சமையல்களில் பிரதான இடம் பிடிக்கும் வெங்காயத்தை கூர்மையான கத்தியைப்பயன்படுத்தி , அதன் தோலை உரிக்கும் போது கண்களில் கண்ணீர் வருவதற்கு வாய்ப்பில்லை எனக்கூறப்படுகிறது.


அசைவம் மற்றும் சைவம் என எதுவாக இருந்தாலும் உணவுகளில் பிரதான இடம் வகிப்பது வெங்காயம் தான். இவை இல்லாவிடில் எந்த உணவிலும் சுவை இருக்காது. ஆனால் வெங்காயத்தை உறித்து சமையல் செய்ய வேண்டும் என்றாலே அனைவருக்கும் கண் எரிச்சல் தான் ஏற்படும். இதற்குப் பயந்துக்கொண்டே பலரும் வெங்காயத்தை உரிக்கவே மாட்டார்கள். இதுப்போன்று நீங்களும் வெங்காயத்தைக் கண்டால் அச்சம் கொள்பவர்களா? அப்படினா இந்த டிப்ஸ் உங்களுக்கு ரெம்ப உதவியாக இருக்கும். குறிப்பாக வெங்காயத்தை உரிப்பதற்கு யார் டிப்ஸ் கொடுத்தாலும், அதனை கேட்காமல் யாரும் செல்லவே முடியாது. அப்படித்தான் இன்ஸ்டாவில் வெங்காயத்தை எப்படி உரிக்க வேண்டும் என்ற வீடியோ வைரலாகிவருகிறது.


 






அதில், “ வெங்காயத்தை கூர்மையான கத்தியைக்கொண்டு மேற்புறம் லேசாக வெட்டிய பின்னர் இரண்டாக வெட்டி எடுத்துக்கொள்வது ”போன்று வீடியோ தொடங்குகிறது. இதனையடுத்து அந்த வீடியோவில் வெங்காயத்தின் தோலை உரித்து எடுத்துக்கொண்டு பின்னர் வெங்காயத்தை கூர்மையான கத்தியைக் கொண்டு வேகமாக வெட்டினார். இப்படி சுலபமாக வெங்காயத்தை வெட்ட முடியுமா? வெங்காயத்தை வெட்டுவதற்கு வேறு பல வழிமுறைகளும் உள்ளன என்பது போன்ற பல்வேறு கமெண்டுகளையும், ஈமோஜிகளையும் இன்ஸ்டாவில் பகிர்ந்து வருகின்றனர். மேலும் வெங்காயத்தை எப்படி வெட்டுவது என்று? இன்ஸ்டாவில் பகிரப்பட்ட இந்தவீடியோவை 84 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் பார்த்துள்ளனர்.


மேலும் வெங்காயத்தை வெட்டும் போது கண்களில் எரிச்சல் மற்றும் கண்ணீர் வராமல் இருப்பதற்காக கூர்மையான கத்தியைப் பயன்படுத்த வேண்டும். இதனால் வெங்காயத்திலிருந்து வெளியேறும் நொதியின் அளவு குறைந்து, கண்ணீர் வராமல் தடுக்க முடியும். மேலும் வெங்காயத்தை வெட்டுவதற்கு முன்னதாக தண்ணீரில் சிறிது நேரம் ஊறவைத்து வெட்டலாம். இதோடு மட்டுமின்றி வெங்காயத்தை வெட்டுவதற்கு 10-15 நிமிடங்களுக்கு முன்னதாக,ப்ரீசரில் வைத்து எடுக்க வேண்டும். இப்படி செய்வதன் மூலம் வெங்காயம் வெளியேற்றும் திரவம் போன்ற நொதியானது காற்றில் கலக்காமல்,கண்ணீர் வராமல் தடுக்க முடியும்.





குறிப்பாக வெங்காயத்தில் திரவ வடிவில் இருக்கும் சல்பெனிக் அமிலமானது வெங்காயம் வெட்டும்போது காற்றுடன் கலந்து ஆவியாக மாறுவதால் தான் நம் கண்களில் கண்ணீர் வருகிறது. மேலும் வெங்காயத்தில் புரதம், கார்போஹைட்ரேட், கொழுப்பு, நார்ச்சத்து, வைட்டமின் பி, சி போன்ற பல்வேறு ஊட்டச்சத்துக்கள் உள்ளதால் நோய் எதிர்ப்புசக்கதியுடைய உணவுப்பொருளாகவும் உள்ளது.