உங்களிடம் ஒரு கேள்வி கேட்கப்படுகிறது…உங்கள் மனசாட்சிக்கு விரோதமில்லாமல் பதிலளிக்க வேண்டும்.


கேள்வி: நீங்கள் பார்க்கும் வேலையில் மகிழ்ச்சியாக இருக்கிறீர்களா


பதில்:..


சொல்லவேண்டிய கட்டாயம் எதுவும் இல்லை…..உங்கள் மேலாளர் உங்கள் பதிலைப் பார்த்துவிடக்கூடும். யோசித்து பார்த்தால் யார்தான் தங்கள் செய்யும் வேலையில் மகிழ்ச்சியாக இருக்கிறார். எதுதான் நம் மனதிற்கு சந்தோஷம் தரும் வேலை. உலகின் மிக சுவாரஸ்யமான வேலையை உங்களிடம் கொடுத்து அதற்கு சம்பளமும் கொடுத்தால். என்ன மாதிரியான வேலைகள் என தெரிந்துகொண்டு  நீங்கள் உங்கள் முடிவை சொல்லலாம்


தொழில்முறையாக தூங்குபவர்


ஃபின்லாந்தில் ஒரு ஹோட்டல் உள்ளது. அந்த ஹோட்டலில் ஒவ்வொரு அறையிலும் இருக்கும் மெத்தைகளின் தரத்தை சோதித்து பார்க்க ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மெத்தையில்  நீங்கள் தூங்கிப்பார்த்து அவற்றைப் பற்றின உங்கள் கருத்துகளை தெரிவிக்க வேண்டும். இந்த வேலைக்கு உங்களுக்கு சம்பளமும் கொடுப்பார் அந்த ஹோட்டலின் முதலாளி.


பெயிண்ட் உலர்வதை பார்ப்பவர்


தற்போது இந்த வேலையை அமெரிக்காவில் ஒருவர் செய்து வருகிறார்.ஒவ்வொரு புதிய வகையான பெயிண்ட் உலர்வதற்கு எவ்வளவு நேரம் எடுத்துக் கொள்கிறது என்பதை நீங்கள் பொறுமையாக அவதானித்துச் சொல்ல வேண்டும். அந்த நபர் இந்த ஜென்மத்திற்கு இந்த வேலையை விட்டு போவார் என எதிர்பார்க்க முடியாது.


முழு நேர நெட்பிளிக்ஸ்


 எது சிறந்தது. வாரம் முழுவதும் வேலை செய்துவிட்டு கிடைக்கும் சில மனி நேரம் நெட்பிளிக்ஸ் பார்ப்பதா இல்லை வாரம் முழுவதும் நெட்ப்ளிக்ஸ் பார்ப்பதையே வேலையாகக் கொள்வதா? நெட்ஃப்ளிக்ஸ் தயாரிக்கும் தொடர்களை வெளியாவதற்கு முன்பே பார்த்து அவற்றை தரம் பிரித்துக் கொடுப்பதுதான் இந்த வேலை. இதற்கு சம்பளம் தரப்படும். பாப்கார்ன் நீங்கள் வாங்கிக் கொள்ளுங்கள்.


தள்ளு தள்ளு தள்ளு


ஜப்பானில் அதிகப்படியான கூட்டம் ரயிலில் ஏறுவதற்கு ஒரு நபர் நியமிக்கப்படுகிறார்.இவரது வேலை மொத்த கூட்டத்தையும் ரயிலில் கூட்டம் நிரம்பி வழியும் வரை ஆட்களை உள்ளே பிடித்துத் தள்ளுவது.


ஸ்னேக் மில்கர்


நீங்கள் என்னவாக இருக்கிறீர்கள் என்று கேட்டால் நான் ஒரு ஸ்னேக் மில்கராக இருக்கிறேன் என்று சொன்னால் அவரிடம் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருங்கள்.பாம்புகளில் இருந்து அவற்றின் நஞ்சை சேகரிப்பவர் தான் ஸ்னேக் மில்கர்.


சுவையான ஒரு தொழில்


இந்த தொழிலில் நீங்கள் மிகவும் சுவையான உணவு  வகைகளை சாப்பிட்டு பார்க்க வேண்டும்.ஆனால் ஒரு நிபந்தனை. நீங்கள் சாப்பிடப் போவது நாய்களின் உணவை.சந்தையில் வரும் அனைத்து வகையான நாய் உணவு வகைகளை சாப்பிட்டு விமர்சிப்பதற்கு ஒரு சம்பளமும் உண்டு.


இப்போது சொல்லுங்கள் வாய்ப்பு கிடைத்தால் இவற்றில் எந்த வேலைக்கு நீங்கள் செல்வீர்களென்று.