நம் உடல் உள்ளுறுப்புகள் தொடங்கி, சுரப்பிகள் வரை அனைத்தும் சீராக செயல்பட வேண்டும். இல்லையெனில் உடலில் பிரச்சனை ஏற்படும். நீரிழிவு நோயும் அப்படியே! இன்சுலின் அளவு அதிகமாவது அல்லது அதில் ஏற்படும் சீரற்ற தன்மை ஆகியவற்றினால் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு அதிகரித்து நீரிழிவு நோய் ஏற்படுகிறது. இதை இயற்கையான முறையில் கட்டுக்குள் வைக்க உணவுக் கட்டுப்பாடு, உடற்பயிற்சி உதவும் என்பது பரிந்துரைக்கப்படுகிறது. 


அடிக்கடி சிறுநீர் கழித்தல், எப்போதும் பசி ஏற்படுவது அல்லது ஏதாவது சாப்பிட வேண்டும் என்ற உணர்வு, தண்ணீர் அதிகமாகக் குடிப்பது, எப்போதும் சோர்வாக இருப்பது போல உணர்தல் ஆகிய அறிகுறிகள் இருந்தால் மருத்துவரை அணுகுவது நல்லது. 


வீட்டில் உள்ள மசாலா பொருளான கிராம்பு நீரிழிவு நோயை எப்படி கட்டுப்படுத்த உதவும் என்பது பற்றி ஊட்டச்சத்து நிபுணர்கள் தெரிவிப்பதை காணலாம். கிராம்பு உணவுப் பொருட்களில் பயன்படுத்தப்படும் ஒன்று. இதில் ஏராளமான மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன. கிராம் டீ குடிப்பது இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை சீராக இருக்க உதவும்.


செரிமான மண்டலத்தின் ஆரோக்கியம் மேம்படும்:


குடல் ஆரோக்கியமான இருந்தால் உடல்நலனும் அதற்கேற்றவாறு இருக்கும். நீரிழிவு நோய் பாதிக்கப்பட்டிருப்பவர்களுக்கு செரிமான மண்டலம் சீராக இயங்காது. இதனால், இரத்தில் உள்ள சர்க்கரை அளவில் உங்களுக்கு மாற்றம் ஏற்படும். Centre For Disease Control And Prevention-ன் கூற்றுப்படி, சீரற்ற இரத்த சர்க்கரை அளவு வயிற்று பகுதியில் உள்ள நரம்புகளில் பாதிப்பை ஏற்படுத்தில் செரிமானத்தை தாமதப்படுத்திவிடும். இதை தடுக்க கிராம்பு டீ குடிப்பது நல்லது. 


கிராம் ஆன்டி-ஆக்ஸிடண்ட் நிறைந்தது. இது நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில் அதற்கு உதவும். ஃப்ரி ராடிகல் இருந்து உடலில் ஏற்படும் பாதிப்புகளை தவிர்க்க உதவும்.


கிராம்பு டீ இன்சுலின் சென்சிடிவிட்டை அதிகரிக்கும். இது நீரிழிவு பாதிக்கப்பட்டவர்களுக்கு இருந்து ஓர் நிலையாகும். இதனை தடுக்க தினமும் கிராம்பு டீ குடிக்கலாம்.


எப்படி தயாரிப்பது?


தேவையான கிராம்புகளை மிக்ஸி ஜாரில் போட்டு பொடியாக அரைத்து காற்று புகாத டப்பாவில் ஸ்டோர் செய்து வைக்கலாம். கிராம் டீ தயாரிக்க ஒரு டம்பளர் தண்ணீரில் ஒரு டீ ஸ்பூன் கிராம் பொடி சேர்த்து 10 நிமிடங்கள் நன்றாக கொதிக்க வைக்கவும். அதை வடிக்கட்டி தேன் கலந்து குடிக்கலாம்.


சீரான தூக்கம்:


10-3-2-1-0 பார்முலா:


ஃபிட்னஸ் கோச் Martolia, நிம்மத்தியான தூக்கத்திற்கு சொல்லும் டிப்ஸ்கள் இவை:


தூங்க செல்வதற்கு 10 மணி நேரத்திற்கு முன்பு காஃபின் உணவுகளுக்கு நோ சொல்வது, தூங்குவதற்கு 3 மணி நேரத்திற்கு முன்பு இரவு உணவை சாப்பிடுவது, தூங்குவதற்கு 2 மணி நேரத்திற்கு முன்பு அலுவல் சார்ந்த பணிகளை 2 மணி நேரத்திற்கு முன்னதாவே முடித்து கொள்வது, படுக்கைச் செல்வதற்கு 1 மணி நேரம் முன்னதாகவே எல்க்ட்ரானிஸ் கேட்ஜட்களைத் தவிர்ப்பது, உள்ளிட்டவற்றை பின்பற்ற வேண்டும். இதன் மூலம் நிம்மத்தியாக தூங்கலாம். இதை பழக்கமாகவும் மாற்றிகொள்ளலாம்.


ஒழுங்கான வாழ்க்கை முறை இல்லாதது, சரியான உடல் இயக்கம் இல்லாதது ஆகியவற்றினால் தூக்கம் பாதிக்கப்படும். இரவு நேரத்தில் அதிக நேரம் தொலைக்காட்சி பார்ப்பது, மொபைல் பார்ப்பது உள்ளிட்ட எல்க்ட்ரானிக் கேஜட்களைப் பார்த்துக்கொண்டிருந்தாலும் தூக்கம் வருவதில் சிக்கல்கள் இருக்கும்.