Mindfulness என்னும் கவனம் குவித்தலுக்கும், பாலியல் அனுபவங்களுக்கு இடையே ஒரு தொடர்பு இருப்பதை பல ஆய்வுகள் வெளிப்படுத்துகின்றன. 2018-ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வின்படி, அதிக கவனத்துடன் இருப்பவர்களுக்கு, கவனம் குறைவானவர்களை விட அதிக பாலியல் ஆசை இருக்கும் என்று கூறுகிறது. உடலுறவின்போது அந்த கணத்தின் நினைவோடு இருப்பவர்கள் அதிக பாலியல் திருப்தி அடைவதாக 2019-ஆம் ஆண்டில் செய்யப்பட்ட மற்றொரு ஆய்வு கூறுகிறது. அதுமட்டுமல்ல, உடலுறவின் போது கவனத்தை கடைப்பிடிக்கும் பெண்கள் மிகவும் சுலபமாக பாலியல் ரீதியான மனதை ஆயத்தப்படுத்துகிறார்கள் என்று மற்றொரு ஆய்வு கண்டறிந்துள்ளது.



  1. மன அழுத்தத்தை குறைக்கிறது


கவனத்துடன் இருத்தல் மற்றும் அந்த கணத்தில் விழிப்போடு இருப்பது மன அழுத்தத்தைக் குறைப்பதற்கான ஒரு சிறந்த கருவியாகும். எனவே, கார்ட்டிசோல் மற்றும் அட்ரினலின் அளவைக் குறைப்பதன் மூலம் பாலியல் ஆசை மற்றும் செயல்திறனை அதிகரிக்க முடியும் என்பதில் ஆச்சரியமில்லை. நாம் மன அழுத்தத்தில் இருக்கும்போது உடலுறவு கொள்ளும் நிலைக்கு வந்ததாக உணரமுடியாது. வேலை, உறவுகள் மற்றும் பல காரணங்களால் ஏற்படும் அழுத்தங்களால் நம் வாழ்க்கை மன அழுத்தத்தால் நிறைந்துள்ளது. உங்கள் மன அழுத்த நிலைகள் அதிகமாக இருக்கும்போது, உங்களுக்கு உடலுறவில் உச்சத்தை அடைவது கடினமான காரியமாக இருக்கலாம். ஏனென்றால் மன அழுத்தம் மற்றும் கவலை இரத்த நாளங்களின் சுருக்கத்தை ஏற்படுத்துகிறது, அது கவனத்தை அந்த கணத்தில் இருக்கும் நினைவை பாதித்து, திசை திருப்பி இல்லற வாழ்க்கையை கெடுக்கிறது.



  1. ஆழ்ந்த ஓய்வை கொடுத்து, உடலுறவுக்கான ஆற்றலை தருகிறது


ஆற்றல் இல்லை என்பதற்காக உடலுறவை தவறவிடுவதை பலர் அனுபவித்திருக்கக்கூடும். நேஷனல் ஸ்லீப் ஃபவுண்டேஷன் நடத்திய ஆய்வின்படி, தம்பதிகள் உடலுறவு கொள்ளாததற்கு மிகவும் பொதுவான காரணம் சோர்வுதான். நீங்கள் மனப்பக்குவத்தை கடைப்பிடித்து, ஒரு நேரத்தில் ஒரு பணியில் கவனம் செலுத்தும்போது, அவர்கள் சோர்வாக உணர்வதில்லை, தூக்கமின்மையால் பாதிக்கப்படுவதில்லை. இது இரவில் உடலுறவில் கவனம் செலுத்த உங்களுக்கு அதிக ஆற்றலை அளிக்கிறது.



  1. அந்த கணத்தில் வாழ வைக்கிறது, கவனச்சிதறலை தடுக்கிறது


நம்மில் பெரும்பாலோர் இடது மூளை வளர்ச்சியடையாதவர்களாக இருக்கிறோம். இதன் அடிப்படையில் என்ன அர்த்தம் என்றால், நமது மூளை கடந்த காலத்தை பற்றி ஆய்வு செய்கிறது, மேலும் எதிர்காலத்தை பற்றி சிந்தித்து வருகிறது. கடந்த கால மற்றும் எதிர்கால சிந்தனைகளின் சுழற்சியை உடைப்பது கடினமாகிறது, அங்குதான் மனநிறைவு உண்மையில் உதவுகிறது. உடலுறவு கொள்ளும்போது அந்தக் கணத்தில் கவனம் செலுத்தி, அந்த தருணத்தை, வாழ்வின் இருப்பை உணர்ந்தால் நீங்கள் உச்சக்கட்டத்தை சிறப்பாக அடைய முடியும். 


கவனமாக இருத்தல் உங்கள் வாழ்க்கைத்துணையின் மன உணர்வுகளையும், அவர்களின் விருப்பு, வெறுப்புகளையும் புரிந்துகொள்ள உதவும் எனவும் அந்த ஆய்வுகள் தெரிவிக்கின்றன.