கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனிக்கு பெரிய இன்ட்ரோவெல்லாம் தேவைப்படாது. அவரின் அசால்ட் ஆட்டத்திற்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கின்றனர். சமூக வலைத்தளங்களில் எம்.எஸ்.தோனி அவ்வளவு ஆக்டிவெல்லாம் கிடையாது. ஆனால் அவர் செல்லப்பிராணிகளை வளர்ப்பதில் அதிக ஆர்வம்  கொண்டவர். தனது ஃப்ரீ டமை மகள் ஸிவா மற்றும் வளர்ப்பு பிராணிகளுடன் செலவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.


குதிரை முதல் ஆடு வரை !


தோனி சமூக வலைத்தளங்களில் அவ்வளவு ஆக்டிவ் கிடையாது. ஆனால்  அவரது மனைவி சாக்ஷி அவ்வபோது க்யூட் வீடியோக்களை பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் தோனி தற்போது வெள்ளை நிறத்தில் ஆடுகளை வாங்கி , தனது வீட்டு தோட்டத்தில் மேயவிட்டிருக்கிறார். அதனை இன்ஸ்டாகிராமில் ரீல்ஸாக ஷேர் செய்திருக்கிறார் சாக்ஷி. இது தோனி ரசிகர்களால் அதிகமாக விரும்பப்படுகிறது.






வீட்டை நிரப்பும் செல்லப்பிராணிகள் :


தோனி வீட்டில் நாய்கள், முயல்கள் , ஆடுகள், குதிரைகள் , கிளிகள் என ஏகப்பட்ட வெரைட்டியில் செல்லப்பிராணிகளை பார்க்க முடியும். முன்னதாக தோனி தனது செல்ல குதிரையுடன் ஓட்டப்பந்தயம் வைத்த வீடியோவையும் கூட சாக்ஷி பகிர்ந்திருந்தார். அது 5.7 மில்லியன் பார்வையாளர்களை தொட்டுள்ளது.


அந்த வீடியோவை கீழே காணலாம்.