வாரத்திற்கு 70 மணி நேர பணி நேரத்திற்கு ஓலா தலைமை செயல் அதிகாரி பவிஷ் அகர்வால் ஆதரவு தெரிவித்திருப்பதை மருத்துவர்கள் விமர்சித்து வருகின்றனர்.  


இன்ஃபோசிஸ் நிறுவனர் நாராயணமூர்த்தியை இளைஞர்கள் வாரத்திற்கு 70 மணிநேரம் வேலை செய்தால் இந்தியாவின் உற்பத்தியின் மேம்படும் என்று நம்புவதாக கடதாண்டு பாட்காஸ்ட் ஒன்றில் கருத்து தெரிவித்திருந்தார். அதோடு, சமூக வலைதளத்தில் இதற்கு கடும் விமர்சனங்கள் எழுந்தபோதும் கடுமையான உழைப்பால் மட்டுமே நாட்டின் பொருளாதாரம் உயரும் என்று தெரிவித்திருந்தார்.


இப்போது ஓலா சி.இ.ஓ. பவிஷ் அகர்வால் வாரத்திற்கு 70 மணிநேர வேலை என்ற முறையை ஆதரிப்பதாக சமீபத்தில் இரு பாட்காஸ்ட்டில் தெரிவித்திருந்தார். இது சமூக வலைதலத்தில் பேசுபொருளாகியுள்ளது. பல மருத்துவர்கள் இது தொடர்பான விளக்கம் அளித்து வருகின்றனர்.


பணி நேரம் குறித்து அகர்வால் பேசுகையில்,”எனக்கு ஒர்க் லைஃப் பேலன்ஸ் என்ற கான்செப்டில் நம்பிக்கை இல்லை. பிடித்த வேலையை செய்யும்போது அயர்ச்சி இருக்காது. பணி, தனிவாழ்க்கை இரண்டும் சரியாக அமைந்துவிடும்” என்று தெரிவித்ததுடன் வாரத்திற்கு 70 மணிநேரம் வேலை செய்வதை ஆதரிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.


இதற்கு சமூக வலைதளத்தில் ஏராளமானோர் கருத்து தெரிவித்து வருகின்றனர். 


இவரின் கருத்திற்கு நரம்பியல் மருத்துவர் சுதிர் குமார் எக்ஸ் தளத்தில்,”வாரத்திற்கு 55 மணி நேரத்திற்கு மேல் வேலை செய்பவர்களுக்கு 35% ஸ்ட்ரோக் அல்லது இதய பாதிப்புகளால் இறக்கும் அபாயம் இருப்பதாக சில ஆய்வுகள் தெரிவிக்கின்றனர்” என்று குறிப்பிட்டுள்ளார்.






அதிக நேரம் குறிப்பிட்ட அளவு ஓய்வு இல்லாமல் எந்த வேலை செய்தாவும் அது கடுமையான உடல் பாதிப்புகளுக்கு வழிவகுக்கும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். 


“அதிக நேரம் வேலை செய்வது பல்வேறு உடல்நல சிக்கல்களை ஏற்படுத்தும். அதோடு, சிறுவயதிலேயே இறக்கும் அபாயம் இருக்கிறது. ஆண்டுக்கு 8 லட்சம் பேர் அதிக பணி நேரம் காரணமாக பல்வேறு உடல்நல பாதிப்புகளுக்கு உள்ளாகியுள்ளனர்.” என்று விளக்கம் அளித்துள்ளார்.


எந்த நிறுவனமாக இருந்தாலும் பணியாளர் நலனில் கொஞ்சமேனும் அக்கறையுடன் இருக்க வேண்டும். அப்படிப்பட்ட நிறுவனத்தின் பணி செய்வதை உறுதி செய்ய வேண்டும் என்றும் சுதிர் குமார் பரிந்துரைக்கிறார்.


உடல்பருமன், நீரிழிவு நோய்க்கு முந்தைய நிலை பாதிப்பு, டைப் 2 வகை நீரிழிவு உள்ளிட்ட தீவிர உடல்நல பிரச்சனைகளை ஏற்படுத்தும் என்று எச்சரிக்கிறார். எந்த அளவிற்கு உழைக்கிறோம் அதே அளவுக்கு ஓய்வு எடுப்பதும் அவசியமானது. அது குறித்த எந்த குற்றவுணர்வும் கொள்ள தேவையில்லை என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். அதிக நேரம் பணி செய்வது குறித்து சமூக வலைதளத்தில் விவாதித்து வருகின்றனர். உலக அளவில் பல்வேறு போராட்டங்களுக்கு பிறகு சராசரி பணிநேரம் 8 மணி நேரம் ஆக நிர்ணயிக்கப்பட்டது. எனில், தொழிலாளர்கள் சராசரியாக வாரத்திற்கு 40-45 மணி நேரம் வேலை செய்கின்றனர்.


அப்படியிருக்கையில், அதிக நேரம் வேலை செய்வது பாதிப்புகளை ஏற்படுத்து குறித்து மருத்துவர்களின் விளக்கத்தை ஆதரித்து கமெண்ட் செய்து வருகின்றனர்.