குளிர்காலத்தில் நீங்கள் உங்கள் நண்பர்கள் அல்லது குடும்பத்துடன் சென்றுவர பல இடங்களை கூகுளில் தேடுவீர்கள். அவற்றில் எப்போதும் மக்கள் சென்றுவரும் இடங்களே பரிந்துரைக்கப்படும். அதற்கு சற்று மாற்றாக நாக்பூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள மிகவும் அறியப்படாத சில பகுதிகள் குறித்த விவரங்களை உங்களுக்கு இங்கே நாங்கள் தருகிறோம்...


1. பச்மாரி மலை: பச்மாரி மலைவாசஸ்தலம் சத்புராவின் ராணி என்றும் அழைக்கப்படுகிறது. இந்த அரண்மனை நாக்பூரில் இருந்து 230 கிமீ தொலைவில் உள்ளது. இது காடுகள், நீர்வீழ்ச்சிகள், பாதைகள் மற்றும் குகைகளால் சூழப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் பார்க்க வேண்டிய மிக அழகான இடங்களில் ஒன்றாக பச்மாரி கருதப்படுகிறது. ஜடா சங்கர் குகை, பாண்டவ் குகை, துப்கர், மகாதேவ் மலைகள், டச்சஸ் நீர்வீழ்ச்சி, கிறிஸ்ட் சர்ச் அதன் காலனித்துவ கட்டிடக்கலை, மவுண்ட் ரோசா மற்றும் ரஜத் பிரபாத் நீர்வீழ்ச்சிகளை நீங்கள் இங்கே காணலாம்.






 


2. சிக்கல்தாரா மலை: இந்த மலை நகரத்திலிருந்து 230 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. அதன் அழகிய காட்சிகளைத் தவிர, சிக்கல்தாரா மலைப்பகுதி மெல்காட் புலிகள் சரணாலயத்திற்கும் பிரபலமானது.மேலும், ஆழமான பள்ளத்தாக்கு, பீம்குண்ட் மற்றும் பஞ்ச்போல் பாயிண்ட் ஆகியவற்றை பார்த்தபடி இது அமைந்திருக்கிறது. 15ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட பெரிய பள்ளத்தாக்கு மற்றும் கவில்கர் கோட்டை அருகே இது அமைந்துள்ளது.


 3. இகத்புரி: இகத்புரி மலை மகாராஷ்டிராவின் சிறந்த மலையேற்றப் பகுதியாகக் கருதப்படுகிறது. இமயமலையின் உயரமான சிகரங்களில் செய்யும் பாறை ஏறுதல் மற்றும் மலையேற்றம் ஆகிய இரண்டும் இங்கே சாத்தியமாகும். இகத்புரி மலைக்குச் செல்லும் வழியில், பாட்சா நதி, ஒட்டகப் பள்ளத்தாக்கு,  நீர்வீழ்ச்சிகளுக்கு பெயர் பெற்ற கட்டன்தேவி கோயில், திரிங்கல்வாடி கோட்டை மற்றும் தங்க பகோடாக்களைக் கொண்ட விபாசனா மையம் ஆகியவற்றையும் நீங்கள் இங்கே பார்வையிடலாம்.


4. ஜோஹர் மலை: புகைப்படம் எடுப்பதில் ஆர்வம் உள்ளவர்களுக்கு, ஜோஹர் மலைக்குச் செல்வது சிறந்த பயண இடமாக இருக்கும். ஜோஹர் மலைப்பகுதி நாக்பூரிலிருந்து 734 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இங்கு நீங்கள் சிர்பமால் அரண்மனை, ஜெய் விலாஸ் அரண்மனை, தப்தாபா நீர்வீழ்ச்சி, ஹனுமான் பாயின்ட், கல் மாண்ட்வி நீர்வீழ்ச்சி மற்றும் சத்ரபதி சிவாஜியால் கட்டப்பட்ட பரத்காட் கோட்டை ஆகியவற்றைப் பார்வையிடலாம்.


ஹேப்பி ஹாலிடேஸ்!