கேரளாவின் அறுவடை திருநாளான ஓணம்(Onam) பண்டிகையில் கொண்டாட பல்வேறு விசயங்கள் இருந்தாலும் ஓணம் சத்யாவில்(Onam Sadhya) கண்கவர், ருசியான உணவு வகைகள் மிகவும் பிரபலமானவை.


ஓணம் பண்டிகை:


ஓணம் பண்டிகையை மலையாள மக்கள் 10 நாட்கள் கொண்டாடுகின்றனர். அதாவது, மலையாளத்தில் சிம்ம மாதமான இந்த மாதத்தில் வரும் 20-ஆம் தேதி முதல் 29-ஆம் தேதி வரை என 10 நாட்கள் திருவோண பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதில் மிகப்பெரிய திருவிழாவான திருவோண நட்சத்திரத்தில் வரும் திருவோண பண்டிகை நாள் வரும் 29-ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.




ஓணம் அத்தப்பூ கோலம், அலங்காரம் உள்ளிட்ட பலவற்றை குறிப்பிட்டாலும் நாவுக்கு விருந்தளிக்கும் வகையில் தயாரிக்கப்படும் ஓணம் சத்யா(Onam Sadhya) உணவுகளைப் பற்றி இக்கட்டுரையில் காண்போம். 


ஓணம் சத்யா உணவுகள் | Onam Sadhya Items:


 

தேங்காய் எண்ணெய், நெய், முந்திரி மற்றும் தேங்காய்ப் பால் போன்ற பொருட்களைக் கொண்டு ஆரோக்கியமான முறையில் சத்யா உணவுகள் தயாரிக்கப்படுகின்றன. இந்த உணவில் குறைந்தது 26 வகையான உணவுகளாவது இருக்கும். அதிகபட்சமாக 64 உணவுகள் வகைகள் வரை மதிய உணவு பரிமாறப்படும். வாழையிலையில் வைக்கப்படும் அத்தனை உணவுகளையும் உண்ணும்போது அப்படா.. அப்படியொரு உணர்வு இருக்கும். 


சத்யா உணவுகள் ஆரோக்கியமானதாக, குறைந்த அளவு மசாலாவை கொண்டு தயார் செய்யப்படும். சுவை சொல்லில் விவரிக்க முடியாதது எனலாம்.


சத்யாவில் சிவப்பு அரிசி அல்லது பழுப்பு அரிசி இடம்பெறும். கெட்டியான பருப்பு, புளி தக்காளி, ரசம், காய்கறிகளுடன் சாம்பார் லிஸ்ட் நீளும்.


காலன்


அதென்ன காலன் - தயிர், தேங்காய், நேர்துர வாழைப்பழம் அல்லது கிழங்குகளைப் பயன்படுத்தி தயார்செய்யப்படும் பாரம்பரிய உணவு.


அவியல்


பலவகையான காய்கறிகளுடன் குறைந்த அளவில்  மசாலா சேர்த்து தேங்காய் பால், தேங்காய் எண்ணெய் தாளித்து செய்த அவியல்.. அப்பப்பா.. இதன் ருசி சாப்பிட்டவர்களுக்கு நன்றாக தெரியும்.


ஓலன்


கேரள் பாரம்பரிய உணவு ஓலன். மசாலா ஏதும் சேர்க்காமல் பரங்கிக் காய், பட்டாணி, தேங்காய் பால் கலந்து செய்யப்படும் ஒரு உணவு.


கூட்டுக்கறி


சன்னாவோடு வாழைப்பழம் அல்லது கிழங்கு சேர்த்து சமைக்கப்படும் உணவு.


ALSO READ | September 2023 Festivals: பக்தர்களே... விநாயகர் சதுர்த்தி, கிருஷ்ண ஜெயந்தி, மிலாடி நபி.. செப்டம்பரில் இவ்வளவு பண்டிகையா..?