பிரம்மாஸ்திர படம் ரிலீஸாகும் தருவாயில், அப்படக்குழுவினர் மும்பையில் உள்ள ஒரு திரையரங்கில் நேற்று படத்தை கண்டுள்ளனர்.இதில் படத்தின் முக்கிய கதாப்பாத்திரங்களான  ரன்பீர் கபூர், ஆலியா பட், அயன் முக்கர் ஜி, ஆலியாவின் தங்கை ஷஹீன் பட் ஆகியோர் பங்கு பெற்றுள்ளனர்.


இன்று, அவர் இன்ஸ்டா பக்கத்தில்  ஒரு வீடியோவை பதிவிட்டுள்ளார். அதில் ரன்பீருடன் இருக்கையில் அமர்ந்தபடியே, “நாங்கள் பிரம்மாஸ்திர படத்தை, முப்பரிமாணத்தில் பார்ப்பது இதுவே முதல் முறை.” என்று பேசினார்.






அதற்கு பின் நடிகர் ரன்பீர் கப்பூர், “ வரும் செப்டம்பர் 8, அதாவது 8-ஆம் எண் எங்களின் அதிர்ஷ்டமான எண்னாகும். படம் வெளியாகும் முன்னாளான இந்தநாளில் ரசிகர்களுக்கான சிறப்பு காட்சி ஒன்றை திரையிட போகிறோம்.” என்று கூறினார். இவர்களுக்கு பின் உள்ள இருக்கைகளில், படக்குழுவினர் கூலாக அமர்ந்து படம் பார்த்தனர். படத்தை காண கணவன் மனைவி இருவரும் ஸ்டைலாக உடை அணிந்து சென்றனர்.






அயன் முக்கர் ஜீ இயக்கிய இப்படத்தை கரண் ஜோஹரின் தர்மா  ப்ரடக்ஷன்ஸ்  நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தின் அமிதாப் பச்சன், நாகர்ஜூனா மற்றும்  மவுனி ராய் நடித்துள்ளனர். படத்தின் ப்ரொமோஷனுக்காக, இயக்குநர் அயன், அவரின் இன்ஸ்டாவில் படத்தின் மேக்கிங் காட்சிகளையும், 
ரன்பீரின் குட்டி வீடியோவையும் ஷேர் செய்தார்.


படத்தை பற்றி கவலை பட வேண்டாம், இப்படம் நிச்சயமாக உங்களுக்கு புதுவிதமான ஒரு அனுபவத்தை கொடுக்கும் என்று கூறினார். வரும் செப்டம்பர் 9 ஆம் தேதி இப்படம் வெளியாகும் என்பது குறிப்பிடதக்கது.