எல்லோரும் ஃபிட்டாக இருக்கவேண்டும் உடல் லைட்டாக உணரவேண்டும் என்று விரும்புவார்கள். மேலும் ஒருவர் தங்களைத் தாங்களே ஃபிட்டாக வைத்துக் கொள்வதில் தங்கள் நாளின் சிறிது நேரத்தை ஒதுக்குவது மிகவும் முக்கியம். ஆனால் வொர்க்அவுட்டிற்கான சரியான நேரம் எது என்பதைப் பொருத்து அதன்மூலம் நாம் தேடும் முடிவுகள் விரைவாகவும் சிறந்ததாகவும் இருக்கும். காலை, மதியம் அல்லது மாலை/இரவு என ஒரு நாளின் வெவ்வேறு காலக்கட்டத்தில் வொர்க் அவுட் செய்வதில் பல நன்மை தீமைகள் உள்ளன. உடலை மீட்க நேரத் தேவை மற்றும் ஊட்டச்சத்து கட்டாயமாகும். இந்த எல்லா காரணிகளையும் மனதில் வைத்து, உடற்பயிற்சி செய்ய சிறந்த நேரம் எது என்பதை ஆய்வு செய்வோம். வொர்க்அவுட்டிற்கான சிறந்த நேரத்தைத் தேர்ந்தெடுப்பது உங்கள் செயல்திறனை அதிகரிக்க மற்றும் அதன்மூலம் விரைவான தசை வளர்ச்சி மற்றும் கொழுப்பைக் குறைக்க உதவும.



காலை உடற்பயிற்சியின் நன்மை தீமைகள்
பகலில் உழைப்பு மிகுந்த வேலையைச் செய்பவர்களுக்கு காலை வொர்கவுட் சிறந்தவை. சோர்வு குறைவாகவும் மற்றும் வலிமை அதிகபட்சமாகவும் இருக்கும் போது உடல் சிறப்பாக செயல்பட முடியும். நீங்கள் காலையில் வெறும் வயிற்றில் உடற்பயிற்சி செய்தால், உடல் சேமிக்கப்பட்ட கார்போஹைட்ரேட்டுகளை தனது ஆற்றலுக்காகப் பயன்படுத்துகிறது மற்றும் இதனால் உடலில் கொழுப்பு வேகமாக குறையும்.


ஆனால் நீங்கள் காலையில் உடற்பயிற்சி செய்தால், உடல் விறைப்பு ஏற்படலாம். இருப்பினும், நீங்கள் வொர்க்அவுட்டைத் தொடங்குவதற்கு முன், போதுமான அளவு வார்ம்-அப் செய்தால், இதனைத் தவிர்க்க முடியும். காலை பயிற்சிக்கு முன் காபி உட்கொள்வது உங்கள் செயல்திறனை அதிகரிக்கும்.


பிற்பகல் பயிற்சியின் நன்மை தீமைகள்


பிற்பகலில்  மதியம் 3 மணிக்குப் பிறகு எந்த நேரமும் உடற்பயிற்சி செய்ய சிறந்தது. இருப்பினும், அலுவலகம் செல்பவர்களுக்கு, மதிய நேரத்தில் ஜிம்மிற்கு செல்ல முடியாது. வொர்க்அவுட்டுக்கு முன் சரியான ஓய்வு தேவை மற்றும் மாலை நேரத்தில் அதிக வேலை காரணமாக இந்த ஓய்வு உங்களுக்குக் கிடைக்காமல் போகலாம். உங்கள் மதிய உணவு நேரத்தை நீங்கள் நிர்வகிக்கவும், உடற்பயிற்சிக்கு முன் சரியான ஓய்வைப் பெறவும் முடிந்தால், சிறந்த உடற்பயிற்சிக்கான நேரம் மதியத்தைத் தவிர வேறு எதுவும் இல்லை. 


மாலை/இரவு உடற்பயிற்சியின் நன்மை தீமைகள்
நடத்தப்பட்ட பல ஆய்வுகளின்படி, மாலை நேரத்தில் பயிற்சி சிறந்த தசை வளர்ச்சிக்கு உதவுகிறது. இந்த நேரத்தில், ஒருவர் உடலில் அதிக நீர்சத்தும் மற்றும் உடலின் முக்கிய உறுப்புகளின் வெப்பநிலை, அதாவது, இதயம், கல்லீரல், மூளை மற்றும் இரத்தம் போன்ற உடலின் உள் உறுப்புகளின் வெப்பநிலை மிக உயர்ந்ததாக இருப்பதும் இதற்குக் காரணமாக இருக்கலாம். 


ஒரு மாலை நேர வொர்க்அவுட்டின் தீமைகள் என்னவென்றால், நண்பர்கள் அல்லது குடும்பத்தினருடன் வெளியே செல்லும் பழக்கம் இருப்பவ்ர் என்றால் இதனால் உங்கள் வொர்க்அவுட்டைத் தவிர்க்கும் வாய்ப்புகள் உள்ளன. இதுதவிர ஜிம்மில் வொர்க்கவுட் செய்பவர்கள் மாலை நேரத்தில் அதிகம் என்பதால் முன்கூட்டியே திட்டமிடாத நிலையில் இது உங்கள் வொர்க்அவுட் ரொட்டீனை பாதிக்கலாம், ஏனெனில் நீங்கள் உபகரணங்களுக்காக காத்திருக்க வேண்டி இருக்கும். இது உங்கள் பயிற்சியில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்