எடை குறைக்கும் முயற்சியில் இருப்பவர்கள் உணவாக சாப்பிட்டால் எடை அதிகமாகிறது, அதனால் ஜூஸ் குடித்து பழக்கப்பட்டிருப்பார்கள். என்ன மாதிரியான ஜூஸ் குடித்தால் என்ன மாதிரியான விளைவுகள் வரும் என தெரிந்து கொள்ளலாம். கடைகளில் கிடைக்கும் அனைத்து ஜூஸ் வகைகளும், உடலுக்கு ஆற்றலை தருவதில்லை. மாறாக சில ஜூஸ் வகைகள் உடல் எடையை அதிகரிக்கும்.




பாட்டில்களில் அடைத்த புரூட் ஜூஸ் - கடைகளில் அனைத்து பழ ஜூஸ்களும், பாட்டில்களில் அடைத்து விற்கின்றனர். இது நீண்ட  கெடாமல் இருப்பதற்காக செயற்கை சர்க்கரை மற்றும் ரசாயனங்கள் சேர்க்க படுகிறது. இது அதிக கலோரி கொண்ட உணவாக இருக்கிறது. புரூட் ஜூஸ் குடிக்க வேண்டும் அதனால் எடை குறையும் என்று இது போன்ற பாட்டில்களில் அடைத்த ஜூஸ் வகைகளை பருக்காதீர்கள்.இதற்கு சிறந்த மாற்றாக அவ்வப்போது தயாரிக்கப்படும், பிரெஷ்  ஜூஸ் வகைகளை எடுத்து கொள்ளுங்கள். 




எனர்ஜி ட்ரின்க் - எனர்ஜி ட்ரின்க் என விற்கப்படும் பானங்கள் அனைத்தும் அதிக கலோரி கொண்டதாக இருக்கிறது. இதில் ரசாயனங்கள் அதிகளவு சேர்க்க படுகிறது. மேலும் இது உடலுக்கு தேவையான ஆற்றலையும் அளிப்பதில்லை. இது போன்ற ஜூஸ் வகைகளை தவிர்த்திடுங்கள்.




ஸ்வீட் டீ - தினம் டீ அல்லது காபி குடிக்கும் பழக்கம் பெரும்பாலோனோருக்கு இருக்கும். க்ரீன் டீ, லெமன் டீ, மூலிகை டீ என ஏதேனும் ஒன்றை எடுத்து கொள்ளும் பழக்கம் இருக்கும்.  அதிலும் சிலருக்கு ஸ்வீட் ஐஸ் டீ குடிக்கும் பழக்கம் இருக்கும். இதில் 200-400 கலோரிகள் வரை இருக்கும். அதனால் இந்த டீ வகைகளை தவிர்த்திடுங்கள். குறிப்பாக உடல் எடை குறைக்கும் முயற்சியில் இருப்பவர்கள் இதை தவிர்க்க வேண்டும்.




ஆல்கஹால் - ஆல்கஹால் குடிப்பதால் உடல் எடை அதிகமாகும். என்ன வகையான ஆல்கஹால் குடித்தாலும், அதிக கலோரி  கொண்டது.  உடல் எடை குறைக்கும் முயற்சியில் இருப்பவர்கள் இதை தவிர்த்திடுங்கள். அதிகமாக ஆண்களுக்கு  தொப்பை பெரிதாவதற்கு இதுவும் ஒரு காரணம்.




தண்ணீர் பற்றாக்குறை  - தாகம் எடுத்தால் தண்ணீர் குடிக்க வேண்டும் என்று நினைத்து கொண்டு  இருப்பார்கள். இதனால் ஒரு நாளைக்கு தேவையான தண்ணீர் குடிக்காமல் இருப்பார்கள். பொதுவாக தண்ணீர் குடிப்பதால் உடல் அனைத்து இயக்கங்களும் சீராக இருக்கும். 2-3 லிட்டர் தண்ணீர் அவசியம். இது பருவநிலை, உடல் உழைப்பு அனைத்தையும் சார்ந்தது. குறிப்பாக உடல் எடை குறைக்கும் முயற்சியில் இருப்பவர்கள் கட்டாயம் அதிகம் தண்ணீர் குடிக்க வேண்டும்.