பேலியோ என்ற பெயரில் இந்த டயட் எப்போது தொடங்கப்பட்டது என தெரிந்துகொள்ளலாம். 2.5 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் பேலியோ லித்திக் காலத்தில் எடுத்துக்கொள்ளப்பட்ட உணவை இப்போது சிறுமாறுதலுடன் எடுத்து கொள்வதுதான் இந்த பேலியோ டயட். பேலியோ டயட் எடுத்து கொள்வதால், எண்ணற்ற பயன்கள் இருக்கிறது. உடல் எடை குறையும், இரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டுப்பாட்டில் இருக்கும், தைராய்ட் ஹார்மோன் சீராக இயங்கும், இரத்த அழுத்தம் கட்டுப்பாட்டில் இருக்கும், இது போன்ற வாழ்வியல் குறைபாடு பிரச்சனைகளை சீராக வைக்கும். ஆனால் இதை மருத்துவர்களின் அறிவுரையின்றி கடைபிடிப்பது ஆபத்தானது.


இது போன்று எண்ணற்ற  பயன்கள் இருக்கிறது. இந்த டயட் முறையில் என்ன எடுத்துக்கொள்ள வேண்டும். எதை எடுத்துக்கொள்ள கூடாது என தெரிந்து கொள்வோம்.




இறைச்சி: ஆட்டுக்கறி , கோழி, மாட்டிறைச்சி, பன்றி இறைச்சி


மீன் மற்றும் கடல் உணவு - இறால், சால்மன், ஹேடாக் போன்ற கடல் உணவுகள் எடுத்து கொள்ளலாம்.


முட்டை - முட்டை வேகவைத்து எடுத்து  கொள்ளலாம். ஒமேகா 3 செறிவூட்டப்பட்ட முட்டைகளை சாப்பிடலாம்.


காய்கள் - ப்ரோக்கோலி, கோசுக்கீரை, வெங்காயம், கேரட், மிளகு மற்றும் தக்காளி


பழங்கள் - ஆப்பிள், ஆரஞ்சு, வாழைப்பழம், பேரீச்சம்பழம், ஸ்ட்ராபெர்ரி, புளுபெர்ரி


கிழங்கு வகைகள் - உருளைக்கிழங்கு,சர்க்கரை வள்ளி கிழங்கு  டர்னிப்ஸ்




கொட்டைகள் மற்றும் விதைகள்: பாதாம், அக்ரூட் பருப்புகள், வேர்க்கடலை,  சூரியகாந்தி விதைகள், பூசணி விதைகள் , ஆளிவிதைகள் மேலும் பல


ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் எண்ணெய்கள்: ஆலிவ் எண்ணெய், வெண்ணெய்  மற்றும் பிற




உப்பு மற்றும் மசாலா: கடல் உப்பு, பூண்டு, ரோஸ்மேரி மற்றும் மஞ்சள் போன்றவை.


எந்த உணவுகளை தவிர்க்க வேண்டும்.


பானங்கள் - சர்க்கரை சேர்த்த பானங்கள், குளிர்பானங்கள், சோடா, ஐஸ்கிரீம், பாஸ்ட்ரி வகைகள்




தானியங்கள்: கோதுமை, பாஸ்தா கோதுமை, கம்பு, பார்லி


பருப்பு வகைகள்: பீன்ஸ், பயறு மற்றும் பிற பருப்பு வகைகள்


பால்: குறைந்த கொழுப்பு கொண்ட பால் வகைகள். ஆனால்  பேலியோவின் சில அளவுகளில்  வெண்ணெய் மற்றும் சீஸ் போன்ற முழு கொழுப்புள்ள பால் எடுத்து கொள்ளலாம்.




தாவர எண்ணெய்கள்: சோயாபீன் எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய், பருத்தி விதை எண்ணெய், திராட்சை எண்ணெய், குங்குமப்பூ எண்ணெய் மற்றும் பிற.


பதப்படுத்தப்பட்ட உணவுகள் - இதில் ட்ரான்ஸ் கொழுப்பு அதிகம் இருப்பதால், இதை தவிர்க்க வேண்டும்.


செயற்கை சுவையூட்டிகள் மற்றும் சர்க்கரைகள்


டீ காபி குடிக்கலாமா?


காபி மற்றும் டீ இரண்டும் குறைந்த அளவில் எடுத்து கொள்ளப்படுகிறது. காபி ஆண்டி ஆக்ஸிடென்ட் நிறைந்து இருக்கிறது. க்ரீன் டீ எடுத்து கொள்ள பரிந்துரைப்படுகிறது. பட்டர் டீ என்ற புது டீ வகையும் இதில் அறிமுக படுத்தப்பட்டுள்ளது.


பேலியோ டயட் எடுத்து கொள்வதற்கு முன் மருத்துவரிடம் ஆலோசனை பெற்று உங்களது இரத்த அளவுகள், கொழுப்பு அளவுகள் அனைத்தையும் பரிசோதித்து எடுத்துக்கொள்ள வேண்டும். சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் விஷயங்களை பார்த்து டயட் எடுத்து கொள்ளாதீர்கள்