இன்று முதல் நவராத்திரி விழா தொடங்குகிறது. கோயில்களில் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் அலங்காரம் என அடுத்த ஒன்பது நாள்களும் சிறப்பு வாய்ந்ததாக இருக்கும். 


அம்மன் இவ்வுலகில் எல்லாமுமாக விளங்குவதாக நம்படுவதால் அதை உணர்த்தும்விதமாக நவராத்திரி கொண்டாடப்படுகிறது. புரட்டாசி மாதம் அமாவாசைக்கு அடுத்த நாள் முதல் தொடங்கு ஒன்பது நாட்கள் வரையில் நவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது. விஜயதசமியையும் சேர்த்து மொத்தம் 11 நாட்கள் நவராத்திரி விழாவாக கொண்டாடப்படும். 


நவராத்திரி விழா நாள்களில் ஒவ்வொரு நாள்களும் கோலங்கள், தானியங்கள் என ஒன்பது விதமாக சிறப்பு பூஜைகள் எல்லாம் நடத்தப்படும். வீடுகளில் கொலு வைத்து விதவிதமான பொம்மைகளால் அலங்கரித்து, வீட்டிற்கு வருபவர்களை நன்றாக உபசரித்து அனுப்புவர். நவராத்திரி முதல் மூன்று நாள்கள் லட்சுமிக்கும் அடுத்த மூன்று நாள்கள் சக்திக்கும் கடைசி மூன்று நாள்கள் சரஸ்வதிக்கும் உரியதாக தமிழ்நாட்டில் கொண்டாடப்படுகிறது. இந்த விழா காலத்தில் கோயில்களில் கொலு வைத்து சிறப்பு வழிபாடு இருக்கும். ஒன்பது மலர்கள், பழங்கள், ஒன்பது தானியங்கள், ஒன்பது பிரசாதங்கள் என ஒன்பது விதமான அலங்காரங்கள் என அம்மனை வழிபடுவர். நவராத்திரி விழாவின்போது விரத நாட்களில் வீட்டில் செய்ய இனிப்பு வகைகள் சிலவற்றை காணலாம். 


தேங்காய் லட்டு


’தேங்காய் பர்பி’ நல்ல ஆரோக்கியமான இனிப்பு.தேங்காய்வை வைத்து லட்டும் செய்யலாம். எளிதாக செய்யலாம், துருவிய தேங்காய், கன்டன்ஸ்டு மில்க், ஏலக்காய் பொடி இதை அனைத்தையும் கலந்து சிறிதளவு நெய் சேர்த்து சிறிய உருண்டைகளாக பிடிக்கவு. இதில் வறுத்த முந்திரியும் சேர்த்துக்கொள்ளலாம். 


கேரட் அல்வா


தீபாவளி போன்ற பண்டிகை காலங்களில் கேரட் இனிப்பு வகைகள் வீட்டிலேயே செய்வதுண்டு. துருவிய கேரட், சர்க்கரை, நெய், ஏலக்காய் பொடி சேர்த்து செய்தால் கேரட் அல்வா தயார்.


ஜிலேபி 


ஜிலேபி பிரபலமான இனிப்பு. கோதுமை மாவை கொண்டு தயாரிக்கப்படும் மொறு மொறு ஸ்பைரல் வடிவ ஜிலேபியை சர்க்கரை பாகில் ஊற வைத்து எடுப்பது. வெளியே மொறு மொறு, உள்ளே சர்க்கரையில் ஜூஸியாகவும் இருக்கும் இனிப்பு. 


காஜூ கத்லி


காஜூ கத்லி பிடிக்காதவர்களே இருக்க முடியாது எனலாம்.  முந்திரி வைத்து தயாரிக்கப்படும் இனிப்பு வகை. நெய், சர்க்கரை,முந்திரி இதை மூன்றையும் சேர்ந்து ருசியான காஜூ கத்லி செய்து விடலாம். 


குலாப் ஜாமூன்


யாராவது வீட்டிற்கு விருந்தினர் வந்துவிட்டால் கொஞ்சம் நேரத்தில் செய்துவிடக்கூடிய ஒன்று குலாப் ஜாமூன். கடைகளில் கிடைக்கும் குலாப் ஜாமூன் மிக்ஸ் மாவு பதத்திற்கு தயாரித்து சிறு உருண்டைகளாக்கி, எண்ணெயில் பொரித்தெடுத்து அதை சர்க்கரை பாகில் ஊறை வைத்துவிட்டால் சுவையான குலாப் ஜாமூன் ரெடி.


ஜவ்வரிசி பாயசம்


சேமியா, பால், ஜவ்வரி, சர்க்கரை, ஏலக்காய் பொடி ஆகிவற்றை வைத்து தயாரித்துவிடலாம் பாயசம். இதை ஃப்ரிட்ஜில் வைத்து ஜில்லுன்னு சாப்பிடலாம். 


பருப்பு பாயசம், பால் பாயசம் செய்தும் அசத்தலாம். 


நட்ஸ் லட்டு


துருவிய பாதாம், முந்திரி, பிஸ்தா, திராட்சை, பேரிட்சை பழம் என எல்லாவற்றை கலந்து நெய் சேர்த்து லட்டுபோல தயாரிக்கலாம். நட்ஸ் லட்டு ரெடி.


பாதம் ரோஸ் கீர்


பாதாமை ஊற வைத்து தோல் நீக்கவும். இதை நன்றாக விழுது போல அரைத்தெடுக்கவும். காய்ச்சிய பாலில் இந்த விழுதை சேர்த்து சர்க்கரை சேர்த்து அடுப்பில் வைத்து கொதிக்க விட்டால் பாதம் பால் ரெடி, குங்குமப் பூ சேர்க்கலாம். இதை ஃப்ரிட்ஜில் வைத்தால் பாதாம் கீர் ரெடி. இதோடு ரோஸ் எசென்சஸ் சேர்த்தாலும் சுவை நன்றாக இருக்கும்.