உங்க துணையோ, மனைவியோ இதெல்லாம் உங்கக்கிட்ட பகிர்ந்துக்காம இருக்கலாம். ஆனா இதெல்லாம் உங்கக்கிட்ட அவங்க அதிகமா எதிர்பார்க்கலாம்.. காதலும், காதல் நிமித்தம் காமமும் பேசப்படாமல் தவிர்க்கப்படும் நிலையில் இதோ ஒரு Write Up. காதலர்களுக்கு, கணவர்களுக்கு சில Bed Time அட்வைஸ் சொல்கிறார் பேராசிரியர், முனைவர் திரு.ஷரன்ஷ் ஜெயின்.
பேராசிரியரும், செக்ஸாலஜிட்டுமான ஷரன்ஷ் ஜெயின், தனியார் இதழ் ஒன்றுக்கு அளித்திருக்கும் பேட்டியில், காதல் இணை, கணவன் - மனைவிக்கு இடையில் இருக்கவேண்டிய சில முக்கியமான விஷயங்களைப் பட்டியலிட்டிருக்கிறார். நீங்க இதையெல்லாம் உங்க துணையிடம் பேசி இருக்கீங்களான்னு செக் பண்ணிக்கோங்க..
Love and Sex Do and Donts..
வார்த்தைகள் தான் எல்லாமே..
தினமும் நிறைய பிரச்சனைகள், கடமைகள் இருந்தாலும், உங்களுக்கான தனியான நேரத்தை, உங்கள் காதலுக்கும் காமத்துக்குமான நேரத்தை சேர்ந்து ப்ளான் பண்ணுங்க. அதுல நீங்க என்ன எதிர்பாக்குறீங்கன்னு கேளுங்க.
கொஞ்சம் ஹோம்வொர்க் பண்ணுங்க..
உங்க படுக்கையறையும், உங்க காதல், காம நிகழ்வுகளும் எப்படி இருக்கணும்னு நீங்க டிசைன் பண்ணுங்க. அதைப் பேச தயங்காம உங்க துணையோட வெளிப்படையா பேசுங்க. காதல் ஒரு கடமை போல இல்லாம, சின்ன சின்ன பரிசுகளோடயும், அன்பான மெசேஜோடையும் உங்க இரவைத் தொடங்குங்க.
செக்ஸ்டிங்
மெசேஜ் டெக்ஸ்டிங் கேள்விப்பட்டிருக்கலாம். அதென்ன செக்ஸ்டிங்? உங்க துணையை புகழ்ந்தோ, அவங்க அழகை பாராட்டியோ, இந்த ஸ்மைலி முத்தங்களோ அனுப்ப மறக்காதீங்க. இதெல்லாம் உங்க காதலை அணையாம காப்பாத்துற விஷயங்கள்.
புது முயற்சிகள் (Position)
உங்க இணையோட, மனைவியோட காதல் நிமித்தமான காமத்துல ஈடுபடும்போது, ஒரே மாதிரி பொசிஷன்தான் முயற்சி பண்றீங்களா? அவங்க இதை சொல்லாம இருக்கலாம். அதுல அவங்களுக்கு தயக்கமும் இருக்கலாம். அவங்களுக்கு விருப்பம் இருக்குற மற்ற பொசிஷன்லயும் உங்க காதல் நிகழ்வுகளைத் தொடங்குங்க.
காமத்துக்குப் பின்னும் காதல்
காதல், கல்யாணமானதும் முடிஞ்சுபோற விஷயம் இல்ல. உங்களுக்கான உச்சக்கட்டத்தை எட்டியபின்னும் கூட உங்க மனைவிக்கோ, துணைக்கோ ஐ லவ் யூ சொல்லுங்க.. உங்க அன்பான அணைப்பை உணரவைங்க..
காதலிங்க பாஸ்.. வாழ்க்கை நல்லா இருக்கும்..