ஃபோர்டு தொழிற்சாலை மீண்டும் தமிழ்நாட்டில் உற்பத்தியை தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன


 


கோடிக்கணக்கில் இழப்பு


அமெரிக்காவைச் சேர்ந்த முன்னணி கார் நிறுவனமான ஃபோர்டு இந்தியாவில் சுமார் 20 ஆண்டுகளாக வாகனங்களை உற்பத்தி செய்து வந்தது. இந்த ஆலைகளில் வருடத்திற்கு 4 லட்சம் கார்கள் உற்பத்தி செய்ய முடியும் என்ற நிலையில் , படிப்படியாக உற்பத்தி குறைக்கப்பட்ட 80 ஆயிரம் கார்கள் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டது . இதனால் ஃபோர்டு நிறுவனம் தொடர்ந்து பெரும் நஷ்டத்தில் இயங்கி வந்ததாக அந்த நிறுவனம் தெரிவித்தது. இதனால் 14,000 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறி, போர்டு நிறுவனம் இந்தியாவை விட்டு வெளியேற முடிவு செய்தது. ஃபோர்டு தனது கடைசி காரை தயாரித்து, இனி இந்தியாவில் இருந்து வெளியேறுகிறோம் என அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.


இதனால் சென்னை தொழிற்சாலையில் பணியாற்றி வந்த ஊழியர்களுக்கும் செட்டில்மெண்ட் அறிவித்தது. பெரும்பாலான ஊழியர்கள் செட்டில்மெண்ட் தொகையை பெற்ற நிலையில், சில ஊழியர்கள் அதைப் பெற்றுக்கொள்ளாமல் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளனர். இது தொடர்பான வழக்கு நடைபெற்று வருகிறது. ஃபோர்டு நிறுவனத்தின் மூடப்பட்ட குஜராத் தொழிற்சாலையை, டாடா குழுமம் 725.7 கோடி ரூபாய்க்கு ,கடந்த ஜனவரி மாதம் வாங்கி இருந்தது குறிப்பிடத்தக்கது.


பின்வாங்கிய ஃபோர்டு நிறுவனம்


சென்னை மறைமலை நகரில் சுமார் 350 ஏக்கர் பரப்பளவில், தொழிற்சாலை அமைந்துள்ளது. சென்னையில் உள்ள ஆலையை விற்பனை செய்ய ஃபோர்டு மோட்டார்ஸ், நிறுவனம் பல்வேறு வகையில் முயற்சி செய்து வந்த நிலையில், அதிலிருந்து ஃபோர்டு நிறுவனம் பின் வாங்கியதாக தகவல்கள் வெளியாகி இருந்தன. மீண்டும் சென்னையில் ஃபோர்டு நிறுவனம் கார்களை உற்பத்தி செய்யும் முயற்சியில் ஈடுபட்டு வந்ததாகவும் அவ்வப்பொழுது தகவல்கள் வெளியாகி இருந்தன.


முதலமைச்சரின் வெளிநாட்டு பயணம் 


தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக அரசு முறைப் பயணமாக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அமெரிக்கா சென்றுள்ளார். கடந்த மாதம் 27ஆம் தேதி அமெரிக்கா புறப்பட்ட முதல்வர் ஸ்டாலின் செப்டம்பர் 12ஆம் தேதி வரை அதாவது 17 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அமெரிக்காவில் தொடர்ச்சியாக பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வரும் முதல்வர் மு.க ஸ்டாலின், தொழில் முதலீடுகளையும் ஈர்த்து வருகிறார். 


இதன் ஒரு பகுதியாக மூடப்பட்ட ஃபோர்டு நாளை நிறுவனத்தின், அதிகாரிகளை தமிழ்நாடு முதலமைச்சர் சந்தித்துள்ளார். தமிழ்நாட்டில் மீண்டும் ஃபோர்டு நிறுவனம் கார் உற்பத்தி தொடங்குவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.‌ ஏற்கனவே தமிழ்நாடு அரசுக்கும் ஃபோர்டு நிறுவனத்திற்கும் இருக்கும் , நல்லுறவு ஆகியவை குறித்து பேசப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தன. தொடர்பாக தமிழ்நாடு அரசும் அதிகாரப்பூர்வ தகவல்களை வெளியிட்டிருந்தது. 


உறுதி செய்த ஃபோர்டு நிறுவனம் 


தமிழ்நாடு முதலமைச்சர் ஃபோர்டு நிறுவன அதிகாரிகளை சந்தித்தது தொடர்ந்து, ஃபோர்டு நிறுவனம் தமிழ்நாட்டில் மீண்டும் கார்களை உற்பத்தி செய்ய முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு அரசுக்கும், ஃபோர்டு நிறுவனம் கடிதம் எழுதியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்மூலம் ஃபோர்டு நிறுவனம் மீண்டும் தமிழ்நாட்டில் கார்களை உற்பத்தி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த முறை நேரடியாக ஃபோர்டு நிறுவனம் தனது கார் உற்பத்தியை தொடங்குமா ? அல்லது வேறு நிறுவனத்துடன் கைகோர்ப்புமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஃபோர்டு நிறுவனம் மீண்டும் தமிழ்நாட்டில் உற்பத்தியை தொடங்கும் என அறிவிப்பு வெளியாகிய நிலையில், எந்த மாதிரியான கார்களை இந்த நிறுவனம் தயாரிக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.


Car loan Information:

Calculate Car Loan EMI