பதப்படுத்தப்பட்ட உணவுகள் , கெமிக்கலின் ஆக்கிரமிப்பு என வளர்ந்து வரும் நாகரீக உலகம் உணவில் நாள்தோறும் நச்சுகளை சுமந்து வருகிறது. விளைவு உடல் பருமன் மற்றும் சர்க்கரையின் அளவு அதிகரிப்பு. இந்த நோய் தற்போது இளம் வயதினரையும் தாக்கும் ஒன்றாக இருக்கிறது. இதனை தடுக்க வேண்டுமானால் முதலில் நமது அன்றாட பழக்க வழக்கங்களில் மாற்றங்கள் வேண்டும் என்கிறது சில ஆய்வுகள். அப்படி எதில் மாற்றங்களை செய்ய வேண்டும்.
உணவு
ஜங் ஃபுட் என சொல்லக்கூடிய உணவுகளை தவிர்த்து, அதிக அளவில் காய்கறி மற்றும் பழங்களை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். ஊட்டச்சத்து மிக்க தானியங்களை அதிக அளவில் சேர்த்துக்கொள்ளுங்கள். குறைந்த கொழுப்பு கொண்ட பால் பொருட்களை பயன்படுத்துவது சிறந்தது. இது தவிர பீன்ஸ் மற்றும் பட்டாணி போன்ற பருப்பு வகைகளை அதிகமாக உணவில் சேர்த்துக்கொள்வது அவசியம்.
சர்க்கரை மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகள் :
உடலில் ஏற்படும் அதிக அளவிலான பாதிப்புகள் வெள்ளை சர்க்கரையால்தான் ஏற்படுகிறது என்கிறது சில ஆய்வுகள். குறிப்பாக உடல் எடை அதிகரிப்பதற்கான காரணமே சர்க்கரைதான். எனவே கடையில் வாங்கும் பொருட்களான கேக் , கூல் ட்ரிங்ஸ், சோடா போன்ற பொருட்களில் சர்க்கரையின் அளவு அதிகமாக இருக்கும் . அதனை பயன்படுத்தாமல் பழ ஜூஸ் போன்றவற்றை மாற்றாக பயன்படுத்தலாம்.
புகைபிடிப்பதை நிறுத்துதல்
புகைப்பிடிப்பதை நிறுத்துவதால் ஏகப்பட்ட நன்மைகள் இருந்தாலும் புகைபிடித்தல் நீரிழிவு நோயின் அபாயத்தை அதிகரிக்கிறது என்கிறது பிரிட்டிஷ் ஆய்வு ஒன்று. வழக்கமாக நீரிழிவு நோயாளிகள் சந்திக்கும் பிரச்சனைகளை விட, புகைப்பிடிப்பவர்கள் சந்திக்கும் அறிகுறிகள் அதிகமாக இருக்குமாம். எனவே அதனை நிரந்தரமாக கைவிடுவது சிறப்பானதாக இருக்கும் . புகைப்பிடிப்பதை நிறுத்தினால் உடல் எடை சற்று அதிகரிக்கும். ஆனால் நீங்கள் எடை குறைவதை விட பல நன்மைகள் புகைப்பதால் கிடைக்கிறது. சர்க்கரை நோய், இதய நோய் மற்றும் சில வகையான புற்றுநோய்களின் அபாயத்தை நீங்கள் குறைக்கிறீர்கள் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.
உடற்பயிற்சி :
நாள் ஒன்றுக்கு ஒரு நாளைக்கு 20 நிமிடங்கள் நடைபயிற்சி அல்லது உடற்பயிற்சி செய்தல் நல்லது. டைப் 2 நீரிழிவு நோயாளிகள் பொதுவாக எடை இழப்பை ஊக்குவிப்பதற்காக ஒரு நாளைக்கு 1,500 முதல் 1,800 கலோரிகளை உணவில் சேர்த்துக் கொள்கிறார்கள், பின்னர் சிறந்த உடல் எடையை பராமரிக்கிறார்கள். இருப்பினும், இது நபரின் வயது, பாலினம், செயல்பாட்டு நிலை, தற்போதைய எடை மற்றும் உடல் பாணியைப் பொறுத்து மாறுபடும். அதேபோல உடல் பருமன் அதிகம் இருப்பவர்களுக்கு உடற்பயிற்சி எவ்வளவு கைக்கொடுக்கும் என்பதை நான் சொல்லி தெரிய வேண்டியதில்லை.