உடலுக்குத் தேவையான முக்கிய ஊட்டச்சத்துகள் நிறைந்தது ஓட்ஸ்.  இதில் நார்ச்சத்து, புரதம் வைட்டமின்கள், மெக்னீசியம், பாஸ்பரஸ், தாமிரம், இரும்பு, துத்தநாகம் மற்றும் பிற தாதுக்கள் நிறைந்துள்ளது. இது இரத்த சர்க்கரை மற்றும் கெட்ட கொழுப்பு (எல்டிஎல்) அளவைக் குறைப்பது போன்ற பல ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது. ஓட்ஸ் உப்மா, ஓட்ஸ் தோசை, ஓட்ஸ் இட்லி, ஓட்ஸ் சத்துமாவு என் பல உணவுகளை செய்து சாப்பிடலாம். 


உடல் எடை:


உடல் எடை குறைக்க வேண்டும் என்று விரும்புபவர்கள் உணவில் ஓட்ஸ் சேர்த்துக்கொள்வார்கள். ஏனெனில் அதில் கலோரி குறைவு; ஊட்டச்சத்தும் அதிகம். ஓட்ஸ் சாப்பிடுவது உடல் எடையை குறைக்க உதவுமா என்பது பற்றி ஊட்டச்சத்து நிபுணர் கார்கி சொல்லும் தகவல்களை காணலாம். 


ஓட்ஸ் எப்படி உடல் எடையை குறைக்க உதவுகிறது என்றால் அதிலுள்ள soluble fibres கொழுப்பு அளவு அதிகரிக்காமல் இருக்க உதவும். உடலில் குளுகோஸ் அளவு அதிகமாக உறிஞ்சப்படாமல் இருக்க உதவுகிறது என்கிறார். 


உடலிலுள்ள கொழுப்பு குறைய ஓட்ஸ் உதவுமா?


ஓட்ஸில் நிறைந்த ஊட்டச்சத்து அதிகமாக இருக்கிறது. இருப்பினும், இதிலுள்ள கார்போஹைட்ரேட் அதிக க்ளைகமிக் கொண்டிருக்கிறது. இது இன்சுலின் ஸ்பைக்கிற்கு வழிவகுக்கலாம் மற்றும் கவனத்துடன் எடுத்துக் கொள்ளாவிட்டால் நீரிழிவு அபாயத்தை அதிகரிக்கலாம். என்று அவர் எச்சரிக்கிறார்.


ஊட்டச்சத்து நிபுணர் லீமா மகாஜன் கூறுகையில், "நீங்கள் பயன்படுத்தும் மூலப்பொருளைப் பொறுத்து ஓட்ஸ் உங்கள் ஆரோக்கியத்திற்கு நல்லது அல்லது கெட்டது. நீங்கள் அதிக கிளைசெமிக் குறியீட்டைக் கொண்ட உடனடி ஓட்ஸைப் பயன்படுத்தினால், இனிப்புப் பழங்களைச் சேர்த்தால், அது அவ்வளவு ஆரோக்கியம் கொண்டதாக இருக்காது. இது உங்களுக்கு இனிப்பான உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும் என்ற உணர்வை அதிகரிக்கும். சோர்வு உணர்வையும் அதிகரிக்கும்.” என்று தெரிவிக்கிறார்.


உதவாது:


ஊட்டச்சத்து நிபுணர் அஞ்சலி முகர்ஜி விளக்குகிறார், "ஓட்ஸ் அல்லது எந்த உணவும் எடை இழப்புக்கு உகந்த நெறிமுறையில் சேர்க்கப்படும் வரை எடை இழப்புக்கு உதவாது." ஓட்ஸ், அவற்றின் உயர் கிளைசெமிக் குறியீட்டின் காரணமாக, குறைந்த கிளைசெமிக் குறியீட்டைக் கொண்ட மற்றும் மிதமான நார்ச்சத்து கொண்ட உணவுகளுடன் இணைக்கப்பட வேண்டும் என்று அவர் மேலும் கூறுகிறார்.


