அழுத்தம் நிறைந்த இன்றைய நவ நாகரிக வாழ்வில் அதிலிருந்து விடுபட ஏதேனும் வழி தேவை. அது உடற்பயிற்சியாக இருக்கலாம் தியானமாக இருக்கலாம் இல்லை இன்னும் வேறு யோகக் கலைகளில் ஏதாவது இருக்கலாம். சமீப காலமாக தியானம் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. மெடிட்டேஷனை முறையாக செய்ய இமாலய சித்த அக்சர் நிறுவனர் சில வழிகாட்டுதல்களைப் பகிர்ந்துள்ளார்.


1. முறையாகக் கற்றுக் கொள்ளுஙகள்:


யோகாவைப் பழகும் போது மனதில் எவ்வித சஞ்சலமும் ஏற்படாது. ஒவ்வொரு நாளும் புதிதாக ஏதேனும் ஒன்றை கற்றுக் கொள்ளலாம். ஆகையால் நீங்கள் முதன்முறையாக மெடிட்டேஷனை மேற்கொள்கிறீர்கள் என்றால் அது முறையாக கற்றுக் கொள்ளுங்கள்.


2. மூச்சுப் பயிற்சி தேவை


தினமும் பத்து நிமிடம் ஒதுக்கி மூச்சுப் பயிற்சி செய்தால் பலன் கிடைக்கும். முதுகை நேராக வைத்தபடி, அமர்ந்து, கண்களை மூடி நிதானமாக மூச்சு விட்டால் புதிய அனுபவத்தை உணரலாம். மூச்சுப்பயிற்சி செய்பவர்கள் காலையில் 5 நிமிடம் மாலையில் 5 நிமிடம் மூச்சை மெதுவாக இழுத்து வெளியே விட்டால் நல்ல மாற்றம் தெரியும்.


இடதுபுற நாசித்துவாரத்தில் காற்றை உள்ளிழுத்து பின்பு காற்றை அடக்காமல் வலப்புற நாசியின் வழியே காற்றை வெளியேற்ற வேண்டும். அதன்பின்பு வலப்புற நாசியினால் காற்றை உள்ளிழுத்து காற்றை அடக்காமல் இடப்புற நாசி வழியே காற்றை வெளியிட வேண்டும். இவ்வாறாக மாறிமாறி செய்வதால் சுவாசம் சுத்தமடையும்.  இச்செயலின் காலத்தில் அதிகமாக கோபப்படுதல், வேகமடைதல் போன்ற உணர்ச்சிகளுக்கு ஆளாக கூடாது. நிதானமும், அமைதியும் வேண்டும். காலை வேளையே இந்த பயிற்சிக்கு சரியானதாகும். 


3. இலக்கை நிர்ணயிக்கவும்


யோகா என்பது மனதையும் உடலையும் ஒருநிலைப்படுத்துவது. நீங்கள் மெடிட்டேஷன் செய்வதென்பது மனதை ஒருமுகப்படுத்துவது. அதற்கு உங்களுக்கு ஒரு இலக்கை நிர்ணயிப்பது அவசியம். அந்த இலக்கு தான் உங்களை மீண்டும் மீண்டும் மெடிட்டேஷனை நோக்கி ஈர்க்கும். இதற்கு உங்களை நீங்களே பழக்கப்படுத்துங்கள். உங்களிடம் நீங்களே கடுமை காட்டாமல் அந்த இலக்கை எட்ட முயற்சி செய்யுங்கள்.


4. யோகாவும் ஊட்டச்சத்தும்


யோகா செய்தபின்னர் உடனடியாக உணவு உண்ணக் கூடாது. குறைந்தது 2 மணி நேரத்திற்குப் பின்னரே உணவு உண்ண வேண்டும். அதுபோல் உணவருந்திய உடனேயும் யோகா செய்யக் கூடாது. மதிய உணவுக்கும் யோகா வகுப்புக்கும் இடையே குறைந்தது அரைமணி நேரம் இடைவேளை அவசியம் இருக்க வேண்டும்.


5. அர்ப்பணிப்பும் ஒழுங்கும் அவசியம்


யோகாவை செய்ய அர்ப்பணிப்பும் ஒழுங்கும் அவசியம். விடாப்பிடியாக அன்றாடம் பழக வேண்டும். அப்போது தான் அதன் பலன் முழுமையாகக் கிடைக்கும்.
 
6. மெடிட்டேஷன் என்பது உணர்தல்


மெடிட்டேஷன் என்பதை சில நுட்பம் மூலம் விளக்க முற்படுவதை விடுத்து அதனை வாழ்க்கை முறை என்று மாற்றிக்கொள்வதுதான் சிறந்தது. அப்படியான வாழ்க்கை முறையை பின்பற்றுபவர் தான் யோகி ஆகிறார்.