ஓணம் கேரள மக்களால் கொண்டாடப்படும் பாரம்பரிய பண்டிகைகளுள் ஒன்று. இந்த பண்டிகை உலகம் முழுவது உள்ள மலையாள சகோதரர்களால் கொண்டாடப்படுகிறது. அறுவடை நாளான ஓணம் பண்டிகை 10 நாட்கள் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு ஆகஸ்ட் 30 ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 8 ஆம் தேதி வரையில் ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது. ஓணம் பண்டிகையில் உணவு , உடை என ஏகப்பட்ட சிறப்பம்சங்கள் உள்ளன. அந்த வகையில் பூக்கோலமும் மிக பிரதானமான ஒன்று . திருவிழாவின் முதல் நாளில், மலர் ரங்கோலி 'அத்தாப்பூ' என்று அழைக்கப்படுகிறது. அத்தப்பூக்களத்திற்குப் பயன்படுத்தப்படும் மலர்கள் பொதுவாக தனித்துவமானது. அவற்றின் வகைகளை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
செம்பருத்தி :
தென்னிந்தியாவில் பலருக்கும் பரீட்சியமான இந்த பூ இல்லாத மலர் கோலத்தை பார்க்கவே முடியாது. அடுக்கு செம்பருத்தி , ஒற்றை செம்பருத்தி என இரு வகைகளில் பூக்கும் இந்த பூ சிவப்பு, மஞ்சள் , வெள்ளை மற்றும் அடர் சிவப்பு நிறங்களில் பூக்கும்.
தும்பா:
தும்பா அல்லது சிலோன் ஸ்லிட்வார்ட் என்பது பூக்களம் தயாரிப்பதில் அவசியமான ஒரு சிறிய வெள்ளை மலர் ஆகும். முதல் நாள் அன்று ஓணம் பூக்களுக்குப் பயன்படுத்தப்படும் பூ இது மட்டுமே.
துளசி:
துளசி பூ மற்றும் அதன் இலைகள் பூக்கோலத்திற்கு மிகவும் முக்கியமானது. துளசியின் பச்சை நிறம் ரங்கோலியை பிரகாசமாக்குகிறது, அதே நேரத்தில் வாசனையையும் பரப்புகிறது.
சாமந்தி :
சாமந்தி மகிழ்ச்சியின் மலர்கள் என்று அழைக்கப்படுகின்றன. சிவப்பு, மஞ்சள், ஆரஞ்சு, வெள்ளை போன்ற பல்வேறு வண்ணங்களில் இந்த மலர்களை நீங்கள் காணலாம்.பூக்கோளத்தில் சாமாந்தியை பயன்படுத்தும் பொழுது உங்கள் ஓணம் பண்டிகையே நிறைவானதாக இருக்கும்.
சேத்தி :
காடுகளின் சுடர் என அழைக்கப்படும் பூதான் சேத்தி. சிறு சிறு மலர்கள் அடங்கிய பந்து போன்ற ஒரு வகை பூ. இது சிகப்பு , மஞ்சள் உள்ளிட்ட வண்ணங்களிலும் பூக்கும். இதுவும் மலர் கோலத்திற்கு உகந்தவை.
சங்குபுஷ்பம்
சங்குபுஷ்பம் மஞ்சள் நிற மையத்துடன் கூடிய அழகான நீல மலர் ஆகும். இது கேரளாவின் ஒவ்வொரு பகுதியிலும் காணப்படும் . ஓணத்தின் போது பூக்கும் இந்த பூ பூக்கோளத்தில் பயன்படுத்தப்படும் மிகவும் பிரபலமான பூக்களில் ஒன்று.