"இது உணவை நீரிழிவு நோயாக மாற்றுகிறது, மேலும் எடை இழப்புக்கு உதவுகிறது," என்று அவர் மேலும் கூறுகிறார். எடை இழப்பு செயல்முறையை விரைவுபடுத்துவதற்கு "உங்களுக்குத் தேவையான மெதுவான மற்றும் நிலையான ஆற்றலை" வழங்குவதால், உடனடி ஓட்ஸுக்குப் பதிலாக மக்கள் ஸ்டீல்-கட் ஓட்ஸைப் பயன்படுத்தவும் அவர் பரிந்துரைக்கிறார்.


உடல் எடை குறைய ஓட்ஸ் எப்படி எடுத்துக்கொள்ள வேண்டும்?


உடல் எடையை நிர்வகிக்க வேண்டும் என்று விரும்புபவர்கள் ஓட்ஸ் எப்படி சாப்பிட வேண்டும் என்று ஊட்டச்சத்து நிபுணர் அஞ்சலி முகர்ஜி விளக்குகிறார்.  "ஓட்ஸ் அல்லது எந்த உணவும் எடை இழப்புக்கு உகந்த நெறிமுறையில் சேர்க்கப்படும் வரை எடை குறைக்க உதவாது. உதாரணமாக ஓட்ஸ் உடன் அதிக கிளைசெமிக் குறியீடு கொண்டுள்ளதால் அதோடு குறைந்த அளவிலான க்ளைகமிக் கொண்ட உணவுகளை சேர்த்து சாப்பிட வேண்டும்,” என்று தெரிவித்துள்ளார்.


”ஸ்டீல் கட் ஓட்ஸ் சாப்பிடுவது நல்லது. அதோடு, ஓட்ஸ் உடன் அதிகம் இனிப்பு சேர்க்காமல் இருப்பதும் உடல் எடையை குறைக்க உதவும்.” என்று தெரிவித்தார். குறைந்த கலோரிகள் உணவுகளை சாப்பிடுவது, உங்களுக்குப் பிடித்த உணவாக இருந்தாலும் அதை அளவோடு சாப்பிடுவது ஆரோக்கியமான முறையில் உடல் எடையை குறைக்க உதவும் என்கின்றனர் ஊட்டச்சத்து நிபுணர்கள்.


வால்யூம் ஈட்டிங் முறையை எப்படி பின்பற்றுவது என்று ஊட்டச்சத்து நிபுணர் சுஹானி சொல்லும் டிப்ஸ் 



  • ஒரு வேளை உணவில் நிறைய காய்கறிகள் இருக்குமாறு பார்த்துகொள்ளுங்கள். கீரை, வெள்ளரிக்காய், ஜூகினி, ஆம்லெட், சால்ட உள்ளிட்டவற்றை சாப்பிடுங்க.

  • ஸ்நாக்ஸ் சாப்பிட வேண்டும் என்றால் பாக்கெட்களில் அடைக்கப்பட்டவற்றை சாப்பிட வேண்டாம். மாறாக நிறைய பழங்கள், சிறு தானிய வகைகள், கேரட், யோகர்ட் ஆகியவற்றை சாப்பிடவும். 

  • எண்ணெயில் பொரித்த உணவுகளுக்கு நோ சொல்லுங்க. கெட்ட கொழுப்புள்ள உணவுகளை சாப்பிட வேண்டாம். 

  • சமைக்கும்போது அதிகளவு எண்ணெய் சேர்க்க வேண்டாம். 

  • வேகவைத்த உணவுகளை சாப்பிடுவது நல்லது. 

  • ஓட்ஸ் ஆம்லெட், ஓட்ஸ் தோசை, காய்கறிகள் சேர்த்த ஓட்ஸ் கட்லட் உள்ளிட்டவற்றை முயற்சி செய்யலாம்.