வெள்ளை முடி, நரை முடி என்றாலே தீர்வு ஹேர் டைதான் என்று முடிவெடுக்கும் பலரின் தேர்வு, சந்தைகளில் விற்கப்படும் ரசாயனங்கள் நிறைந்த ஹேர்டைகள். ஆனால் அதனால்  சரும அரிப்பு, எரிச்சல், தடிப்பு, புற்றுநோய் உள்ளிட்ட பல பக்கவிளைவுகளை ஏற்படுத்தும். வெள்ளை முடி , நரைமுடிக்கு வீட்டிலேயே இயற்கையான முறையில் ஹேர் டை தயாரிக்க விரும்புகிறீர்களா? இதோ உங்களுக்கான டிப்ஸ். முயற்சி செய்து பாருங்கள்.


நெல்லிகாய்:


நெல்லிகாய்  உடல், சருமம், கூந்தல் உள்ளிட்டவற்றிற்கு அதிக ஆரோக்கியம் தருகிறது. நாலு ஆப்பிளின் சத்துக்கள் ஒரு நெல்லிகாயில் இருக்கிறது.  முடி உதிர்தல், இளநரை போன்ற பிரச்சனைகளை தீர்க்கும் திறன் கொண்டது. நெல்லிக்காயில் இருக்கும் கொட்டையை நீக்கி விட்டு சிறு சிறு துண்டுகளாக்கி  வெயிலில் காயவைத்து மிக்ஸியில் அரைத்து பொடி செய்யவும். டை தேவைப்படும்போது, முதல் நாள் இரும்பு கடாய் ஒன்றில் தேவையான அளவு நெல்லிப்பொடி மற்றும் தேங்காய் எண்ணெய் சேர்த்து வைக்க வேண்டும். மறுநாள் காலை இதை டையாக பயன்படுத்தலாம்.      


 பீட்ரூட் & கேரட்:


நீங்கள் சிவப்பு நிற ஷேடுடன் கூடிய கூந்தல் நிறத்தை பெற விரும்பினால் அதற்கு பீட்ரூட் மற்றும் கேரட் சிறந்த தேர்வு. பீட்ரூட் மற்றும் கேரட் ஜூஸ் என இரண்டிலும் ஒவ்வொரு கப் எடுத்துக் கொள்ளுங்கள். இரண்டையும் கலந்து ஸ்பேரே பாட்டில் வைக்கவும். இதை உங்கள் தலைமுடி முழுவதும் ஸ்பிரே செய்து சுமார் 3 மணி நேரம் முடியை கவர் செய்து வைக்கவும். பின் குளிர்ந்த தலைமுடியை அலசவும்.


மருதாணி : 


தலைமுடிக்கு நிறம் தர பயன்படுத்தப்படுவதில் மருதாணி என்றுமே டாப்தான். நல்ல சிறப்பான பலனைத் தரும். மருதாணி இலைகளை காயவைத்து பொடி செய்யவும். அரை கப் மருதாணி பொடியை எடுத்து கொண்டு அதை 1/4 கப் தண்ணீரில் கலக்கவும்.  இரவு முழுவது இந்த கலவையை ஊற வைக்க வேண்டும்.  மறுநாள் காலை பயன்படுத்துங்கள். சாதாரண தண்ணீரில் தலைமுடியை அலசுங்கள்.


நேச்சுரல் ஹென்னா:


மருதாணி பவுடர் - 2 டேபிள் ஸ்பூன்


அவுரி இலை பவுடர் - 3 டேபிள் ஸ்பூன்


நெல்லி பவுடர் - 1 டேபிள் ஸ்பூன்


டீ தூள் - 1 டேபிள் ஸ்பூன்


தயிர் - 2 டேபிள் ஸ்பூன்


செய்முறை:


ஒரு பாத்திரத்தில் ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி, டீ தூள் போட்டு நன்றாக கொதிக்க விடவும். பின் வடிகட்டிவும். ஒரு பவுலில் மேலே குறிப்பிட்ட, மூன்று பவுடர்களையும் தயிர் சேர்த்து நன்றாகக் கலக்கவும். பின் டீ டிகாசனைச் சேர்க்கவும். பேஸ்ட் பததிற்கு கலக்கவும்.  ஹேர் டை ரேடி. தேவைப்படும்போது பயன்படுத்தலாம்.