீடியோ!’, குழந்தையும் பைல் ட்ரெஸ் போட்டிருக்கிறது.’, ' அழகான வீடியோ!’, ’பெருமையாக உணவரும் தந்தை!’, ‘அழகு குட்டி!’, ‘மிகவும் சுட்டிக் குழந்தை. சிரித்துகொண்டே இருந்தாங்க.’ என்று பலரும் கமெண்ட் செய்திருக்கிறார்கள்.


முதல் விமான பயணம் ரோஸூக்கு நினைவு இருக்குமா என்று தெரியாது. ஆனால், அவர் வளர்ந்ததும் இந்த வீடியோ, ஃபோட்டோக்களை கண்டு அவர் ரசித்து மகிழ்வார் என்றும் சிலர் கமெண்ட் செய்து வருகின்றனர்.