13 வயதில் திருமணம் செய்து வைக்கப்பட்ட என் அம்மாவுக்கு பள்ளிக் கல்வியில்லை. ஆனால் எங்களை மிகச்சிறப்பாக வளர்த்தெடுத்தவர் அம்மா என்று நெகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருக்கிறார் ஐ.எஃப்.எஸ் அதிகாரி பர்வீன் கஸ்வான்.






இப்போது இருக்கும் நான், என் அம்மா இல்லையென்றால் நிச்சயம் இப்படியாக இருந்திருக்கமாட்டேன். தாய்மை என்பது எந்த நிபந்தனையுமற்ற ஏற்றுக்கொள்ளல் என்று ட்விட்டரில் பதிந்திருக்கிறார் சத்குரு ஜக்கி வாசுதேவ்.






தனது மகன் தன்னை முழுமைப்படுத்துவதாகவும், பெருமை கொள்வதாகவும் குறிப்பிட்டிருக்கிறார் தடகள வீராங்கனை பி.டி உஷா.






அம்மா நீ என் சிறந்த வழிகாட்டி, என் ஆற்றலுக்கும் தூண் என தனது நன்றியினை தெரிவித்திருக்கிறார் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா.






தன்னலமில்லாமல் இந்த உலகில் நீங்கள் யாரை நேசித்து, வளர்த்திருந்தாலும், உங்களுக்கு எனது அன்னையர் தின வாழ்த்துக்கள் என தெரிவித்திருக்கிறார் இந்தியாவின் மிகப் பிரபலமான சத்துணவு ஆலோசகரான ருஜுதா திவேகர்.