ஆழ்ந்த தூக்கம் தான் ஒருவரின் ஆரோக்கியத்தையும் ,  உடல் இயக்கத்தையும் தீர்மானிக்கிறது. போதுமான தூக்கம் இல்லையென்றால் அது உடல் மற்றும் மனநலத்தை பாதிக்கும். தூக்கமின்மையை போக்க சில எளிமையான, படுக்கைக்கு செல்லுவதற்கு முன்  எடுத்து கொள்ள வேண்டிய பானங்கள் தொகுப்பு இங்கே


தூக்கம் என்பது  உடலில் நடக்கும் ஒரு இயற்கையான சுழற்சி ஆகும். மூளையில் , ஹைப்போதலாமஸ் என்ற பகுதியில் சர்க்காடியன் ரிதம் என்ற ஒரு சுழற்சி  இருக்கும்.இது உடலில் இயங்கும் கடிகாரம் என்று கூட சொல்லலாம். எப்போது தூங்க வேண்டும், எப்போது எழுந்திருக்க வேண்டும், என ஒரு அலாரம் போன்று செயல்படுகிறது. இது சூரிய ஒளியுடன் இணைந்தே இயங்கும். தூக்கம் மிகவும் அவசியம்.


தூக்கமின்மை பல விதமான உடல் உபாதைகளை தரும். அதாவது, புத்துணர்ச்சியின்மை, குழப்பம், மனஅழுத்தம், உடல்  எடை அதிகமாதல், ஹார்மோன் குறைபாடுகள், என பலவிதமான பிரச்சனைகள் வரும். ஒரு இரவு  ஆழ்ந்த உறக்கம் என்பது,  உடலுக்கும், மனதுக்கும்  ஓய்வாகவும்,மேலும், அடுத்த நாளை சுறுசுறுப்பாக இயங்க வைக்க இதுவும்.


இந்த கொரோனா பெருந்தொற்று மனஅழுத்தத்தைகையும், தூக்கமின்மை போன்றவற்றை தந்து விட்டு செல்கிறது. இந்திய மக்கள் தொகையில் 33% மக்கள் தூக்கமின்மையால் அவதியுறுகின்றனர். தூக்கமின்மை சரிசெய்ய தூங்க செல்வதற்கு முன் என்ன உணவுகளை எடுத்து கொள்ளலாம் என  தெரிந்து கொள்ளலாம்..



  • பால் - வெதுவெதுப்பான பால் படுக்கைக்கு முன் எடுத்து கொள்வது,நன்றாக  தூங்குவதற்கு உதவும். இதில் ட்ரிப்டோபான் எனும் அமினோ அமிலம் இருப்பதால், இது செரோடோனின் மற்றும் மெலடோனின் எனும் ஹார்மோன்களை  சுரக்கிறது.இது  உடலை தளர்வாக வைத்து ஆழ்த்த உறக்கத்திற்கு உதவும்.





  • பாதாம் பால் - சிலருக்கு மாட்டுப் பால் ஒவ்வாமை தரும். மேலும் சைவ உணவு உண்பவர்கள் மாட்டு பாலை தவிர்ப்பார்கள். அவர்களுக்கு சிறந்த மாற்றாக பாதாம் பால் இருக்கும். இதில் ட்ரிப்டோபான் எனும் அமினோ அமிலம் நிறைந்து இருக்கிறது.





  • வெதுவெதுப்பான நீரில் தேன் கலந்து குடிக்கலாம். அல்லது க்ரீன் டீ உடன் தேன்  கலந்து  குடிக்கலாம் தேனில் ட்ரிப்டோபன் இருப்பதால் இது  உறக்கத்திற்கு உதவும்.





  • செவ்வந்தி பூ டீ - பூக்களில் இருந்து டீ தயாரிக்கலாம். நீங்கள் இதை புதிதாக பார்க்கிறீர்களா . ஆனால் செவ்வந்தி பூக்களை நீரில் கொதிக்க வைத்து , வடிகட்டி பருகலாம். அல்லது டீ பேக் கிடைக்கும். அதை நீரில் போட்டு டீ தயாரிக்கலாம். இதில் ஆன்டிஆக்ஸிடன்ட் ஆன அபிஜெனின் இருப்பதால், இது உடலை தளர்வாக வைக்க உதவும். அதனால் சீக்கிரம் தூக்கம் வரும்.





  • அஸ்வகந்தா - இது மிக சிறந்த ஆயுர்வேதா  மருந்து . இந்த மூலிகையின் வேர்களை நீரில் வேகவைத்து , வடிகட்டி, தேன் கலந்து எடுத்து கொள்வது தூக்கத்திற்கு உதவும். இது உடலையும் மனதையும் புத்துணர்ச்சியாக்க உதவும்.  ஆயுர்வேத மருத்துவத்தில் மிக  முக்கியமாக  பயன்படுத்த  படும் மூலிகை ஆகும்.