நூற்றாண்டுகளாக பாரம்பரிய மருத்துவத்தில் பயன்படுத்த படும் ஒரு மருந்து வேப்பிலை. இதில் எண்ணற்ற  மருத்துவ குணங்கள் இருக்கிறது. இது சரும மற்றும் முடி  சார்ந்த பிரச்சனைக்கு சிறந்த நிவாரணியாக இருக்கிறது.


வேப்பம் இலையில் இருக்கும் மருத்துவ குணங்கள்


ஆண்டிசெப்டிக், அழற்சி எதிர்ப்பு, ஆக்ஸிஜனேற்றம்  மற்றும்  குணப்படுத்தும் பண்புகள் கொண்டுள்ளது. இதில் நிம்பிடின், நிம்போலைடு மற்றும் அசாதிராச்ச்டின் போன்ற வேதியயல் கலவை உள்ளது..




எப்படி பயன்படுத்துவது


வெப்பம் மரத்தின் அனைத்து பகுதிகளும் மருந்தாக பயன்படுகிறது. இலைகள் அரைத்து சாப்பிடலாம். இலைகளை அரைத்து தோலின் மீது தடவுதல், தலை முடியில் தடவுதல் போன்று செய்யலாம்.  இலைகளை பறித்து தண்ணீரில் கொதிக்க வைத்து குளிப்பதற்காக பயன்படுத்தலாம்.


வேப்பம் பூக்களை பறித்து காயவைத்து வேப்பம் பூ ரசம் வைத்து சாப்பிடலாம். இது குடல் ஆரோக்கியத்திற்கும், குடலில் இருக்கும் புழுக்கள் வெளியேறவும் உதவும்.


வெப்பம் கொட்டைகளில் இருந்து வெப்பம் எண்ணெய் தயாரிக்க படுகிறது. வெப்ப மரத்தின் பட்டைகள் மருந்தாக தயாரிக்க படுகிறது.


சித்தா மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தில் இது மருந்தாக தயாரிக்க படுகிறது. பல்வேறு தொற்று நோய்கள் மற்றும் பூச்சி கடிகளுக்கு மருந்தாக பயன்படுத்த படுகிறது.




பயன்கள்    


 முகப்பரு வராமல் தடுக்கிறது - வேப்பிலை தனியாக அரைத்து அதனுடன் மஞ்சள் சேர்த்து முகத்தில் பூசி 20 நிமிடங்கள் ஊறவைத்து கழுவுவதால் முகப்பரு வராமல் தடுக்கிறது. பாக்டீரியா தொற்றினால் வரும் முகபருகளுக்கு சிறந்த மருந்தாகும்.


முகத்தில் இருக்கும் கருப்பு புள்ளிகளை நீக்கும் - முகத்தில் கருப்பு மற்றும் வெள்ளை புள்ளிகள் வரும். அதாவது, முகப்பரு  சரியான பிறகு அந்த இடத்தில் இது போன்ற புள்ளிகள் இருக்கும். தொடர்ந்து வேப்பிலை பேஷ் மாஸ்க் போடுவதால் இந்த புள்ளிகள் மறைந்து முக பொலிவாக இருக்கும்.


பொடுகு அரிப்பு தொல்லையில் இருந்து நிவாரணம் பெற - வேப்பிலை அரைத்து மாஸ்க் போடுவதால், பாக்டீரியா தொற்றினால் வரும் பொடுகு நீங்கும். அரிப்பு குறையும். மேலும் முடி வளர்வதற்கு ஏதுவாக இருக்கும். வாரத்திற்கு ஒரு முறை இது போன்று அரைத்து மாஸ்க் போடுவதால் உடல் குளிர்ச்சி அடையும் .முடி உதிர்தல் குறையும்.




முடி ஷைனிங் ஆக இருக்கும் - முடி ஷைனிங் ஆக புத்துணர்வுடன் இருப்பதற்கு வேப்பிலை உதவும். வேப்பிலையில் லினோலிக், ஒலிக் மற்றும் ஸ்டியரிக் போன்ற கொழுப்பு அமிலங்கள் போன்ற ஊட்டச்சத்துகள் நிறைந்து இருக்கிறது. மேலும் முடி அடர்த்தியாகவும் , நீளமாகவும் வளர்வதற்கு உதவியாக இருக்கும்.


இளநரை - இன்று அதிகமாக இருக்கும் மனஅழுத்தம் காரணமாக முடி சீக்கிரம் நரைத்து வெள்ளையாக மாறி விடும். இதற்கு இளநரை என்று பெயர். அடிக்கடி வேப்பிலை மாஸ்க் பயன்படுத்துவதால் இது வருவது குறையும்.