ஒவ்வொரு ஆண்டும், ஜூன் 8 அன்று தேசிய சிறந்த நண்பர்கள் தினம் கொண்டாடப்படுகிறது, இது நமது நண்பர்களுடன் கழித்த அனைத்து நல்ல பழைய காலங்களை நினைவுகூர்ந்து புதிய நினைவுகளாக மீண்டும் மலரச் செய்யும் நாளாகும். உண்மையான நட்பு என்பது விலைமதிப்பற்ற பரிசு. இது இடத்தையும் நேரத்தையும் கடந்து, புரிதல்களின் நூலின் மூலம், ஒன்றாக இணைக்கும் ஒரு பாலமாகும். நமக்கெதிராக செயல்படாமல், நம்மை எடைபோடாமல், நம்மை அப்படியே ஏற்றுக் கொள்பவர்கள், நம்முடைய சிறந்த நண்பர்கள் என்றால் மாற்றுக்கருத்தில்லை.
நண்பர்கள் தின வரலாறு:
1935 ஆம் ஆண்டில் நெருங்கிய நண்பர்களைக் கௌரவிப்பதற்காக ஒவ்வொரு ஆண்டும் ஒரு நாளை அர்ப்பணிக்க அமெரிக்காவில் யுனைடெட் ஸ்டேட்ஸ் காங்கிரஸ் முடிவு செய்ததாக தகவல் தெரிவிக்கின்றன. ஆனால் இது உறுதியான தகவலா என்பதற்கு அடிப்படை ஆதாரங்கள் இல்லை. அவர்கள் ஜூன் 8 ஐத் தேர்ந்தெடுத்தனர், இது பொதுவாக நாடு முழுவதும் ஒரு கோடையின் வெப்பமான நாள். வெளியில் சென்று கொண்டாட்ட நடவடிக்கைகளுக்கு ஏற்றதாக இருக்கும் என இந்த நாள் தேர்வு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
Image Credits: @pixabay
அப்போதிருந்து, இந்த வழக்கம் பல நாடுகளுக்கு பரவியது. இந்த நாள்தான், தற்போது நட்பைக் கொண்டாடும் பல நிகழ்வுகளுக்கு வழிவகுத்துள்ளது, அதாவது நண்பர்கள் தினம், பெண்கள் நட்பு தினம் மற்றும் பழைய நண்பர்கள் மற்றும் புதிய நண்பர்கள் வாரம் என்று ஒரு வாரம் முழுவதும் கூட, சில இடங்களில் கொண்டாடப்படுகிறது. நம்முடன் இருந்த நண்பர்களையும், இருக்கும் நண்பர்களையும் கொண்டாட, தேசிய சிறந்த நண்பர்கள் தினம் அனுசரிக்கப்படுகிறது.
முக்கியத்துவம்:
இந்த நாள், நண்பர்களுடன் நாம் வைத்திருக்கும் உறவு, அவர்களுடன் நாம் பகிர்ந்து கொண்ட நினைவுகளை நினைவு கூர்ந்து மகிழ்ந்து, நாம் எவ்வளவு அன்புக்கு உரியவர்களாக இருக்கிறோம் என்பதைக் காட்டுகிறது. நம்முடைய நண்பர்களிடம் சிறிது கருத்து வேறுபாட்டால் இணக்கம் இல்லாமல் இருந்திருப்போம். அதை உடைத்து, நமது நட்பு பாலத்தை இணைக்கும் நாளாக இந்நாள் அமைகிறது.
ஆகையால் நண்பர்கள் தினத்தை கொண்டாடுங்கள், நட்போடு இருங்கள், நண்பராக இருங்கள். அனைத்து ஏபிபி நாடு வாசக நண்பர்களுக்கும், நண்பர்கள் தின வாழ்த்துகள்.
Image Credits: @pixabay
நண்பர்களுடன் பகிர டாப் 7 வாழ்த்துகள்:
1. நம்முடைய பிரச்னைகளை தீர்க்க வேண்டியதில்லை, நம்முடன் இருந்தாலே போதும், அதுவே யானை பலம்தான்.
2. ஒரு சிறந்த புத்தகம் 100 நல்ல நண்பர்களுக்கு சமம், ஆனால் ஒரு சிறந்த நண்பன் ஒரு நூலகத்திற்கே சமம்
3. நாம் ஒன்றாக சிரித்தோம், ஒன்றாக அழுதோம், எண்ணற்ற மறக்க முடியாத நினைவுகளைப் பகிர்ந்து கொண்டோம்.
4. மகிழ்ச்சியான தருணங்களில் மட்டும் இருப்பவர் நண்பர் இல்லை, நம்முடை துண்பத்திலும் இருப்பவரே நல்ல நண்பர்.
5. சம்பாதிப்பதற்கு நட்பைப் போல அரிய பொருள் வேறு எவை உண்டா? அதைச் சம்பாதித்து விட்டால் பிறர் புக முடியாதபடி நம்மைக் காப்பதற்கு அரிய பொருள் வேறு எவை உண்டா?.
6. ஒருவரோடு நட்புக் கொள்வது சிரித்து மகிழ மட்டும் இல்லை; நண்பரிடம் கூடாத செயல் இருக்கக் கண்டபோது , அதை கண்டித்துப் புத்தி சொல்வதற்கும்தான்
7. நம்மைச் சுற்றியும் எதிரிகள் இருந்தாலும், நம்முடன் ஒரு சிறந்த நண்பர் இருந்தாலே போதும்.