வாய்துர்நாற்றப் பிரச்சனை இருந்தால் செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை குறித்து சில டிப்ஸ்.
செய்யக்கூடியது:
1. பல் மருத்துவரைப் பாருங்கள்: பல் நோய் பல நோய்க்குக் காரணம் என்பார்கள். அதனால் ஆரோக்கியமான வாயை பேண பல் மருத்துவரை 6 மாதங்களுக்கு ஒருமுறையாவது பாருங்கள்.
2. இருமுறை பல் துலக்குங்கள்: ஆரோக்கியமான வாய்க்கு அன்றாடம் இரண்டு முறை பல் துலக்குங்கள்.
3. அடிக்கடி பற்களை ஃப்ளாஸ் கொண்டு சுத்தப்படுத்துங்கள். ஃப்ளூராய்டு டூத்பேஸ்ட் பயன்படுத்துங்கள்.
4. மவுத்வாஷ் நல்ல பலன் தரும். வாய் துர்நாற்றம் நீங்க மவுத்வாஷ் பயன்படுத்துங்கள்.
5. டங் ஸ்க்ரேப்பர் என்பது நாக்கில் உள்ள கெட்ட பாக்டீரியாக்களை அகற்றக்கூடியது. இது வாயை ஃப்ரெஷ்ஷாக வைக்கிறது.
6. இனிப்பில்லாத கம் பயன்படுத்தலாம். அது உமிழ்நீரை அதிகரிக்கும்.
7. நன்றாக தண்ணீர் அருந்த வேண்டும். நீர்ச்சத்து அதிகமாக இருந்தால் வாய் துர்நாற்றத்தை தவிர்க்கலாம்.
8. இனிப்பு மற்றும் அமிலத்தன்மை நிறைந்த உணவை அடிக்கடி சாப்பிடுவதைத் தவிர்த்துவிடுங்கள்.
9. நீங்கள் விளையாடுபவராக இருந்தால் வாய்க்கு மவுத்கார்டு போட்டுவிட்டு விளையாடுங்கள்.
10. உங்கள் பல் மருத்துவரின் பரிந்துரையை தவறாமல் பின்பற்றுங்கள்.
செய்யக்கூடாதது:
புகைப்பிடித்தலை தவிருங்கள். இதனால் பல்லில் மஞ்சள்நிறம் படியும், வாய் துர்நாற்றம் வீசும், பற்சிதைவு ஏற்படும். வாய்ப் புற்றுநோயை உண்டாக்கும்.
அதிகமான இனிப்புள்ள உணவுப் பொருட்களைத் தவிருங்கள். இதனால் ஈறு நோய் தவிர்க்கப்படும்.
கடினமான உணவுகளை அடிக்கடி சாப்பிடும்போதும் அது பற்சிதைவை உண்டாக்கும்.
மது அருந்துவதைத் தவிர்க்கவும். அது பற் கூச்சத்தை சரி செய்யும்.
ஐஸ்க்ரீம் மற்றும் பிற கடினமான உணவுகள் பற்சிதைவை உண்டாக்கும். பற்கூச்சத்தையும் உண்டாக்கும்.
புகையிலை பொருட்கள் பயன்பாட்டை தவிர்த்துவிடுங்கள்
சோடா, கார்பனேட்டட் ட்ரிங்ஸ் குடிப்பதைத் தவிர்க்கவும்
சர்வதேச வாய்துர்நாற்ற ஒழிப்பு தினம்:
ஆண்டுதோறும் மார்ச் 20ஆம் தேதி சர்வதேச வாய்துர்நாற்ற ஒழிப்பு தினம் கொண்டாடப்படுகிறது. இதன் முக்கிய நோக்கமே மக்கள் மத்தியில் வாய் சுகாதாரம் பேணுவதை எடுத்துரைப்பதே ஆகும். மக்கள் தங்களின் வாய் சுகாதாரம், பற்களின் ஆரோக்கியத்தை பேணுவதைப் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துவதே இந்த நாளின் நோக்கம்.
இந்த ஆண்டு உங்கள் வாயை நினைத்து பெருமிதம் கொள்ளுங்கள் “Be Proud of Your Mouth" என்பதே ஆகும். இது மூன்று ஆண்டுகளுக்கான கருப்பொருளாக தேர்வு செய்யப்பட்டுள்ளத். 2021ல் சர்வதேச டென்டல் ஃபவுண்டேஷன் இதனை தேர்வு செய்தது. முதலாம் ஆண்டு பிரச்சாரத்தின் போது வாய்நலத்தின் பொதுவான அவசியங்கள் பற்றி பிரச்சாரம் செய்யப்பட்டது. இரண்டாம் ஆண்டு அதாவது 2022ல் மகிழ்ச்சிக்கும் நலனுக்கும் ஆரோக்கியமான வாய் என்ற பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டது. இந்த ஆண்டு வாழ்வின் ஒவ்வொரு நிலையிலும் தேவை வாய் ஆரோக்கியம் என்ற பிரச்சாரம் மேற்கொள்ளப்படுகிறது.
சர்வதேச வாய்துர்நாற்ற ஒழிப்பு தின வரலாறு
சர்வதேச வாய்துர்நாற்ற ஒழிப்பு தினம் முதன்முதலில் 2007 ஆம் ஆண்டு திட்டமிடப்பட்டது. அந்த ஆண்டு செப்டம்பர் 12 ஆம் தேதி கொண்டாடப்பட்டது. அந்த நாள் தான் டாக்டர் சார்ல கோடோன் பிறந்தநாள். அவர் யார் என்று கேட்கிறீர்களா? அவர்தான் சர்வதேச டென்டல் ஃபவுண்டேஷனை நிறுவியவர்.