மழைக்காலம் தொடங்கியாச்சு. சாரல், குளிர் இதோடு கொசுக்கடி காலமும் அழையா விருந்தாளியாக வந்துரும். கொசுக்கள் மூலம் பல்வேறு நோய்கள் பரவும்; தண்ணீர் மூலமே பல நோய்கள் தொற்றும். பெரியவர்களுக்கே ஆபத்து என்றால், குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும் என்பதால் கூடுதல் அச்சம் எழும். 


குழந்தைகளை வீட்டுக்கு வெளியே அனுப்பாமல் இருப்பதும் மிகவும் சவாலான ஒன்று.  இந்தக் காலத்தில் டெங்கு, மலேரியா, சிக்கன்குனியா உள்ளிட்ட வைரஸ் தொற்று ஏற்படலாம்.  கொசுக்கள் மூலம் பரவும் வைரஸ் தொற்றில் இருந்து குழந்தைகளை எப்படி பாதுகாப்பது என்பது குறித்து நிபுணர்கள் கூறிய அறிவுரைகளை இக்கட்டுரையில் காணலாம்.


உடை தேர்வு:


குழந்தைகள் வெளியே சென்று மற்ற குழந்தைகளுடன் விளையாட வேண்டும் என்று அடம் பிடித்தால், அதற்கேற்ற உடைகளை அணிய தேர்வு செய்யலாம். உடல் முழுவதும் மூடிய ஆடை என்றால் சிறப்பு, கொசுக்கடியில் இருந்து தப்பிக்கலாம். அதற்காக காற்று புகாத ஆடையாக இருக்கக் கூடாது. கதர் ஆடைகள் சிறந்தது.


லோஷன்:


கொசு கடிக்காமல் இருக்க உடலில் லோஷன் அல்லது கிரீன் அப்ளை செய்வது வழக்கமானதுதான். பெரியவர்களுக்கே இது ஆரோக்கியமில்லை எனும்போது, குழந்தைகளின் ஸ்பரிசத்திற்கு கேடு விளைவிக்கக் கூடியது என்பதில் எவ்வித மாற்று கருத்தும் இல்லை. நீங்கள் பயன்படுத்தும் கிரீம்களில் என்ன சேர்க்கப்பட்டிருப்பதை ஆராய வேண்டும். கொடிக்கடியில் தப்பிக்க கிரீம் மற்றும் லோசன்களில் DEET (N, N-diethyl-meta-toluamide) என்ற வேதிப்பொருள் இடம்பெற்றுள்ளது. இதை உடலில் தடவினால் கொசு கிட்டே வராது. ஆனால், இதனால் ஏற்படும் பக்கவிளைவுகள் அதிகம்.  இதனால் இதை பயன்படுத்துவதை தவிர்க்கவும். அதற்கு மாற்றாக இயற்கையான லெமன்கிராஸ் எண்ணெய் (lemongrass), யூகலிப்டஸ் எண்ணெய் (eucalyptus) உள்ளிட்டவைகள் குழந்தைகளுக்கு பாதுகாப்பானதுதான்.


வீட்டில் நீர் தேங்க விட வேண்டாமே:


உங்கள் வீட்டின் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருங்கள். தண்ணீர் தேங்க விட வேண்டாம். பூச்செடி தொட்டிகள், வாளியில் தண்ணீர் வைப்பது, தொட்டிகளில் திறந்த நிலையிலேயே தண்ணீரை சேமிப்பது உள்ளிட்டவற்றை செய்யாதீங்க. லீக் ஆகும் தண்ணீர் குழாய்களை கவனித்து சரிசெய்யுங்கள். 


கொசு வலை சிறந்தது:


கொசு கடியில் இருந்து தப்பிக்க எளிய மற்றும் சிறந்த வழி கொலை வலை. குழந்தைகள் தூங்கும் இடத்தில் கொசு வலை இருப்பது நல்லது. 


குழந்தைகளுக்கு காய்ச்சல் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது. 




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண