Mercedes-Benz: அடடே..! மெர்சிடஸ் பென்ஸ் கார்களுக்கு ரூ. 5 லட்சம் வரை சலுகை அறிவிப்பு - என்னவெல்லாம் கிடைக்கும?

Mercedes-Benz: மெர்சிடஸ் பென்ஸ் கார் மாடல் பயனாளர்களுக்கு அந்நிறுவனம் ரூ.5 லட்சம் சலுகை அறிவித்துள்ளது.

Continues below advertisement

Mercedes-Benz: மாதத் தவணை 50 ஆயிரம் ரூபாய் உட்பட மெர்சிடஸ் பென்ஸ் நிறுவனம் தனது பயனாளர்களுக்கு பல்வேறு சலுகைகளை அறிவித்துள்ளது.

Continues below advertisement

மெர்சிடஸ் பென்ஸ் கார்:

இந்தியாவில் நடப்பாண்டு இறுதிக்குள் 10 மாடல் கார்களை அறிமுகம் செய்ய மெர்சிடஸ் பென்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதனால் நடப்பாண்டு அந்த நிறுவனத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. ஏற்கனவே, EQE எஸ்யூவி மின்சார வாகனம் உட்பட 8 மாடல்கள் நடப்பாண்டில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில், பண்டிகைக் காலம் தொடங்கவிருப்பதை கருத்தில் கொண்டு Mercedes-Benz பல திட்டங்களை அறிவித்துள்ளது. இது ICE மற்றும் EV கார் மாடலகளை வாடிக்கையாளர்களுக்கு மிகவும் கவர்ச்சிகரமானதாக மாற்றுகிறது. இதில் ஸ்டார் அஜிலிட்டி + திட்டம் மற்றும் எம்பி சஸ்டைனபிலிட்டி ஃபெஸ்ட் ஆகியவை அடங்கும்.

Star Agility+ திட்டம்

ICE மாடல்களின் வாடிக்கையாளர்களை ஊக்குவிக்கும் வகையில் Star Agility+ திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. GLC, E - CLASS,  A-CLASS போன்ற பல்வேறு மாடல்களையும், 50 ஆயிரம் ரூபாய் மாத தாவணை திட்டத்தின் மூலம் பயனாளர்கள் பெறலாம். குறைந்தபட்சமாக வெறும் 10 லட்ச ரூபாயை செலுத்தி காரை வாங்கலாம். பைபேக், முதல் வருடத்திற்கான இலவச காப்பீடு மற்றும் நான்கு ஆண்டு உத்தரவாதம், பராமரிப்பு உள்ளிட்ட பல நன்மைகளைப் பெறலாம். 

சஸ்டெயினெபிலிட்டி ஃபெஸ்ட்:

இந்த திட்டத்தின் மூலம், ICE Mercedes Benz கார்களின் தற்போதைய உரிமையாளர்களுக்கு பிரத்யேக லாயல்டி வவுச்சர் வழங்கப்படுகிறது. EQB மற்றும் EQE போன்ற மின்சார கார் மாடல்களுக்கு ரூ. 5 லட்சம் வரை ஊக்கத்தொகையை இந்த வவுச்சர் கொண்டுள்ளது. தெலங்கானா போன்ற மாநிலங்களில் மின்சார வாகனங்களுக்கான பதிவுக்காக வசூலிக்கப்படும்,  சாலை வரியில் 50 சதவீத தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்தியாவில் உள்ள தங்களது வாகன மாடல்களில் 50 சதவிகிதத்தை, 2025ம் ஆண்டிற்குள் மின்சார வாகனமாக மாற்ற மெர்சிடஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளதுது. 

தேவை அதிகரிப்பு:

சப்ளை செயின் சீர்குலைவு காரணமாக GLA, GLC மற்றும் GLS SUVகள் டெலிவரி செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக பிராண்ட் தெரிவித்தாலும், அது நாட்டில் தொடர்ந்து வளர்ச்சியடைந்து 2023 ஜனவரி முதல் செப்டம்பர் வரை இந்தியாவில் 12,768 கார்களை விற்பனை செய்துள்ளது. கடந்த ஆண்டை விட நடப்பாண்டில் இந்த விற்பனை 11 சதவிகிதம் வளர்ச்சியை கண்டுள்ளது.  இதனிடையே, அதன் போர்ட்ஃபோலியோவில் உள்ள டாப்-எண்ட் கார்களான எஸ்-கிளாஸ் மற்றும் அதற்கு மேற்பட்ட மாடல்களுக்கான தேவை 22 சதவீத வளர்ச்சியைக் கண்டுள்ளது. மெர்சிடிஸ் பென்ஸ் மொத்த விற்பனையில் பெரும்பாலான யூனிட்கள் டாப் எண்ட் வாகனங்கள் பிரிவை சேர்ந்தவை ஆகும். இதில் மேபேக், AMG மற்றும் EQS சீரிஸ் மாடல்கள் அடங்கும். Mercedes-Benz நிறுவனத்தால் நடப்பாண்டு இறுதிக்குள் இரண்டு புதிய கார் வெளியிடப்பட உள்ளன. அவை பெரும்பாலும் SUV மாடல்களாக இருக்க வாய்ப்புள்ளதாக கூறப்படும் நிலையில், ஆண்டு இறுதிக்குள் அவை சந்தையை வந்தடையும் என கருதப்படுகிறது.

 

Continues below advertisement
Sponsored Links by Taboola