புத்தாண்டு வருகையில் அனைவரிடமும் ’ இந்தாண்டு நான் நிச்சயம் செய்ய வேண்டியவை; செய்யக் கூடாதவை!’ என்று ஒரு லிஸ்ட் தவறாமல் இடம்பெறும். அதாங்க, 'Resolutions'. இந்த புத்தாண்டு கொஞ்சம் மாறுபட்டது. கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பெருந்தொற்று பரவல் காராணமாக வாழ்க்கை தலைக்கீழாக மாறிப்போனது. இந்தாண்டாவது தொற்று பரவலில் இருந்து தப்பித்துவிடலாம் என்றால், புத்தாண்டு வருவதற்கு முன்பே புதிய வகை உருமாறிய வைரஸ் அச்சுறுத்துகிறது. இதெல்லாம் ஒரு புறம் இருக்கட்டும். நம் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை இனியாவது மேம்படுத்தலாம் என்று நினைப்பவர்களா? இதோ உடல் நலனோடு மன ஆரோக்கியத்தை யும் மேம்படுத்துவதற்கான வழிமுறைகள் குறித்து இக்கட்டுரையில் காணலாம்.
உடல் எடை குறைக்க குறுக்குவழி வேண்டாம் :
உடல் எடை குறைக்க வேண்டும் என்று திட்டம் இருக்கா? விரைவாக எடை குறைய வேண்டும் என்ற எண்ணத்தை மட்டும் விட்டுவிடலாமே! நல்ல உணவுமுறை உடற்பயிற்சி மூலம் சீரான முறையில் உடல் எடையை குறைக்கலாம். உடனடியாக ரிசல்ட் வேண்டும் என்று செயற்கை முறையிலான வழிகளை பின்பற்றக் கூடாது. அதன் மூலம் உடனடியாக எடை குறைந்தாலும், அதிக பக்க விளைவுகளும் இருக்கிறது.
மன அரோக்கியம் முக்கியம் :
உடல் ஆரோக்கியம் எவ்வளவு முக்கியமோ அதே போலதான் மனநலனும். மன அழுத்தம், சோகமான மனநிலை உடல் ஆரோக்கியத்தை கடுமையாக பாதிக்கும். மனம் நலமாக இல்லையென்றால், அதிகமாக சாப்பிடும் பழக்கம் ஏற்படும் அல்லது முறையாக உணவு உட்கொள்ள முடியாமல்போகும். இதுபோன்ற சிக்கல்களை தடுக்க மன ஆரோக்கியத்தை உறுதி செய்வதற்கான பயிற்சிகளை மேற்கொள்ளலாம். மனதுக்கு பிடித்தவற்றை செய்யலாம். புதிதாக எதாவது கற்கலாம். மனதுக்கு புத்துணர்ச்சி தரும் செயல்பாடுகளில் ஈடுபடலாம்.
யோகா :
உடம் மற்றும் மன நலனை பேணுவதற்கு சிறந்த ஒன்றாக பார்க்கப்படுவது யோகா. யோகாசனம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். நிகழ்காலத்தில் வாழுவதற்கு யோகா உறுதுணையாக இருக்கும். தொடர்ந்து யோகா செய்வதன் மூலம் மனநலன் மேம்படும். மனம் அமைதியடையும். இது மனச்சோர்வு, மன அழுத்தம் ஆகியவற்றில் இருந்து விடுப்பட உதவும்.
திரை நேரம் குறைக்க வேண்டும்:
தொழில்நுட்ப யுகத்தில் மொபைல் பயன்படுத்துவதை குறைப்பது மிகவும் கடினம். சமூக வலைதளமும் நேரத்தை உறிஞ்சும். தொடர்ந்து மொபைல் பயன்படுத்துவது மனச்சோர்வை ஏற்படுத்தும் என்று ஆய்வுகள் கூறுகின்றன. அதனால், ஸ்கிரீன் டைமை குறைப்பது நல்லது. அதிக நேரம் மொபைல் பயன்படுத்துவதை தவிர்க்கவும்.
புத்தாண்டு கொண்டாட்டங்கள்: ஒரு சிறு குறிப்பு உங்களுக்காக