பெற்றோர்களுக்குக் குழந்தையை வளர்ப்பது காலப்போக்கில் தந்திரமானதாக இருக்கலாம். குறிப்பாக உங்களுக்கு பல குழந்தைகள் இருக்கும்போது, அவர்கள் பகிர்ந்து கொள்ளும் உறவில் கவனம் செலுத்துவது முக்கியம், இதனால் வீடு அனைவருக்கும் ஆரோக்கியமாக இருப்பதை உறுதிசெய்யவும். குழந்தைகளை அவர்கள் வளர்க்கும் விதத்தில் கடினமான உணர்வுகள் இல்லாமல், ஆரோக்கியமான சூழ்நிலையில் வளர்வதை உறுதிசெய்ய, வீட்டில் ஆரோக்கியமான, பாதுகாப்பான மற்றும் திறந்த இயல்புடைய வெளியை உருவாக்குவது பெற்றோரின் பொறுப்பாகும்.
உளவியலாளர் எமிலி எச் சாண்டர்ஸ் பெற்றோர்கள் உடன்பிறந்தவர்களின் உறவுகளை பேணுவது பற்றி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து உரையாற்றி வருகிறார்.மேலும் குழந்தைகளிடையே ஆரோக்கியமான உறவுகளை மேம்படுத்துவதற்கு தவிர்க்க வேண்டிய விஷயங்கள் மற்றும் பெற்றோர்களால் ஊக்குவிக்கப்பட வேண்டிய விஷயங்கள் பற்றி தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார். "ஆரோக்கியமான உறவுகள் மலர வாய்ப்புள்ள பாதுகாப்பான மற்றும் அன்பான வீட்டை உருவாக்குவது முற்றிலும் உங்கள் பொறுப்பு. பாதுகாப்பின்மை போன்று வேறு எதுவும் சகோதரத்துவ உணர்வை அழிப்பதில்லை. போட்டியும் பிள்ளைகளிடம் சார்புநிலை எடுப்பதும் பாதுகாப்பின்மை மற்றும் பதற்றத்தை உருவாக்குவதற்கான உறுதியான வழிகள்" என்று எமிலி எழுதினார்.
சகோதர உணர்வை பாதிக்கும் என அவர் பட்டியலிடும் பண்புகள் சில..
முன்னுரிமை அளிப்பது: ’எனக்கு அவனைதான் பிடிக்கும் உன்னைப் பிடிக்காது’ என சார்புநிலை எடுப்பது குழந்தையை மிக மோசமான முறையில் பாதிக்கலாம். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் அனைவருக்கும் ஒரே மாதிரியாக முன்னுரிமை காட்டுவது முக்கியம்.
போட்டி மனப்பான்மை: ஒரு குழந்தையை இன்னொருவருக்கு எதிராக நிறுத்துவது அல்லது ஒன்றை மற்றொன்றுக்கு உதாரணமாகப் பயன்படுத்துவது குழந்தைகளில் எதிர்மறையான வழியில் தாக்கத்தை உருவாக்கி அவர்களின் உறவைப் பாதிக்கும்.
கவனித்துக்கொள்ளச் சொல்வது: குழந்தைகள் ஒருவரையொருவர் கவனித்துக் கொள்ளும்படி கட்டாயப்படுத்துவது, அவர்களின் விருப்பத்திற்கு மாறாக, தீங்கு விளைவிக்கும்.
துஷ்பிரயோகம்: சில சமயங்களில் உடன்பிறந்தவர்களாலும் துஷ்பிரயோகம் வரலாம். சரியான நேரத்தில் தலையிட்டு தவறான நடத்தைக்கு தீர்வு காண்பது முக்கியம்.
இவையெல்லாம் பெற்றோர் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயம் என எமிலி தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.