இன்னும் மூன்று நாட்களில் 2023-ம் ஆண்டு முடிய இருக்கிறது. புத்தாண்டை வரவேற்க ஆவலுடன் காத்திருக்கிறோம். நண்பர்கள், உறவினர்களுடன் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு திட்டமிட தயாராகி கொண்டிருப்பீர்கள்,இல்லையா? சிலர் டயட் ஃபாலோ செய்பவர்களாக இருப்பார்கள். உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் நோக்கத்துடன் புத்தாண்டு பிறந்ததும் டயட் தொடங்க திட்டமிட்டுருப்பார்கள். இப்படி இருக்கையில் பார்ட்டியின் போது சுவையாகவும் ஆரோக்கியத்துடன் உணவு இருந்தால் மகிழ்ச்சியுடன் கொண்டாடலாம் இல்லையா?


சிலர் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது வெளியே சென்று சாப்பிடுவது, பிக்னிச் செலவது என்று இருக்கும். சிலரோ நெருங்கிய நண்பர்கள், உறவினர்களோடு வீட்டிலேயே பார்ட்டி இருக்கும். 
புத்தாண்டு பார்ட்டி ஹாஸ்ட் செய்யும் திட்டம் இருந்தால் ஆரோக்கியமான சில உணவுகளை ஊட்டச்சத்து நிபுணர்கள் பரிந்துரைக்கிறார்கள்.


ஹெல்தி ராப்


ரோல், Wrap ஆரோக்கியமான தேர்வு. முளைக்கட்டிய பச்சை பயறு, சோயா, ராஜ்மா உள்ளிட்டவற்றை வேக வைத்து எடுத்து கொள்ளவும்.கோதுமையா மாவில் மிருந்துவான சப்பாத்திகளை தயாரிக்கவும். பச்சை பட்டாணி, சர்க்கரைவள்ளி கிழங்கு ஆகியவற்றையும் வேக வைத்து சேர்க்கலாம். இதெல்லாம் தயார் செய்துவிட்டால் போது. வெங்காய, தக்காளி, சாட் மசாலா, சில்லி ஃப்ளேக்ஸ், தக்காளி சாஸ், மையோனஸ் என சேர்த்து சப்பாத்தியில் வைத்து ராப் செய்தால் ரெடி.


பராத்தா


பனீர், காலிஃபளவர், உருளைக் கிழங்கு வைத்து பராத்தா செய்யலாம். தயிர், ஊறுகாய் உடன் சாப்பிட சுவையாக இருக்கும்.


Happy Bowl


கேரட், வெள்ளரிக்காய், வேகவைத்த நிலக்கடலை, ராஜ்மா போன்ற விரும்பான காய்கறி,வேக வைத்து சிறிய துண்டுகளாக நறுக்கிய இறைச்சி என மீல் பவுல் தயாரிக்கலாம். போலவே பழங்களை வைத்தும் சால்ட் செய்யலாம். 


பாலக்கீரை புலாவ்


கொண்டைக்கடலை, பாலக்கீரை இரண்டையும் சேர்த்து புலாவ் செய்வது எப்படி என்று பார்க்காலம். உணவில் தினமும் கீரை இடம்பெற வேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள். ஏதாவது ஒரு தானிய வகையும் இருந்தால் நல்லது. இரவு ஊறவைத்த கொண்டைக்கடலையை நன்றாக வேகவைத்து தனியே வைக்கவும். சுத்தம் செய்யப்பட்ட பாலக்கீரையை மிக்ஸியில் கொஞ்சம் அரைத்தெடுக்கவும்.  குக்கர் அல்லது பாத்திரம் பயன்படுத்தலாம். அடுப்பில் மிதமான தீயில், குக்கரை வைத்து எண்ணெய் அல்லது நெய் 4 டேபிள் ஸ்பூன் ஊற்றவும். நெய் சூடானதும் அதில், பச்சை ஏலக்காய், பிரியாணி இலை, கிராம்பு, சீரகம், பச்சை மிளகாய், நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும்.  வெங்காயம் நன்றாக வதங்கியதும், இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து பாலக்கீரை விழுதை சேர்த்து சிறிது நேரம் வதக்கவும். பாலக்கீரை கொஞ்ச்ம நிறம் மாறியதும் வேகவைத்த கொண்டைக்கடலையை சேர்த்து, கரம் மசாலா, உப்பு சேர்த்து கலக்கவும். இதோடு, ஊற வைத்த அரிசியை சேர்த்து குக்கரை மூடி 3 விசில் வர விடவும். இந்த முறையில் செய்ய கொண்டைக்கடலை வேக வைக்காமலும் சேர்க்கலாம். புலாவ் மாதிரி செய்யும் முறை. ரைஸ் மாதிரி செய்ய வேண்டும் என்றால் அரிசியை வேக வைத்து எடுக்கவும்.  பாத்திரத்தில் செய்வதானால், 20-30 நிமிடங்கள் வரை வெந்ததும் கொண்டைக்கடலை பாலக்கீரை சாதம் ரெடி.


அரிசி வைத்து செய்யும் உணவுகளில் பிரியாணி தவிர்த்து புலாவ், ராஜ்மா ரைஸ், பலாக்காயில் (பலா முசு) (பலாப்பழம்) பிரியாணி என செய்து அசத்தலாம். ஒட்ஸ் பொங்கல், ஓட்ஸ் கட்லட் என செய்யலாம்.


இனிப்பு 


ரோஸ் மில்க் எசன்ஸ், வீட்டிலேயே தயாரித்த பாதம் பவுடருடன் பால் சேர்த்தால் ரோஸ் மில்க் / பாதம் கீர் ரெடி. ஃப்ரிட்ஜில் வைத்து ஜில்லுன்னு ரோஸ் மில்க, பாதம் கீர் தயாரித்து குடிக்கலாம். வாழைப்பழம் பாதம் ஸ்மூத்தி, அன்னாசி துண்டுகளுடன் Basil இலைகள் சேர்த்து மிக்ஸியில் அரைத்தெடுத்தால் அன்னாசி பேசில் (Basil) ஜூஸ் ரெடி. இதோடு தேன், நாட்டுச் சக்கரை சேர்த்துகொள்வது நல்லது.கற்றாழையில் ஏராளமான ஊட்டச்சத்துகள் இருப்பது நாம் அறிந்ததே. இதோடு, அரை கப் எலுமிச்சை, தேன், வெல்லம் சேர்த்து ஜூஸ் செய்து குடிக்கலாம். கற்றாழையில் மிளகு, எலுமிச்சை சாறு, உப்பு சேர்த்தும் ஜூஸ் செய்யலாம். மோர் உடன் கற்றாழை, மிளகாய், புதினா, கொத்தமல்லி சேர்த்து மிக்ஸியில் அடித்தும் கற்றாழை ஜூஸ் தயாரிக்கலாம். 


சப்ஜா, சியா விதைகளையும் சேர்த்து கொள்ளலாம். குறைவான கலோரியில் அதிக ஊட்டச்சத்து பெறும் உணவுகளாக ஊட்டச்சத்து நிபுணர்கள் இதை குறிப்பிடுகின்றனர். டய்ட் ரொட்டீன் காலங்களில் உணவுக்கு இடையே இந்த டிரிங்க் குடிக்கலாம்.