இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 25ஆம் தேதி முதல் அக்டோபர் மாதம் 3 ஆம் தேதி வரையிலான ஒன்பது நாட்கள் நவராத்திரி(Navratri) விழாவாக கொண்டாடப்படுகிறது. இந்த நவராத்திரி விழாவின் முக்கியத்துவம் குறித்தும் துர்கா, லக்ஷ்மி மற்றும் சரஸ்வதி தெய்வங்களை வழிபடுவதன் முக்கியத்துவத்தை தெரிந்து கொள்வோம்.
நவராத்திரி விழா:
நவராத்திரி விழா, செப்டம்பர் 25-ஆம் தேதி முதல் அக்டோபர் 3- ஆம் தேதி வரையிலான ஒன்பது நாட்கள் இவ்வருடத்தில் கொண்டாடப்படுகிறது. இந்த ஒன்பது நாட்களும் தெய்வத்தின் பெண் தன்மையை கொண்டாடும் விழாவாக கொண்டாடப்படுகிறது.
நவராத்திரியின் ஒன்பது நாட்கள், உமா தேவியின் மூன்று குணங்களாக வகைப்படுத்தப்படுகிறது. முதல் மூன்று நாட்கள் தேவி உக்கிரமாக இருப்பார், அதாவது துர்கா காளி வடிவங்கள் போன்று காணப்படுவார். அடுத்த மூன்று நாட்கள் சாந்தமாக தேவி இருப்பார், அதாவது செல்வ வளத்திற்கு ஏற்றவராக லஷ்மி வடிவில் இருப்பார். அடுத்த மூன்று நாட்கள் சரஸ்வதி வடிவில் இருப்பார், அதாவது ஞான வடிவில் இருப்பார்.
image credits: hsvshivavishnutemple.org.au
துர்கா:
துர்கம் என்றால் அரண் என்று கூறப்படுகிறது. கோட்டை மதில் சுவருக்கும் அரண் என்று அழைக்கப்படுகிறது. கோட்டையை காப்பதற்காக மதில் சுவரில் தெய்வத்தை வைக்கப்படுவதாக கூறப்படுகிறது. அதன் பொருட்டே துர்க்கா என அழைக்கப்படுவதாக கூறப்படுகிறது. துர்கா தேவியானது பூமியை ஒத்தது என கருதப்படுகிறது.
மன உறுதிக்கு அடையாளமாக கருதப்படும் துர்கா தெய்வமானது, சோம்பலை வெல்லும் என்றும் கூறப்படுகிறது. துர்கா தேவியை வழிபடுவதன் மூலம் வலிமை மற்றும் சக்தியை பெறலாம் என கூறப்படுகிறது.
லஷ்மி:
உலகில் கிடைக்கும் செல்வம், செழிப்பான வாழ்க்கை உள்ளடக்கிய பொருள் தன்மையை பெற விரும்புவர்கள் லஷ்மி தெய்வத்தை வழிபடுவர். லஷ்மி தெய்வமானது சூரியனுக்கு ஒப்பானது என்று கூறப்படுகிறது.
சரஸ்வதி
அறிவு, புரிதல் உள்ளிட்ட குணங்களை வேண்டுபவர்கள் சரஸ்வதி தேவியை வழிபடுவர். சரஸ்வதி தேவி நிலவுக்கு ஒப்பானது என்று கருதப்படுகிறது.
நவராத்திரி விரத சடங்குகள் மற்றும் சமையல்:
1. மாவு, மற்றும் தானியங்களைத் தவிர்க்கவும் .
பொதுவாக விரதம் இருப்போர் பால் பழம் ஆகியவற்றை உண்டு நாள் முழுதும் விறகு விரதம் இருப்பார்கள் இதுதான் சரியான முறை எனவும் கூறப்படுகிறது. மாவு உணவு, அரிசி மற்றும் காய்கறி வகைகளை தவிர்த்து மன ஒருமைப்பாட்டுடன் விரதம் இருக்க வேண்டும்.
மேலும், விரத காலத்தில் தாமரை பூவில் இருந்து பெறப்படும் தாமரை விதை போன்றவற்றை உண்ணலாம் எனவும் பரிந்துரைக்கப்படுகிறது.
2. ராக் சால்ட் வைத்திருங்கள்
ராக் உப்பு ( செந்தா நாமக் ) வழக்கமான டேபிள் உப்புடன் ஒப்பிடும்போது குறைவாகவே பதப்படுத்தப்படுகிறது. செந்தா நாமக் என்பது அதிக அளவு சோடியம் குளோரைடு இல்லாத மிகவும் படிக உப்பு ஆகும். எனவே ஒருவர் தங்கள் விரத சிறப்பு உணவுகளில் கல் உப்பு பயன்படுத்தலாம்.
3. குறிப்பிட்ட சமையல் எண்ணெய்களைப் பயன்படுத்தவும்
விதை அடிப்படையிலான எண்ணெய்கள் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் தவிர்க்கப்படுகிறது. சமையலுக்கு நெய் மற்றும் கடலை எண்ணெய் பயன்படுத்தலாம்.
4. பால் பொருட்கள் .
பால், பாலாடைக்கட்டி, தயிர் மற்றும் பிற பால் சார்ந்த பொருட்களை நவராத்திரியின் போது சாப்பிடலாம்.
5 தவிர்க்க வேண்டிய மற்ற உணவுகள்
மாவால் செய்யப்பட்ட உணவு, தானியங்கள் மற்றும் வெங்காயம், பூண்டு மற்றும் பருப்பு ஆகியவற்றை ஒருவர் தவிர்க்க வேண்டும். சிறந்த நவராத்திரி உணவுகளை, சிறந்த முறையில் குறிப்பிட்ட பதார்த்தங்களுடன் செய்து நவராத்திரியை கடைபிடிக்கலாம்
நவராத்திரி விழாவின் ஒன்பது நாட்களிலும் விரதமிருந்து தெய்வத்தை வழிபடுவதன் மூலம் வீரம், செல்வம் மற்றும் ஞானம் வளங்களை பெறலாம் என கூறப்படுகிறது.