குளிர்காலங்களில் மூட் ஸ்விங்ஸா?
குளிர்காலம் பலருக்கு அற்புதமாக இருந்தாலும், மற்றவர்களுக்கு அவை துயரங்கள் நிறைந்ததாக இருக்கும். ஒருபுறம், நல்ல உணவு குளிர்காலத்தில் நமக்காகக் காத்திருந்தாலும், மறுபுறம் குளிர்கால நோய்கள் போதும் என்கிற அளவுக்கு உள்ளன. குளிர்காலத்தில் போதுமான சூரிய ஒளி இல்லாததால் மனச்சோர்வு மற்றும் மனநிலையில் பாதிப்புகள் ஏற்படுவது பொதுவானது. இது சில ஹார்மோன்களின் சுரப்பை பாதிக்கலாம். ஒவ்வொரு பருவத்தையும் சமாளிக்க வழிவகை உள்ள நிலையில் குளிர்காலம் மட்டும் அதற்கு விதிவிலக்கா என்ன? நீங்கள் சரியான உணவை உட்கொண்டால், நிறைய தண்ணீர், பழச்சாறுகளைப் பருகி வந்தால், குளிர்காலத்தில் உங்கள் மனநிலையை நிர்வகிப்பது எளிதாக இருக்கும். உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் சூரிய ஒளியில் சிறிது நேரம் நிற்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். உங்களது கிரியேட்டிவ் பக்கத்தை வளப்படுத்துங்கள். வீட்டுக்குள்ளேயே உங்களது பொழுதுபோக்கு என்ன என்று அறிந்து அதனை வளர்த்துக்கொள்ளுங்கள். உங்களைப் பிஸியாக வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் வைட்டமின் D மற்றும் B12 அளவைச் சரிபார்த்துக்கொள்ளுங்கள். உங்கள் மனநிலையை உடனடியாக எனர்ஜெட்டிக் ஆக்கிக்கொள்ள உங்கள் நண்பர்களுடன் தொடர்ந்து இணைந்திருக்க மறக்காதீர்கள்.
உங்கள் மன மற்றும் உணர்ச்சி ஆரோக்கியத்தை கட்டுக்குள் வைத்திருக்க இந்த குளிர்காலத்தில் நீங்கள் செய்யக்கூடிய சில விஷயங்களை மனவியல் நிபுணர் பரிந்துரைத்துள்ளார்.
சூடான பானங்களாக இருந்தாலும் உங்களை ஹைட்ரேட் செய்ய அது உதவியாக இருக்கும். வெதுவெதுப்பான நீர் அல்லது பழச்சாறுகள் உங்களை நீரேற்றமாக வைத்திருக்க அற்புதமான வழியாகும். ஒரு நாளில் ஒரு கப் காபி அல்லது தேநீர் நல்லது, ஆனால் அதிகமாக வேண்டாம், ஏனெனில் அது காபி அடிக்ஷன் பழக்கத்துக்கு வழிவகுக்கும்.
எதிர்மறை சிந்தனைகளை எதிர்கொண்டு கவனமாக இருங்கள்
வீட்டிற்குள் இருப்பது நிச்சயமாக உங்கள் ஸ்க்ரீன் டைம்மை அதிகரிக்கும், எனவே நீங்கள் பார்க்கும் விஷயங்களில் சற்று கவனமாக இருங்கள், ஏனெனில் அது நிச்சயமாக உங்கள் உணர்ச்சி மற்றும் மன ஆரோக்கியத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும். உணர்ச்சி ரீதியாகவோ அல்லது உடல் ரீதியாகவோ நாம் என்ன உணர்கிறோம், என்பதைதான் நாம் நமது ஆளுமையாக வெளிப்படுத்துகிறோம்.
சுய பராமரிப்பு
மாய்ஸ்சரைசர் தடவவும், வெதுவெதுப்பான நீரில் குளிக்கவும், இல்லாவிட்டால் சிறிது உடற்பயிற்சி செய்யவும், லிப் பாம் பயன்படுத்தவும், தலைமுடிக்கு எண்ணெய் தடவவும், ஆரோக்கியமான உணவுகளை உண்ணவும், சரியான நேரத்தில் தூங்கவும். இவை நாம் தவறவிடக் கூடாத சில விஷயங்கள், ஏனெனில் இது நம் உடல் தோற்றத்தைப் பாதிக்கலாம் அல்லது எடையைக் குறைக்கலாம், மேலும் இது நிச்சயமாக நம்பிக்கையை பாதிக்கும்.
ஓய்வெடுக்க நேரம் ஒதுக்குங்கள்
உங்கள் மன ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ளுங்கள். உங்களுக்காக ஒரு ஜர்னலை (அதாவது தினசரி வேலைகளை பற்றி எழுதுதல்) பராமரித்தல், உங்கள் தேவைகளை வெளிப்படுத்துதல், மக்களுடன் ஆரோக்கியமான உறவுகளை உருவாக்குதல், தேவைப்பட்டால், ஒரு தெரபிஸ்ட்டைப் பார்ப்பது, ஒரு நாளைக்கு 10 நிமிடங்கள் இருந்தாலும், தியானம் செய்வது போன்றவை மிக முக்கியமான விஷயங்கள்.