New Year 2026 Resolution: புத்தாண்டு நாளில் வாழ்வை செழுமையாக்குவதற்கான சில உறுதிமொழிகள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
புத்தாண்டு 2026 வாழ்த்துகள்
புத்தாண்டான 2026-ஐ வரவேற்க இன்னும் ஒரு சில மணி நேரங்களே உள்ளன. இந்நிலையில் தங்களது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் நலம் விரும்பிகளுக்கு எப்படி வித்தியாசமாக வாழ்த்துகளை பகிரலாம் என பலரும் ஆலோசிக்க தொடங்கியிருப்பீர்கள். அப்படியானால் வாழ்த்துகளுடன், நலம் விரும்பிகளின் வாழ்வு செழிக்க சில உறுதிமொழிகளையும் பின்பற்றுவதற்கான ஆலோசனைகளையும் பரிந்துரைக்கலாம். அந்த வகையில் புத்தாண்டில் ஒவ்வொரு நபரும் பின்பற்ற வேண்டிய நன்மை பயக்கக் கூடிய சில உறுதிமொழிகள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
2026 புத்தாண்டில் எடுப்பதற்கான உறுதிமொழிகள்:
- ஸ்மார்ட்போன் போன்ற மின்சாதனங்களில் நேரம் செலவிடுவதை தவிர்த்து இயற்கையான சூழலில் கூடுதல் நேரத்தை செலவிடுங்கள்
- வசிக்கும் இடத்தை புத்துணர்ச்சி அளிக்கக் கூடியதாக மாற்றுங்கள்
- புதிய பழக்க வழக்கங்களை கற்றுக் கொள்ளுங்கள்
- உள்ளூரிலேயே இதுவரை நீங்கள் செல்லாத இடத்திற்கு பயணம் மேற்கொள்ளுங்கள்
- உங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கக் கூடிய செயல்களுக்கான நேரத்தை ஒதுக்குங்கள்
- உங்களது அமைதிக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய பழக்கங்களை விட்டொழியுங்கள்
- தினசரி/வாரத்திற்கு ஒருமுறை/ மாதத்திற்கு ஒருமுறை என நீங்கள் எடுகும் புகைப்படங்களை ஆவணப்படுத்தி உங்களது வாழ்க்கை பயணத்தை ஆராயுங்கள்
- குடும்பத்தினரை மகிழ்விக்க சிறிய சமையல் கலைகளை கற்றுக்கொள்ளுங்கள்
- சுய உடல்நலனை பராமரிப்பதில் கவனத்தை செலுத்துங்கள்
- உங்களுக்கு உதவியவர்களுக்கு உதவி செய்வதை வாடிக்கையாக்கி கொள்ளுங்கள்
- ஞாயிற்றுக்கிழமையை ஓய்வுக்கானதாக நிர்ணயித்துக் கொள்ளுங்கள்
- புத்தகம் வாசிப்பது அல்லது கவனிப்பதை பழக்கமாக்கிக் கொள்ளுங்கள்
- செலவுகளை குறைக்க பட்ஜெட்டை பின்பற்றும் நடைமுறையை உருவாக்கலாம்
- மது அருந்துவது உள்ளிட்ட பழக்கவழக்கங்களை கைவிடுங்கள்
- திறந்த வெளியில் உடற்பயிற்சி செய்யலாம்
- புதிய மொழிகளை கற்றுக் கொள்ளலாம்
- எதிர்காலம் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான தொலைநோக்கி திட்டத்தை வகுக்கலாம்
- நண்பர்களுடன் சேர்ந்து குழுவாக புத்தகம் வாசிக்கலாம்
- பெற்றோர் மற்றும் தாத்தா/பாட்டியுடன் கூடுதல் நேரத்தை செலவழித்து அவர்களின் வாழ்க்கை அனுபவத்தை கேட்டறியலாம்
- வீட்டில் இருக்கும் காலி இடத்தை தோற்றமாக மாற்றலாம்
- வாழ்க்கை மற்றும் வேலை நேரத்தை சமப்படுத்தி அநாவசிய மன அழுத்தங்களை தவிர்க்கலாம்
- ஆரோக்கியத்திற்கு நிம்மதியான தூக்கத்தை உறுதி செய்யுங்கள்
- துணைவி/துணைவருடன் மனம்விட்டு பேசுங்கள்
- உள்ளூரை தாண்டி வெளியூர்/ வெளிமாநிலங்கள்/வெளிநாடுகளுக்கு பட்ஜெட்டை மற்றும் சூழலை பொறுத்து பயணம் மேற்கொள்ளலாம்
- ஆட்டோ-பே முறையில் மாதந்திர கட்டணங்களை செலுத்துவதன் மூலம் தேவையற்ற அழுத்தத்தை குறைக்கலாம்
- அநாவசியமான விவாதங்களை கொண்டு மன உளைச்சலை ஏற்படுத்தும் சமூக வலைதளங்களில் இருந்து விலகியிருக்கலாம்
- உறுதிமொழி எடுக்காதீர்கள், இலக்குகளை நிர்ணயம் செய்யுங்கள்
- உடற்பயிற்சி நிலையத்தில் சேர்ந்து உடற்பயிற்சி செய்வதை வாடிக்கையாக்குங்கள்
- அதிகாலை எழுவதை வாடிக்கையாக்கிக் கொண்டால் ஒவ்வோரு நாளிலும் கூடுதல் நேரத்தை பெற முடியும்
- தினசரி உங்களது உடல் எடை மற்றும் உயரத்திற்கு தேவையான அளவிற்கு தண்ணீர் பருகுவதை தவறவிடாதீர்கள்
- வசிக்கும் இடத்தை தூய்மையாக பராமரிக்க முயலுங்கள்
- உடல் ஆரோக்கியத்திற்காக அதிகப்படியான காய்கறிகளை உட்கொள்ளுங்கள்
- தினமும் ஆரோக்கியமான உணவை உட்கொள்வதை உறுதிப்படுத்துங்கள்